தொடர்ந்து துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கும் பெதும் நிஸ்ஸங்க

1257
school cricket u19

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரின் குழு ‘B’ இற்கான இரண்டு போட்டிகள் இன்று ஆரம்பமாகின. பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மற்றும் ஆனந்த கல்லூரிகளுக்கிடையிலான போட்டி மத்தேகொட இராணுவ மைதானத்தில் இடம்பெற்றதுடன் இசிபதன கல்லூரிக்கும் புனித பெனடிக்ட் கல்லூரிக்கும் இடையிலான போட்டி கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் ஆனந்த கல்லூரி

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி 53.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் டிலங்க மதுரங்க அதிகபட்சமாக 67 ஓட்டங்களைக் குவித்தார். பந்து வீச்சில் சுபுன் வராகொட மற்றும் அச்சில இரங்க ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ஆனந்த கல்லூரி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 74 ஓட்டங்களை பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் சஹன் சுரவீர 31 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததுடன், துஷான் ஹெட்டிகே ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களைக் குவித்திருந்தார். பந்து வீச்சில் கௌஷால் நாணயக்கார 2 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 198 (53.2) – டிலங்க மதுரங்க 67, விஷ்வ சதுரங்க 26, அச்சில இரங்க 4/19, சுபுன் வராகொட 4/20

ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 74/3 (22) – சஹன் சுரவீர 31, துஷான் ஹெட்டிகே 26*, கௌஷால் நாணயக்கார 2/16


இசிபதன கல்லூரி எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இசிபதன கல்லூரி 53.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அற்புதமாக துடுப்பெடுத்தாடிய பெதும் நிஸ்ஸங்க 101 ஓட்டங்களையும் ஹேஷான் பெர்னாண்டோ 74 ஓட்டங்களையும் குவித்தனர். பந்து வீச்சில் அசத்திய கவீஷ ஜயதிலக்க 26 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய புனித பெனடிக்ட் கல்லூரி எதிரணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது அவ்வணி 6 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. சஞ்சுல பண்டார 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 208 (53.2) – பெதும் நிஸ்ஸங்க 101, ஹேஷான் பெர்னாண்டோ 74, கவீஷ ஜயதிலக்க 5/26, ரிஷான் கவிஷ்க 2/46, மஹேஷ் தீக்ஷண 2/56

புனித பெனடிக்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 72/6 (36.2) – சஞ்சுல பண்டார 2/10

மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு

singer-mca-premier-league-tournament