தரூஷ பெர்னாண்டோ இரட்டைச் சதம்: புனித செபஸ்டியன் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

385
U19 Schools Cricket

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவடைந்த போட்டிகளில் புனித செபஸ்டியன் கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி மற்றும் தர்மராஜ கல்லூரி அணிகள் முதல் இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்தன.

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி எதிர் மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரி

முதல் நாள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 73 ஓட்டங்களைப் பெற்றிருந்த புனித செபஸ்டியன் கல்லூரி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுவதற்கு மேலும் 49 ஓட்டங்கள் தேவையான நிலையில் களமிறங்கியது.

அற்புதமாக துடுப்பெடுத்தாடிய புனித செபஸ்டியன் கல்லூரியின் வீரர்கள் இன்றைய தினம் போட்டியில் தமது முழு ஆதிக்கத்தையும் நிலைநாட்டினர். அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தரூஷ பெர்னாண்டோ 174 பந்துகளில் ஆட்டமிழக்காது 200 ஓட்டங்கள் விளாசினார்.

அவருக்கு தனது பங்களிப்பை வழங்கிய ரொஷேன் பெர்னாண்டோ 85 ஓட்டங்கள் குவிக்க, புனித செபஸ்டியன் கல்லூரி 8 விக்கெட்டுகளை இழந்து 399 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. டி.எஸ். சேனநாயக்க கல்லூரி சார்பில் முதித லக்ஷான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்படி போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

முன்னர், முதலில் துடுப்பெடுத்தாடிய டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி 121 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்தது. முதித லக்ஷான் அதிகபட்சமாக 38 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். புனித செபஸ்டியன் கல்லூரி சார்பாக நிமேஷ் பண்டார 3 விக்கெட்டுகளையும் விஷேன் சில்வா மற்றும் பசித் பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 121 (32.4) – முதித லக்ஷான் 38, விஹான் குலதுங்க 34, நிமேஷ் பண்டார 3/35, விஷேன் சில்வா 2/19, பசித் பெரேரா 2/30

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 399/8 (96) – தரூஷ பெர்னாண்டோ 200*, ரொஷேன் பெர்னாண்டோ 85, மிலிந்த பீரிஸ் 44, முதித லக்ஷான் 4/84

முடிவு – போட்டி சமநிலையில் முடிவடைந்தது. புனித செபஸ்டியன் கல்லூரி முதல் இன்னிங்ஸில் வெற்றி.


புனித ஜோசப் கல்லூரி எதிர் காலி மஹிந்த கல்லூரி

முதல் நாள் நிறைவில் விக்கெட் இழப்பேதுமின்றி 7 ஓட்டங்களைப் பெற்றிருந்த மஹிந்த கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக மேலும் 249 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

எனினும், ஹரீன் குரே மற்றும் நிபுன் சுமனசிங்க தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்த, மஹிந்த கல்லூரி 216 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ரவிந்து ஹன்சிக 71 ஓட்டங்களைக் குவித்தார்.

இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரி, ஆட்டம் நிறைவடையும் போது 1 விக்கெட்டை இழந்து 66 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஜெஹான் டேனியல் ஆட்டமிழக்காது 36 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

முன்னர், முதலில் துடுப்பெடுத்தாடிய புனித ஜோசப் கல்லூரி 82 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அவ்வணி சார்பாக சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய நிபுன் சுமனசிங்க 82 ஓட்டங்களைக் குவித்தார். பந்து வீச்சில் கவிந்து எதிரிவீர 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 255/7d (82) – நிபுன் சுமனசிங்க 82, சச்சித மஹிந்தசிங்க 33*, தினித் ஜயகொடி 31, கவிந்து எதிரிவீர 3/67

மஹிந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 216 (92) – ரவிந்து ஹன்சிக 71, ஹரீன் குரே 3/45, நிபுன் சுமனசிங்க 3/14

புனித ஜோசப் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 66/1 (14) – ஜெஹான் டேனியல் 36*

முடிவு – போட்டி சமநிலையில் முடிவடைந்தது. புனித ஜோசப் கல்லூரி முதல் இன்னிங்ஸில் வெற்றி.


கண்டி தர்மராஜ கல்லூரி எதிர் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி

முதல் நாள் நிறைவில் 1 விக்கெட்டை இழந்து 38 ஓட்டங்களைப் பெற்றிருந்த புனித அந்தோனியார் கல்லூரி, முதல் இன்னிங்ஸில் வெற்றி பெறுவதற்கு மேலும் 246 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

சிறப்பாக பந்துவீசிய கிஹான் விதாரண 7 விக்கெட்டுகளை சாய்க்க, புனித அந்தோனியார் கல்லூரி 253 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பில் கவிந்து மதுக அதிகபட்சமாக 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய தர்மராஜ கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகளை இழந்து 71 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. டிலோன் பிரசன்ன 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

முன்னர், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தர்மராஜ கல்லூரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அசத்தலாக துடுப்பெடுத்தாடிய தேஷான் குணசிங்க 116 ஓட்டங்களையும், கசுன் குணவர்தன 82 ஓட்டங்களையும் குவிக்க, தர்மராஜ கல்லூரி தமது முதல் இன்னிங்ஸிற்காக 283 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில் கவீஷ துலாஞ்சன 3 விக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 283 (70.2) – தேஷான் குணசிங்க 116, கசுன் குணவர்தன 82, கவீஷ துலாஞ்சன 3/31

புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 253 (91.3) – கவிந்து மதுக 48, அரிந்த பசிந்து 40, கிஹான் விதாரண 7/90

தர்மராஜ கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 71/6 (22) – டிலோன் பிரசன்ன 3/15

முடிவு – போட்டி சமநிலையில் முடிவடைந்தது. தர்மராஜ கல்லூரி முதல் இன்னிங்ஸில் வெற்றி.

மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு  

Crawler