எப்.ஏ. கிண்ண மட்டக்களப்பு லீக் சம்பியனாக ஏறாவூர் இளந்தாரகை

363

இந்தப் பருவகாலத்திற்கான (2019) வன்டேஜ் எப்.ஏ. கிண்ண கால்பந்து தொடரில், மட்டக்களப்பு கால்பந்து லீக் சம்பியன்களாக ஏறாவூர் இளந்தாரகை (YSSC) விளையாட்டு கழகம் நாமம் சூடியுள்ளது. 

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற மட்டக்களப்பு கால்பந்து லீக்கின் எப்.ஏ. கிண்ண இறுதிப் போட்டியில் டச் பார் சென். இக்னேஸியஸ் விளையாட்டு கழக அணியினை 2-1 என்கிற கோல்கள் கணக்கில் வீழ்த்தியே ஏறாவூர் இளந்தாரகை விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டம் சூடியிருக்கின்றது.

ஏறாவூர் நகரசபை அணியை வீழ்த்தி சம்பியனான மண்முனை வடக்கு அணி

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் மண்முனை…

மிகவும் பரபரப்பிற்கு மத்தியில் ஆரம்பித்த இந்த இறுதிப் போட்டிக்கு, அரையிறுதிப் போட்டியில் ஏறாவூர் இளந்தாரகை அணி மட்டக்களப்பு யங் ஸ்டார் அணியினை 1-0 என்கிற கோல்கள் கணக்கில் தோற்கடித்து தெரிவாகியது.

மறுமுனையில் சென். இக்னேஸியஸ் அணி அரையிறுதிப் போட்டியில் மட்டக்களப்பு ரட்னம் விளையாட்டு கழகத்தினை 4-1 என்கிற கோல்கள் கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பினை பெற்றது.

இறுதிப் போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் ஏறாவூர் இளந்தாரகை அணியினரே ஆதிக்கம் செலுத்தினர். எனினும், சென். இக்னேஸியஸ் அணியும் சிறப்பான கவுன்டர் தாக்குதல்களுடன் போட்டியில் தொடர்ந்து முன்னேறியது.

சிறிது நேரத்தில் போட்டியின் ஆதிக்கத்தை தம்வசம் எடுத்துக் கொண்ட சென். இக்னேஸியஸ் அணி போட்டியின் முதல் கோலினைப் பெற்றது. சென். இக்னேஸியஸ் அணியின் சார்பில் முதல் கோலினை ரெமோசன் ராகல் போட்டியின் 31ஆவது நிமிடத்தில் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து முன்னேறிய ஆட்டத்தில் ஏறாவூர் இளந்தாரகை அணி மொஹமட் முஸ்தாக் மூலம் தமது முதல் கோலினைப் பெற்றுக் கொண்டது. முஸ்தாக் போட்டியின் 35ஆவது நிமிடத்தில் முதல் கோலினை பெற்றுக் கொண்டார்.

Photos: St. Ignatius SC vs Eravur Young Star SC | Batticaloa League Final | Vantage FA Cup 2019

ThePapare.com | Mohamed Alishiyam | 30/06/2019 Editing and re-using images without…

இதன் பின்னர் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாத நிலையில், போட்டியின் முதற்பாதி இரண்டு அணிகளும் சம கோல்கள் பெற்ற நிலையில் நிறைவுக்கு வந்தது.

முதற்பாதி: சென். இக்னேஸியஸ் வி.க 01 – 01 ஏறாவூர் இளந்தாரகை வி.க 

பின்னர் போட்டியின் இரண்டாம் பாதி மெதுவாக முன்னேறியது. இரண்டாம் பாதி தொடங்கி சிறிது நேரத்திலேயே (53ஆவது நிமிடத்தில்) ஏறாவூர் இளந்தாரகை அணியினால் இன்னுமொரு கோல் பெறப்பட்டது. இந்த கோலினை, அணிக்காக K. முரளிதரன் பெற்றுத்தந்தார். 

இதனை அடுத்து போட்டியின் இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் இரண்டு அணிகளும் கோல்கள் பெற முயற்சித்து அவை வீணாக, ஏறாவூர் இளந்தாரகை அணி ஏற்கனவே பெற்றுக் கொண்ட கோல்களுடன் போட்டியின் வெற்றியாளர்களாக மாறியது.  

முழு நேரம்: சென். இக்னேஸியஸ் வி.க 01 – 02 ஏறாவூர் இளந்தாரகை வி.க

கோல் பெற்றவர்கள்

இக்னேஸியஸ் வி.க – ரெமோசன் ராகல் 31’

ஏறாவூர் இளந்தாரகை வி.க – மொஹமட் முஸ்தாக் 35’,  K. முரளிதரன் 53’

>>மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க<<