பெரும் மோதல்களைக் கொண்ட Vantage FA கிண்ண 16 அணிகள் சுற்று

92
Vantage FA Cup Football

தற்பொழுது இலங்கை கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Vantage FA கிண்ண கால்பந்து தொடரின் 16 அணிகள் சுற்றில் ஆடும் அணிகளின் விபரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னணி ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எபோனி ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்தின் பூரண அனுசரணையில் இடம்பெறும் 2019ஆம் ஆண்டுக்கான Vantage FA கிண்ண கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. 

இந்நிலையில், தொடரின் 16 அணிகள் சுற்றுக்கான அணிகளை பிரிக்கும் குலுக்கல் நிகழ்வு இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் இன்று (17) இடம்பெற்றது. 

ஏற்கனவே ஆரம்பமாகியுள்ள 32 அணிகள் சுற்றுக்கான போட்டிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையாத நிலையிலேயே 16 அணிகள் சுற்றுக்கான குலுக்கல் இடம்பெற்றது. 32 அணிகள் சுற்றில் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் இந்த வார இறுதியில் இடம்பெறவுள்ளன. 

இந்த குலுக்கலுக்கு அமைவாக, எப். ஏ கிண்ணத்தின் நடப்புச் சம்பியன்களான டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம், இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை இந்த சுற்றில் எதிர்கொள்ளவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இறுதியாக இடம்பெற்ற எப். ஏ கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டியில் மோதின. குறித்த போட்டியில் டிபெண்டர்ஸ் வீரர்கள் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். 

அதேபோன்று, கடந்த முறை இரண்டாம் இடம்பெற்ற சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம், 32 அணிகள் சுற்றில் மோதவுள்ள ஜாவா லேன் மற்றும் சொலிட் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதவுள்ளது. 

டயலொக் சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் ஆடும் இரு அணிகளான புளு ஸ்டார் மற்றும் அப் கன்ட்ரி லயன்ஸ் ஆகியன இந்த சுற்றில் மோதவுள்ளன. 

32 அணிகள் சுற்று விபரம் 

அணி 1  அணி 2
டிபெண்டர்ஸ் கா.க இலங்கை பொலிஸ் வி.க 
ரெட் ரொபின்ஸ் வி.க / நியு யங்ஸ் கா.க   செரண்டிப் கா.க / சிறைச்சாலை வி.க 
சோண்டர்ஸ் வி.க ஜாவா லேன் வி.க / சொலிட் வி.க
நியு ஸ்டார் வி.க / யங் ஸ்டார் வி.க  கொழும்பு கா.க / ரினௌன் கா.க
லிவர்பூல் வி.க / பாடும் மீன் வி.க   சீஹோக்ஸ் கா.க / இமாயன் மத்தி வி.க
ரெட் ரோஸ் வி.க  சிவில் பாதுகாப்பு வி.க
ரெட் சன் வி.க / புனித நிக்கீலர் வி.க புளு ஈகல் வி.க / சரிகமுல்ல யூத் வி.க
புளு ஸ்டார் வி.க  அப் கன்ட்ரி லயன்ஸ் வி.க

32 அணிகள் சுற்றில் நிறைவடைந்துள்ள போட்டிகளின் முடிவுகள் 

  • டிபெண்டர்ஸ் கா.க 8 – 0 கோல்டன் ரைஸ் வி.க 
  • புளு ஸ்டார் வி.க 0 (4) – (3) 0 ரெட் ஸ்டார் வி.க 
  • அப் கன்ட்ரி லயன்ஸ் வி.க 2 – 0 க்ரேட் ஸ்டார் வி.க 
  • இலங்கை பொலிஸ் வி.க 2 – 1 SLTB வி.க 
  • சிவில் பாதுகாப்பு வி.க 3 (5) – (4) 3 ஜமாலியா வி.க 
  • சோண்டர்ஸ் வி.க 4 – 1 மாவனெல்லை யுனைடட் வி.க 
  • ரெட் ரோஸ் வி.க 4 – 1 சுபர் பீச் வி.க