”வடக்கின் கில்லாடி யார்?” இறுதிப் போட்டியில் இளவாலை யங் ஹென்றீசியன்ஸ்

626

Thepapare.comஇன் ஊடக அனுசரணையில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாடி யார்?” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தை பெனால்டியில் வீழ்த்திய இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் விளையாட்டுக் கழகம் தொடரின் இறுதிப் போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்தது.  

யாழின் முன்னணி அணிகளுள் ஒன்றான இளவாலை யங் ஹென்றீசியன்ஸ் அணியினர் அச்செளு வளர்மதி அணியினரை வெற்றிகொண்டும் மறுபக்கம், FA கிண்ண சுற்றுத் தொடரின் இறுதி 16 அணிகளுள் நுழைந்திருக்கும் இரு வட மாகாண அணிகளுள் ஒன்றான கிளிநொச்சி உருத்திரபுரம் அணி, கிளிநொச்சி உதயதாரகை அணியுடனான வெற்றியுடனும் அரையிறுதிப் போட்டியில் நுழைந்திருந்தன.  

வளர்மதி கழகத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்த யங் ஹென்றீசியன்ஸ்

Thepapare.com ஊடக அனுசரணையில் அரியாலை …

அரியாலை கால்பந்து பயிற்சி நிலைய மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 3ஆவது நிமிடத்தில் உருத்திரபுரம் அணியின் தேனுஜன் ஹெடர் மூலம் கோல் ஒன்றினைப் போட்டு, போட்டியின் ஆரம்பத்திலேயே தமது அணியினை முன்னிலைப்படுத்தினார்.  

இளவாலை வீரர் தனேஸ் இடது பக்கத்திலிருந்து கோலினை நோக்கி உதைந்த பந்து கோல் காப்பாளரின் கைகளில் பட்டு வெளியேறியது.  

14ஆவது நிமிடத்தில் மின்றோன் கோல் நோக்கி உதைந்த பந்து கோல்காப்பாளரின் கைகளில் பட்டு வெளியேறியது. அதன் மூலம் கிடைத்த கோணர் உதையினை தனேல் கோல் நோக்கி உதைய, ஹென்றீசியன் வீரர்கள் ஹெடர் செய்த பந்து கம்பத்தில் பட்டு வெளியேற, மீண்டும் செந்தூரன் அந்த பந்தினை கோலாக மாற்றி ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார்.  

போட்டியின் 17ஆவது நிமிடத்தில் உருத்திரபுரம் அணி வீரரினை பெனால்டி எல்லைக்குள் முறையற்ற விதத்தில் வீழ்த்தியமையால், அவ்வணிக்கு பெனால்டி கிடைக்கப் பெற்றது. கிடைக்கப்பெற்ற பெனால்டியினை ஹரிசன் நேர்த்தியாக கோலாக்கினார்.  

பின்னர், 26ஆவது நிமிடத்தில் யங் ஹென்றீசியன்ஸ் வீரர் ஞானரூபன் வினோத் பெனால்டி எல்லைக்கு அருகிலிருந்து கோலினை நோக்கி உதைந்த பந்தினை கோல்காப்பாளர் தடுத்தார்.  

மேலும் 5 நிமிடங்களில் உருத்திரபுரம் அணியின் தேனுசன் உதைந்த பந்தினை யங் ஹென்றீசியன்ஸ் கோல்காப்பாளர் அமல்ராஜ் சேகரித்தார். மீண்டும், 36ஆவது நிமிடத்தில் பிரதீஸ் ஹெடர் மூலம் உள்ளனுப்பிய பந்தினையும்  அமல்ராஜ் தடுத்தார்.  

Photos: Vadakkin Killadi Yaar??? Football Tournament | Day 09 Matches

Photos: Vadakkin Killadi Yaar??? Football Tournament | Day 09 …

40ஆவது நிமிடத்தில் உருத்திரபுரம் அணியின் மற்றொரு முயற்சியாக  இடது பக்கத்திலிருந்து அனுப்பப்பட்ட பந்தினை, பிரதீஸ் மேலும் ஒரு சிறந்த முயற்சியாக கோல் கம்பத்தின் வலது பக்கத்தினை நோக்கி உதைய அதையும் அமல்ராஜ் தடுத்தார்.

முதல் பாதியில், 44ஆவது நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து லாவகமாக பந்தினை கோல் நோக்கி எடுத்துச் சென்ற ஞானரூபன் வலது பக்கத்திலிருந்த எமில்ரூபனிற்கு பந்தினை வழங்க, அவர் அதனை சிறப்பாக கோலாக்கினார்.  

விறுவிறுப்பாக இடம்பெற்ற முதல்பாதியாட்டம் ஹென்றீசியன்ஸ் பெற்றுக்கொண்ட கோலுடன் நிறைவிற்கு வந்தது.

முதல் பாதி: யங் ஹென்றீசியன்ஸ் வி.க 02 – 02 உருத்திரபுரம்  வி.க

இடண்டாவது பாதியாட்டத்தின் 4ஆவது நிமிடத்தில் மின்றோன் சக வீரர் தனேஸிற்கு வழங்கிய பந்தினை தனேஸ் அதே வேகத்தில் கோலினை நோக்கி உதைந்தார். பந்து கம்பத்திற்கு மேலால் வெளியேறியது.

