15 வயதின் கீழ் முதற்தர கூடைப்பந்து தொடரில் வடக்கு, கிழக்கு கல்லூரிகள்

285

15 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான “A” பிரிவு கூடைப்பந்தாட்ட போட்டிகள் இன்று (07) கொழும்பில் ஆரம்பமாகின்றன. தகுதிகாண் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட 24 முன்னணி அணிகள் “A” பிரிவுற்கு உள்வாங்கப்பட்டுள்ளன. அதேவேளை, தலா 12 அணிகள் வீதம் B மற்றும் C பிரிவிலும் போட்டியிடவுள்ளன.

வட மாகாணத்தில் கூடைப்பந்தாட்டத்தில் முன்னணி அணிகளுள் ஒன்றாகத் திகழும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும், தேசிய ரீதியில் கூடைப்பந்தாட்டத்தில் புகழ்பூத்த பாடசாலையான மட்டக்களப்பு சென். மைக்கல்ஸ் கல்லூரியும் A பிரிவுக்கான போட்டித் தொடரில் பங்கெடுக்கின்றன.

இதேவேளை, இலங்கை கூடைப்பந்தில் வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றாக உள்ள அக்குறனை அஸ்ஹர் கல்லூரி அணியும் இந்த தொடருக்கு தெரிவாகியுள்ளது.

பாடசாலை கிரிக்கெட் விருத்திக்காக கரம் கொடுக்கும் யாழ். மத்தி பழைய மாணவர்கள்

வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் …

முதற் சுற்று போட்டிகளிற்காக 24 அணிகளும் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதலிரு இடங்களினை பிடிக்கின்ற இரு அணிகள் விலகல் சுற்றிற்கு தகுதிபெறும். தொடர்ந்து வெற்றிபெறும் அணிகள் அடுத்தடுத்த சுற்றுகளிற்கு முன்னேறும்.

முதலாவது சுற்றிற்காக யாழ். மத்திய கல்லூரி அணி குழு “A”இல் சென். சில்வெஸ்டர்ஸ் கல்லூரி மற்றும் ஆனந்த கல்லூரி ஆகியவற்றுடன் நிரலிடப்பட்டுள்ளது.  

குழு “G” இல் நிரலிடப்பட்டுள்ள சென். மைக்கல்ஸ் கல்லூரியுடன், வத்தளை சென் ஜோசப்ஸ் கல்லூரி, நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி ஆகியன போட்டியிடவுள்ளன.

இவ்வருட போட்டித்தொடரிற்கு  A,B,C ஆகிய மூன்று பிரிவுகளிலுமாக அதிகளவிலான அணிகள் பங்கெடுக்கின்றன. அணியொன்றிற்கு  25 வீரர்களினை பதிவு செய்துகொள்ள முடியும்.

உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத்தில் இலங்கை ஏ குழுவில்

இங்கிலாந்தின் லிவர்பூலில் அடுத்த வருடம்

தகுதிச்சுற்றில் யாழ். மத்திய கல்லூரி

A,B,C ஆகிய மூன்று பிரிவுகளிற்குமான 48 அணிகளினை தெரிவு செய்வதற்கான தகுதிச் சுற்றுப்போட்டிகள் கடந்த மாதம் இடம்பெற்றிருந்தன. இத் தகுதிச்சுற்றில் யாழ். மத்திய கல்லூரி அணியினர்  4 வெற்றிகளினைப் பதிவு செய்திருந்த அதேவேளை, பலம் வாய்ந்த புனித பேதுரு கல்லூரிக்கெதிராக மாத்திரம் தோல்வியடைந்திருந்தனர். இதன்மூலம், குழுவில் இரண்டாவது இடத்தினைப் பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி A பிரிவு போட்டிகளிற்கு தகுதிபெற்றது.

  • யாழ். மத்திய கல்லூரி 48:46  கொழும்பு தெற்கு சர்வதேச பாடசாலை
  • யாழ். மத்திய கல்லூரி 28:82  புனித பேதுரு கல்லூரி, கொழும்பு
  • யாழ். மத்திய கல்லூரி 67:06  நீர்கொழும்பு தெற்கு சர்வதேச பாடசாலை
  • யாழ். மத்திய கல்லூரி 49:19  திருச்சிலுவை கல்லூரி, களுத்துறை
  • யாழ்.மத்திய கல்லூரி 63:45  றோயல் இன்ஸ்ரிரியூற்
15 வயதிற்குட்பட்ட யாழ் மத்திய கல்லூரிஅணியினர்.

யாழ் மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்ட பொறுப்பாசிரியர் கந்தசாமி குகநேசன் அவர்கள் “A” பிரிவு போட்டியில் களமிறங்கவுள்ளமை  குறித்து ThePapare.com இடம் கருத்து  தெரிவிக்கையில்

எங்களது விடா முயற்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய பலன் இது. குறிப்பாக பயிற்றுவிப்பாளர் தயாளன், வீரர்களின் கடின உழைப்பு இதற்குப் பின்னால் இருக்கின்றது. நாங்கள் எதிர்கொண்டு அணிகளின் வீரர்கள் எமது வீரர்களை விடவும் உயரம் கூடியவர்களாக இருந்தபோதும், எமது வீரர்களது பலமாகவுள்ள வேகத்தினை சாதகமாக்கி போட்டிகளை வெற்றிகொண்டுள்ளோம். அதே நுட்பத்தினையே “A” பிரிவு போட்டிகளிலும் கையாளவுள்ளோம். குறிப்பாக, தற்போது நாங்கள் வீரர்கள் உடற்தகுதி குறித்து அதிக கரிசனை கொண்டுள்ளோம்” என்றார்.

அதேவேளை, இம்முறை போட்டியில் தமது அணிக்கு இருக்கும் சவால்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர்,  

15 வயதுப்பிரில் நாட்டில் இருக்கக்கூடிய சிறந்த அணிகளை எதிர்கொள்ளவிருக்கின்றோம். ஆகவே, சவால் என்பது நிச்சயமாகவிருக்கும். எங்களது அணியின் வீரர்கள் சற்று உயரம் குறைவாக இருக்கின்றமை ஒரளவு சவாலாக அமையும் என எதிர்பார்க்கின்றேன். குறிப்பாக, வடக்கில் கூடைப்பந்தாட்டத்திற்கு இருக்கக்கூடிய வசதிவாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.  இந்த தொடரினை எமது பாடசாலைக்கு கிடைத்திருக்கக்கூடிய வாய்ப்பாகவே கருதுகின்றேன். மிகச்சிறந்த, ரசிக்கக்கூடிய ஆட்டத்தினை வெளிப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றேன்.”  

போட்டிகள் இடம்பெறும் மைதானங்கள்

கொழும்பு றோயல் கல்லூரி,புனித பேதுரு கல்லூரி, வத்தளை சென் ஜோசப்ஸ் கல்லூரி, கொழும்பு சர்வதேச பாடசாலை  

அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி முறையே 9ஆம் 10ஆம் திகதிகளில் றோயல் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

  >>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<