தேவபதிராஜ கல்லூரி 125 ஓட்டங்களால் அபார வெற்றி

250

சிங்கர் 17 வயத்திற்குட்பட்ட பிரிவு 1 கிரிக்கட் போட்டிகளின் இரண்டாம் சுற்று இத்தினங்களில் நடைபெற்று வருகின்றது. ஜூலை 5ஆம் திகதி நடைபெற்ற போட்டிகளில் மொரட்டுவ செபஸ்டியன் கல்லூரி, தேவ்பதிராஜ கல்லூரி, ஆனந்த கல்லூரி மற்றும் குருகுல கல்லூரி ஆகியன வெற்றி பெற்றன.

தர்ஸ்டன் மற்றும் செபஸ்டியன் கல்லூரிகளுக்கிடையிலான போட்டி

செபஸ்டியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தர்ஸ்டன் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிமேஷ் பெரேராவின் உதவியுடன் 41.1 ஓவர்களில் 129 ஓட்டங்களைப் பெற்றது. 130 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய செபஸ்டியன் கல்லூரி அணியின் விசித்த அபிலாஷின் அதிரடி துடுப்பாட்டத்தால் வெறும் 22.3 ஓவர்களில் 2 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து செபாஸ்டியன் கல்லூரி இலக்கை அடைந்தது. இதன் மூலம் செபஸ்டியன் கல்லூரி 8 விக்கட்டுகளால் இலகுவாக வெற்றியீட்டியது.

தர்ஸ்டன் கல்லூரி 129(41.1) – நிமேஷ் பெரேரா 42, தரூஷ 4/15, வினூஜ 4/30

செபஸ்டியன் கல்லூரி 131/2(22.3) – விசித்த அபிலாஷ் 74, லகிரு பெர்னாண்டோ 27*


தேவபதிராஜா மற்றும் ஜோசப் வாஸ் கல்லூரிகளுக்கிடையிலான போட்டி

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜோசப் வாஸ் கல்லூரி தேவபதிராஜா கல்லூரி அணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. தேவபதிராஜ கல்லூரி அணிசார்பாக ரவீன் யசஸ் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 96 ஓட்டங்களைப் பெற தேவபதிராஜா கல்லூரி அணி 49.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பெடுத்தாட்டத்தில் போன்று பந்து வீச்சிலும் ரவீன் யசஸ் 3 விக்கட்டுகளைப் பெற்று அசத்த ஜோசப் வாஸ் கல்லூரி 75 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதனால் தேவபதிராஜா கல்லூரி 125 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

தேவபதிராஜ கல்லூரி 200(49.1) – ரவீன் யசஸ் 96, நிமேஷ் சத்துறங்க 22,ஷோகான் 3/34, நிபுன் 3/33, ஷானாக 2/49

ஜோசப் வாஸ் கல்லூரி 75(38) – நிபுன் தனஞ்சய 15, ரவீன் 3/10, நிமேஷ் 3/23, தரூஷ 2/11


டி. மசெனோட் கல்லூரி மற்றும் ஆனந்த கல்லூரிகளுக்கிடையிலான போட்டி

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டி. மசெனோட் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி டி. மசெனோட் கல்லூரியானது 49.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆனந்த கல்லூரி துஷான் ஹெட்டிகேவின் அரைச்சதத்தின் உதவியுடன் 23.5 ஓவர்களில் 5 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

டி. மசெனோட் கல்லூரி 133(49.4) – டில்ருக் அந்தனி 41, மிதில கீத் 31, துஷான் 3/30, சாமிக 3/19

ஆனந்த கல்லூரி 134-5 (23.5) – துஷன் ஹெட்டிகே 57, லஹிரு ஹிரண்ய 51


குருகுல மற்றும் தர்மபால கல்லூரிகளுக்கிடையிலான போட்டி

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குருகுல கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும்படி தர்மபால கல்லூரி அணிக்குப் பணித்தது. குருகுல கல்லூரி அணிக்காகப் பசிந்து உபேக்க 4 விக்கட்டுகளைப் பெற்றுக்கொள்ள தர்மபால கல்லூரி அணி 84 ஓட்டங்களுக்கு சுருண்டது. 85 என்ற மிகச் சிறிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குருகுல கல்லூரி அணியானது இரண்டு விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. குருகுல கல்லூரி அணி சார்பாக ப்ருதுவி றுசாரா 38 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

தர்மபால கல்லூரி 84 (29) – அவிஸ்க்க ஹசரிந்த 31, பசிந்து உபேக்க 4/7, சச்சின்தா 2/11, மலிந்து 2/17

குருகுல கல்லூரி 85-2(16.5) – ப்ருதுவி றுசாரா 38, லசிந்து அரோஷ 21

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்