இறுதி நேர கோல்களால் பொலிஸ் அணி காலிறுதிக்கு தகுதி

221

சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற வான்டேஜ் FA கிண்ண சுற்றுப்போட்டியில் நீர்கொழும்பு யூத் கால்பந்துக் கழகத்திற்கு எதிரான காலிறுதிக்கு முன்னைய போட்டியில் கடைசி நேர கோல்கள் மூலம் பொலிஸ் விளையாட்டுக் கழகம் 3-1 என வெற்றி பெற்றது.  

சனிக்கிழமை (03) நடைபெற்ற போட்டியின் ஆரம்பத்தில் நீர்கொழும்பு யூத் ஆதிக்கம் செலுத்த பொலிஸ் சற்று தடுமாற்றம் கண்டது. எனினும் உத்வேகத்தை அதிகரித்துக் கொண்ட பொலிஸ் கழகம் போட்டியில் முதல் கோல் வாய்ப்பொன்றை பெற்றுக் கொண்டது. எனினும் மொஹமட் சுபைக் உதைத்த பந்து பலவீனமாக இருந்தது.

விமானப்படைக்கு எதிராக வித்தை காண்பித்த இளம் ரினௌன் காலிறுதியில்

வான்டேஜ் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முன்னைய சுற்றில் விமானப்படை அணிக்கு எதிரான போட்டியை 4-0 என்ற…

இதனை அடுத்து நீர்கொழும்பு யூத்தின் சாருக்க பெர்னாண்டோ கோலை நோக்கி உதைத்தபோது எதிரணி பின்கள வீரர்கள் அந்த பந்தை திசைதிருப்பியதோடு கோல்காப்பாளர் மஹேந்திரன் தினேஷினால் அதனை தடுக்க முடிந்தது.

பொலிஸ் முன்கள வீரர் ரிப்தான் மொஹமட் பந்தை எதிரணி பெனால்டி எல்லைக்குள் பெற்று, கோல் காப்பாளரை ஏமாற்றி பந்தை கடத்திச் சென்று கோலை நோக்கி அதனை செலுத்தி தனது அணியை 22ஆவது நிமிடத்தில் முன்னிலை பெறச் செய்தார்.  

எனினும், 35 ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்குள் கமால் சில்வா தள்ளப்பட்டதை அடுத்து நடுவர் நீர்கொழும்பு யூத் அணிக்கு பெனால்டி கொடுத்தது பொலிஸ் வீரர்களிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

கடற்படை அணியின் முன்னாள் தலைவரும் தற்போது நீர்கொழும்பு யூத் அணிக்கு இணைந்திருப்பவருமான கிறிஸ்டின் பெர்னாண்டோ அந்த பெனால்டி வாய்ப்பை உதைத்து கோல் ஒன்றை பெற்றார். இந்த உதை பொலிஸ் கோல்காப்பளரின் கையில் பட்டுக்கொண்டே வலைக்குள் சென்றது. இதன்மூலம் நீர்கொழும்பு யூத் போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்தது.

முதல் பாதி: பொலிஸ் வி.க. 1 – 1 நீர்கொழும்பு யூத் கா.க.

முதல் பாதி முடிவுற்றபோது கடும் மழை ஆரம்பித்ததோடு மைதானம் சேறும் சகதியுமாக மாறிய நிலையிலும் போட்டி தொடர்ந்தது. ரிப்தான் நீர்கொழும்பு யூத் பெனால்டி எல்லைக்கு பந்தை கடத்தி சென்று கோலை நோக்கி உதைத்தபோதும் அது வெளியால் பறந்து சென்றது.

Photos: Police SC vs Negombo Youth | Round of 16 | Vantage FA Cup 2018

ThePapare.com | Viraj Kothalawala | 04/11/2018 Editing and re-using images without permission of ThePapare.com will be…

30 யார்ட் தூரத்தில் இருந்து கமால் சில்வா பந்தை உதைத்தபோது நீர்கொழும்பு யூத் போட்டியில் முன்னிலை பெறும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. எனினும் அந்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

இந்நிலையில் இரு அணிகளினதும் மத்தியகள வீரர்கள் வாய்ப்புகளை உருவாக்குதில் தடுமாற்றம் காண போட்டி மந்தமடைந்தது. அப்போது மற்றொரு முயற்சியும் கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. இந்தமுறை பொலிஸுக்காக தொலைவில் இருந்த சதுர குணரத்ன உதைத்த பந்தை நவரத்ன பாய்ந்து தடுத்தார்.  

போட்டியின் 7 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது, நீர்கொழும்பு தரப்பின் பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து ப்ரீ கிக் வாய்ப்பைக் கொண்டு அனுபவ வீரர் சத்துர குணரத்ன தீர்க்கமான கோல் ஒன்றை போட பொலிஸ் முன்னிலை பெற்றது.  

போட்டியை சமப்படுத்தும் அவசரத்தில் நீர்கொழும்பு யூத் வீரர்கள் அனைவரும் எதிரணி கோல் எல்லையை ஆக்கிரமிக்க முயன்றனர். இதனை பயன்படுத்திக் கொண்ட ரிப்தான் மற்றும் ரியாஸ் அஹமட் நீர்கொழும்பு யூத் தற்காப்பு அரணை முறியடித்து பந்தை செலுத்த, எந்த நெருக்கடியும் இன்றி அஹமட் கோல் பெற்று பொலிஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

எனவே, இரண்டாவது பாதியின் இறுதித் தருவாயில் பெறப்பட்ட மேலதிக இரு கோல்களினால் பொலிஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று வான்டேஜ் எப்.ஏ கிண்ண தொடரின் காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

முழு நேரம்: பொலிஸ் வி.க. 3 – 1 நீர்கொழும்பு யூத் கா.க.

கோல் பெற்றவர்கள்

பொலிஸ் வி.க. – ரிப்தான் மொஹமட் 22′, சத்துர குணரத்ன 83′, ரியாஸ் அஹமட் 89′

நீர்கொழும்பு யூத் கா.க. – கிறிஸ்டீன் பெர்னாண்டோ 35′

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

நீர்கொழும்பு யூத் கா.க. – துவான் ரும்லான் 18′, மொஹமட் ரமீஸ் 89′, கமால் சில்வா 90′ ராஜரத்னம் மேனன் 90+2′