உஸ்மான் கவாஜாவை நீக்கிய அவுஸ்திரேலிய

58
Usman Khawaja
@Getty Images

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டிக்கான 12 பேர் அடங்கிய தமது வீரர்கள் குழாத்தினை இன்று (3) அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணியில் வாய்ப்பினை இழந்த ஜேம்ஸ் அன்டர்சன்

முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ்…

அந்தவகையில் நாளை (4) மன்செஸ்டர் நகரில் இடம்பெறவுள்ள, ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரரான உஸ்மான் கவாஜா நீக்கப்பட்டிருக்கின்றார். இதேவேளை வேகப்பந்து நட்சத்திரமான மிச்செல் ஸ்டார்க் அவுஸ்திரேலிய அணிக்கு மீள அழைக்கப்பட்டிருக்கின்றார்.  

உஸ்மான் கவாஜா நீக்கப்பட்ட நிலையில் அவரின் இடத்தினை அவுஸ்திரேலிய அணியில் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் தலை உபாதை காரணமாக ஆடாது போயிருந்த ஸ்டீவ் ஸ்மித் எடுத்துக் கொள்கின்றார். 

இந்தப் பருவகாலத்திற்கான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் ஆடியிருக்கும் உஸ்மான் கவாஜா 20.33 என்கிற மோசமான துடுப்பாட்ட சராசரியினை காட்டியிருந்ததே, ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் அவர் இடம்பெறாமைக்கு பிரதான காரணமாக அமைகின்றது.  

முதல் T20I தோல்விக்கான பதிலடியை கொடுக்குமா இலங்கை?

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு..

அதேநேரம், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பிரதீயிடாக வந்து குறித்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைச்சதம் விளாசிய மார்னஸ் லபஸ்சக்னே, ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் தனது இடத்தினை  தொடர்ந்தும் தக்கவைத்திருக்கின்றார். 

இதேநேரம், உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளரான மிச்செல் ஸ்டார்க் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் வாய்ப்பினை பெற்றிருக்கின்ற போதிலும் அவுஸ்திரேலிய அணியின் மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான பீட்டர் சிடிலுடன் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இறுதி பதினொருவர் குழாத்தில் இடம்பெற போராட வேண்டிய நிலை ஒன்று காணப்படுகின்றது.  

இதேநேரம், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் ஆடிய வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் பட்டின்சனுக்கு ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஓய்வு வழங்கியுள்ளது. 

இறுதி ஓவரில் போட்டியை நழுவவிட்ட இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸின் அபார சதத்தோடு இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமநிலை செய்திருப்பதால் ஆஷஸ் கிண்ணத்தை தொடர்ந்தும் தக்கவைக்க அவுஸ்திரேலிய அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் காணப்படுகின்றது. 

நான்காவது ஆஷஸ் தொடரின் டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாம் 

டேவிட் வோர்னர், மார்கஸ் ஹர்ரிஸ், மார்னஸ் லபஸ்சக்னே, ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், மேட் வேட், டிம் பெய்ன் (அணித்தலைவர்), பேட் கம்மின்ஸ், பீடர் சிடில், மிச்செல் ஸ்டார்க், நதன் லயன், ஜோஸ் ஹேசல்வூட் 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<