பல்கலைக்கழக வலைப்பந்து கிண்ணம் யாழ். மங்கையர் வசம்

96
©Morasprit

அண்மையில் நிறைவுற்ற 13ஆவது இலங்கை பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் கீழ் நடத்தப்பட்ட வலைப்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு பல்கலைக்கழக (UOC) அணியை வீழ்த்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக (UOJ) அணி சம்பியன் பட்டத்தை வென்றது.  

தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் முதல் நாளில் வடக்கு வீரர்கள் அபாரம்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்ற ……….

ருஹுன பல்கலைக்கழக வளாகம் மற்றும் கோத்தவில விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இந்த தொடர் கடந்த ஓகஸ்ட் 29 ஆம் திகதி முடிவுற்றது. இதில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவைப் பல்கலைக்கழகம் (UOM) என்பன முறையே 3ஆம் மற்றும் 4ஆவது இடங்களை பிடித்தன.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் 25-24 என வெற்றியீட்டியதோடு மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு எதிரான மற்றைய அரையிறுதியில் கொழும்பு பல்கலைக்கழகம் 30-29 புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டியது

இறுதிப் போட்டியில் யாழ். பெண்களுக்கு எதிராக கொழும்பு பல்கலைக்கழகம் கடுமையாக போராடியபோதும் யாழ். வீராங்கனைகள் இறுதியில் 47-42 என்ற புள்ளிகளால் வெற்றியீட்டிக்கொண்டது. 3ஆவது இடத்திற்கான போட்டி ஒரு பக்க ஆட்டமாக இருந்தது. இதில் மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் 47-27 புள்ளிகளால் இலகு வெற்றியீட்டியது.  

தொடர் முடிவு

முதல் சுற்று

14 அணிகள் பங்கேற்ற முதல் சுற்றில் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற்றன.

அபிஷேக், எபனேசர் அசத்த யாழ் மத்தியை இலகுவாக வென்ற சென் ஜோன்ஸ்

யாழ் மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் 15 வயதுக்கு உட்பட்ட …….

குழு A –  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் (UOSJ), மொரட்டுவை பல்கலைக்கழகம் (UOM) மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் (UWU) பங்குபற்றிய குழு A போட்டிகளின் முடிவில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் 2 வெற்றிகளுடன் முதல் இடத்தை பிடித்தது   

போட்டி முடிவுகள்

  • UOSJ 32 – 21 UOM
  • UOSJ 36 – 06 UWU
  • UOM 42 – 18 UWU

குழு B – கொழும்பு பல்கலைக்கழகம் (UOC), சபரகமுவ பல்கலைக்கழகம் (SU) மற்றும் கற்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழத்திற்கு  (UVPA) இடையிலான முதல் சுற்றில் கொழும்பு பல்கலைக்கழகம் தோல்வியுறாத அணியாக முதலிடம் பிடித்தது.    

போட்டி முடிவுகள் 

  • UOC 31 – 16 SU
  • UOC 44 – 22 UVPA
  • SU 39 – 16 UVPA

குழு C – நான்கு அணிகள் கொண்ட இந்தக் குழுவில் களனி பல்கலைக்கழகம் (UOK), பேராதனை பல்கலைக்கழகம் (UOP), ருஹுன பல்கலைக்கழகம் (UOR) மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்கள் (EU) பங்கேற்றதோடு களனிப் பல்கலைக்கழகம் 3 போட்டிகளில் மூன்றிலும் வென்று முதலிடத்தை பிடித்தது

அகில இலங்கை வீதி ஓட்டத்தில் வவுனியாவின் நிசோபனுக்கு இரண்டாமிடம்

அகில இலங்கை பாடசாலைகள் வீதி ஓட்டப் போட்டியில் …

போட்டி முடிவுகள்

  • UOK 32 -20 UOP
  • UOK 31 -17 UOR
  • UOK 55 – 07 EU
  • UOP 40 – 09 EU
  • UOP 37 – 32 UOR
  • UOR 42 -10 EU

குழு D – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் (UOJ), வயம்ப பல்கலைக்கழகம் (WU), ரஜரட்ட பல்கலைக்கழகம் (RU) மற்றும் தென் கிழக்கு பல்கலைக்கழகங்கள் (SEU) பங்கேற்ற இந்த குழுவில் மூன்று வெற்றிகளுடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் முதலிடத்தை பிடித்தது.    

போட்டி முடிவுகள்

  • UOJ 22 – 10 SEU
  • UOJ 40 -18 RU
  • UOJ 37 -12 WU
  • WU 20 -15 SEU
  • WU 24 – 18 RU
  • SEU 24 – 11 RU

காலிறுதிகள்

ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், UOM, UOC, SU, UOK, UOP, UOJ மற்றும் WU அணிகள் அரையிறுதிக்கு தெரிவாவதற்காக காலிறுதியில் பலப்பரீட்சை நடத்தின

காலிறுதிப் போட்டி முடிவுகள்

  • UOJ 32 – 21 SU
  • UOM 32 – 29 UOK
  • UOC 39 – 05 WU
  • UOSJ 40 -22 UOP

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<