மிகவும் பரபரப்பாக இடம்பெற்றுக்கொண்டிருந்த இரண்டாவது பாதியாட்டத்தின் 66ஆவது நிமிடத்தில் பிரதீஸிடமிருந்து பந்தினைப் பெற்ற தேனுஜன் கோலாக்குவதற்கு முயற்சி செய்தபோதும் ஹென்றீசியன்ஸின் பின்கள வீரர்கள் தடுத்தனர்.

“வடக்கின் கில்லாடி யார்?” அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள றோயல், உருத்திரபுரம் அணிகள்

Thepapare.com ஊடக அனுசரணையில் அரியாலை …

அடுத்த நிமிடத்திலேயே பின்களத்திலிருந்து பந்தினை நகர்த்தி வந்த ஹென்றீசியன்ஸின் டிலக்ஸன், எமில்றூபனிற்கு பந்தினை வழங்க கோல்காப்பாளரின் கைகளிற்குள் பந்தினை உதைந்தார் எமில்றூபன்.

69ஆவது நிமிடத்தில் உருத்திரபுரம் அணியினருக்கு கிடைத்த ப்ரீ கிக்கினை பிரதீஸ் கோலினை நோக்கி உதைய அமல்ராஜ் அதனை தடுத்தார்.

அடுத்த நிமிடத்திலேயே உருத்திரபுரம் அணியின் பெனால்டி எல்லையுள் ஞானரூபன் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட, ஹென்றீசியன்ஸிற்கு பெனால்டி கிடைக்கப்பெற்றது. அதனை கோல்கம்பத்திற்கு வெளியே உதைந்து வீணடித்தார் ஞானரூபன்.  

30ஆவது நிமிடத்தில் உருத்திரபுரம் அணியின் தேனுசனினை நோக்கி மத்திய களத்திலிருந்து வழங்கப்பட்ட பந்தினை டிலக்சன் தடுப்பதற்கு முயற்சித்து பந்தினை தவற விட்டார். தேனுசனின் இரண்டாவது முயற்சிக்கு முன்னர் சுதாகரித்துக் கொண்ட அமல்ராஜ் பந்தினை சேகரித்தார்.

வேகமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஹென்றீசியனின் கோல்பரப்பினை ஆக்கிரமித்த உருத்திரபுர வீரர்கள் அடுத்தடுத்து இரண்டு ப்ரீ கிக் வாய்ப்புக்களை பெற்றுக்கொண்டபோதும் எவையும் சாதகமாக நிறைவு செய்யப்படவில்லை.

Photos: Vadakkin Killadi Yaar??? Football Tournament | Day 08 Matches

Photos: Vadakkin Killadi Yaar??? Football Tournament | Day 08 …

போட்டியின் 85ஆவது நிமிடத்தில் இடது பக்கத்திலிருந்து தனேஸ் ஞானரூபனை நோக்கி பந்தினை உதைய, அதனை கோலாக்குவதற்காக ஞானரூபன் வேகமாக எத்தணிக்கையில் பந்து அவரது கைகளில் பட இறுதி வாய்ப்பும் நழுவியது.

விறுவிறுப்பாக இடம்பெற்ற ஹென்றீசியன்ஸ், உருத்திரபுரம் அணிகளிடையிலான போட்டி சமநிலையில் நிறைவிற்கு வந்தது.

முழு நேரம்: யங் ஹென்றீசியன்ஸ் வி.க 02 – 02 உருத்திரபுரம்  வி.க

தொடர்ந்து இடம்பெற்ற சமநிலை தவிர்ப்பு உதையில் 04 – 02 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற இளவாலை யங்ஹென்றீசியன்ஸ் அணியினர்வடக்கின் கில்லாடி” பட்டத்தினை தமதாக்குவதற்கான இறுதி மோதலில் தமது பெயரினை உறுதிசெய்துள்ளனர்.  

ஆட்டநாயகன்அமல்ராஜ் (யங் ஹென்றீசியன்ஸ் வி.)

கோல் பெற்றவர்கள்

யங் ஹென்றீசியன்ஸ் வி.செந்தூரன் 14, எமில்ரூபன் 44′

உருத்திரபுரம் வி.தேனுஜன் 3’, ஹரிசன்17’

வடக்கின் கில்லாடி யார்?” சுற்றுப் போட்டியில் யங் ஹென்றீசியன்ஸ் அணியினை எதிர்த்து மோதவுள்ள போட்டியாளரினை தேர்வு செய்வதற்கான இரண்டாவது அரையிறுதிப்போட்டி நாளை (04) இடம்பெறவுள்ளது.

இந்த மோதலில் நடப்புச் சம்பியன்களான குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து ஊரெளு றோயல்  விளையாட்டுக்   கழகம் போட்டியிடவுள்ளது. தொடரின் இறுதிப் போட்டி இம்மாதம் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும், மூன்றாவது இடத்திற்கான போட்டி சனிக்கிழமையும் இடம்பெறவுள்ளன.   

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…