துடுப்பாட்டத்தில் சதத்துடன் பந்து வீச்சிலும் அசத்திய ஸ்கந்தாவின் சோபிகன்

466

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் பிரிவு III அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் முதலாவது சுற்றுக்காக சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணியினை எதிர்த்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி மோதியிருந்த ஆட்டம் சமநிலையில் நிறைவுற்றது.

இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்த இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்துக் கல்லூரி முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தது.

துடுப்பாட்டத்தில் தடுமாறிய சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு மோசமான தோல்வி

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் பிரிவு II அணிகளுக்கு…..

அதன்படி, ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணியினர், மத்திய வரிசையில் அஜிந்தனது அரைச்சதம் மற்றும் கலிஸ்ரனின் 41 ஓட்டங்களுடன் சிறந்த ஓட்ட டெறுதியினை நோக்கி நகர்ந்தனர்.

அதற்கு மேலதிகமாக, பின்வரிசையில் களம் நுழைந்த ஸ்கந்தாவின் பிரதான பந்துவீச்சாளர் சோபிகன் ஆட்டமிழக்காது  சதமொன்றினை பெற்றுக்கொடுத்தார். இந்த பருவகாலத்தில் இது ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கான முதலாவது சதமென்பது குறிப்பிடத்தக்கது. இவரோடு இணைந்து அமிர்த சாரதன் ஆட்டமிழக்காது 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

சோபிகனது சதத்துடன், 78 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 304 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சுன்னாகம் தரப்பினர் தமது இன்னிங்ஸை இடைநிறுத்தினர். பந்துவீச்சில் சைலரூபனிற்கு 3 விக்கெட்டுகள் கிடைத்திருந்தது.

பதிலிற்கு தமது முதலாவது இன்னிங்ஸினை ஆரம்பித்த இந்துக் கல்லூரி அணியினர் 185 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர். அவ்வணிக்காக மிலுக்சன் 47 ஓட்டங்களையும், ஐங்கரன் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சிலும் அசத்திய சோபிகன் 20 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். சுழற்பந்துவீச்சாளர் பிரசனிற்கும் 4 விக்கெட்டுக்கள் கிடைத்திருந்தது.

Photos: Ariyalai Warriors vs Point Pedro Super Kings | Jaffna Super League 2018/19

ThePapare.com | Jeyendra Logendran | 20/01/2019 | Editing….

முதலாவது இன்னிங்ஸில் 119 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற ஸ்கந்தவரோதயா கல்லூரியினர், யாழ் இந்துக் கல்லூரியை பலோவ் ஓன் முறையில் தொடர்ந்து துடுப்பெடுத்தாடுமாறு பணித்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில்  கோமைந்தன், ஐங்கரன் மற்றும் தனுக்சன் ஆகியோர் முறையே 47, 35 மற்றும் 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க இந்துக் கல்லூரி அணி 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் பிரசனுக்கு 5 விக்கெட்டுகளும், தனுஜன் மற்றும் டான்சனிற்கு முறையே 3 மற்றும் 2 விக்கெட்டுகளும் கிடைத்திருந்தது.

ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிக்கு 68 என்ற இலகுவான வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்ட போதும், ஆட்ட நேரம் நிறைவிற்கு வர வெறுமனே 7 ஓவர்களே எஞ்சியிருந்தது.

வேகமாக ஆடிய ஸ்கந்தா வீரர்கள் அதிரடியாக துடுப்பெடுத்தாடும் முயற்சியில் 5 விக்கெட்டுகளை வேகமாகப் பறிகொடுத்து, 60 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர். இதனால், துரதிஷ்டவசமாக 7 ஓட்டங்களால் வெற்றி வாய்ப்பு ஸ்கந்தாவின் கைகளிலிருந்து நழுவியது.

போட்டி சமநிலையில் நிறைவிற்கு வந்தபோதும் முதலாவது இன்னிங்ஸ் முன்னிலைக்கான புள்ளிகளை ஸ்கந்தவரோதயா கல்லூரி பெற்றது.  

ஸ்கந்தவரோதயா கல்லூரி,யாழ்ப்பாணம்  304/9d (78): சோபிகன் 100*, B அஜிந்தன் 54, கலிஸ்ரன் 41,அமிர்த சாரதன் 36*, நிகர்ஜன் 21, லக்சன் 20,சைலரூபன் 3/54 & 60/5 (7) அங்கவன் 3/29

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 185 (66.1): மிலுக்சன் 47, ஐங்கரன் 38, சோபிகன் 5/20, பிரசன் 4/41 & F/O 186 (57) கோமைந்தன் 40, ஐங்கரன்  35, தனுக்சன் 39, பிரசன்  5/65, தனுஜன் 3/50, டான்சன்  2/13

போட்டி முடிவுபோட்டி சமநிலையில் நிறைவு

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<