தேசிய விளையாட்டு விழா கயிறு இழுத்தலில் ஊவா, மேல் மாகாணங்கள் சம்பியன்

156

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 44ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கயிறு இழுத்தல் போட்டிகளின் ஆண்கள் பிரிவில் ஊவா மாகாணமும், பெண்கள் பிரிவில் மேல் மாகாணமும் சம்பியன்களாகத் தெரிவாகயிருந்தன. இதில், பெண்கள் பிரிவில் மூன்றாவது இடத்தை வட மாகாண அணி பெற்றுக்கொண்டது.

இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் கயிறு இழுத்தல் போட்டிகள் கொழும்பு டொரின்டன் மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை (01) ஆரம்பமாகியது. இதில், ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த 18 கயிறு இழுத்தல் அணிகள் பங்கேற்றிருந்தன.

ஒரே நாளில் 3 இரட்டைச் சாதனைகள்; வட மாகாணத்துக்கு மேலும் 3 பதக்கங்கள்

34 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு..

இதன்படி, இம்முறை போட்டிகளில் மிகவும் விறுவிறுப்பை ஏற்படுத்தியிருந்த ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் ஊவா மற்றும் மேல் மாகாண அணிகள் மோதின. இதன் முதல் சுற்றை மேல் மாகாண அணி இலகுவாக வெற்றி கொண்டது.

எனினும், போட்டியின் 2ஆவது, 3ஆவது சுற்றுக்களில் மேல் மாகாண அணிக்கு ஊவா மாகாண அணியினர் பலத்த சவாலைக் கொடுத்திருந்தனர். இறுதியில், கடுமையான போட்டிக்குப் பிறகு 2 சுற்றுக்களையும் வெற்றிக் கொண்ட ஊவா மாகாண அணி, இம்முறை தேசிய விளையாட்டு விழா சம்பியனாகத் தெரிவாகியது.

இந்த நிலையில், தென் மாகாண அணியை 2-0 என வீழ்த்திய வட மத்திய மாகாண அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

இதேநேரம், பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் வட மேல் மாகாண அணியும், மேல் மாகாண அணியும் போட்டியிட்டிருந்ததுடன், இதில் 2-0 என்ற சுற்றுக்கள் அடிப்படையில் மேல் மாகாண அணி இலகு வெற்றியைப் பதிவுசெய்தது.

இதேவேளை, மூன்றாவது இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் கிழக்கு மாகாண அணியை 2-0 என்ற சுற்றுக்களின் அடிப்படையில் வீழ்த்தி வட மாகாண அணி வெற்றி பெற்றது.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<