பலம் மிக்க இந்தியாவுடன் போராடி வீழ்ந்த இலங்கை கனிஷ்ட அணி

480

இந்தியாவுக்கு எதிராக மற்றொரு தோல்வியுடன் இலங்கை கனிஷ்ட கால்பந்து அணி 15 வயதுக்கு கீழ்பட்ட SAFF சம்பியன்ஷிப் தொடரை முடித்துக் கொண்டது. இந்தியாவிடம் 5-0 என தோல்வியை சந்தித்ததானது அண்டை நாட்டை விடவும் இலங்கை கால்பந்து தொழில்நுட்ப மற்றும் திறமை அடிப்படையில் பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதை காட்டுவதாக உள்ளது.   

இலங்கை கனிஷ்ட கால்பந்து அணிக்கு மோசமான தோல்வி

இந்தியாவில் இடம்பெறும் 15 வயதுக்கு…..

இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு எந்த வாய்ப்பும் இன்றியே இன்று (27) இலங்கை அணி இந்தியாவை எதிர்கொண்டது. மறுபுறம் தாம் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 12க்கும் அதிகமான கோல் வித்தியாசத்தில் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையிலேயே இந்தியா களமிறங்கியது.   

முதல் மூன்று போட்டிகளில் இருந்த இலங்கை ஆரம்ப அணியில் பயிற்சியாளர் அருன சம்பத் முதல் மாற்றத்தை செய்திருந்தார். எருஷ ருவன்கவுக்கு பதிலான ஹரசர கொன்டமாலை அணியில் இணைத்தார். இந்திய அணி திறமையை வெளிக்காட்டிய அனைத்து வீரர்களையும் உள்ளடக்கியதாக வலுவான அணியுடன் களமிறங்கியது

இலங்கை அணி முதல் 30 நிமிடங்களில் பலம்மிக்க எதிரணிக்கு கோல் விட்டுக்கொடுக்காமல் போராடியது. எனினும் 32 ஆவது நிமிடத்தில் ஹிமன்ஷு ஜங்ரா சிங் இழுபறியை முடிவுக்குக் கொண்டுவந்து தொலைவில் இருந்து பந்தை செலுத்த தன்மீது வந்த பந்தை தருஷ ரஷ்மிக்க தடுக்கத் தவறினார்.  

போட்டியின் 38 ஆவது நிமிடத்தில் மஹேசன் சிங் இலகுவாக பந்தை வலைக்குள் தட்டிவிட்டு இந்தியாவின் முன்னிலையை அதிகரித்தார். இந்த விரைவான கோல்களால் இந்திய தனது கோல் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் அச்சுறுத்தல் இலங்கைக் ஏற்பட்டது.  

இந்நிலையில் ஹிமன்ஷு 42 ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை புகுத்தினார். தொடர்ந்து முதல் பாதி முடிவதற்குள் ஷுபோ போல் இந்தியாவுக்காக நான்காவது கோலை புகுத்தினார். பெனால்டி பெட்டிக்குள் தம்மிடம் கிடைத்த பந்தை எந்த நெருக்கடியும் இன்றி அவர் கோலாக மாற்றியமை குறிப்பிடத்தக்கது.   

முதல் பாதி: இந்தியா 4 – 0 இலங்கை

இந்திய அணி இரண்டாவது பாதியிலும் இலங்கை கோல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணி அடுத்தடுத்து இலங்கை கோல் கம்பத்தை நோக்கி பந்தை செலுத்துவதை காண முடிந்தது. அதனால் இந்திய வீரர்களின் ஆக்கிரமிப்பை தடுப்பதற்கு இலங்கை பின்கள வீரர்கள் கடுமையாக போராட வேண்டி ஏற்பட்டது.      

மிஹ்ரானின் அபார கோல்களினால் பூட்டானை வீழ்த்தியது இலங்கை

இரண்டாம் பாதியில் காண்பித்த அபார….

எனினும் போட்டி ஒரு மணி நேரத்தை எட்டும்போது ஹிமன்ஷு தனது ஹட்ரிக் கோலை பெற்றார். அதற்கு முன்னதாக இலங்கை அணி துஷ்மிக்க ஜயலத்திற்கு பதில் மொஹமட் சொஹைப்பை களமிறக்கியது

அபார தடுப்புகளை செய்து தரூஷ ருஷ்மிக்க இந்தியாவின் பல கோல் வாய்ப்புகளை சிதறடித்ததோடு இந்திய முன்கள வீரர்களை முறியடிப்பதற்கு அவரால் முடிந்தது

இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு  இலங்கை அணி தகுதி பெறாத நிலையில் ஜோர்தானில் எதிர்வரும் செப்டெம்பர் 14 தொடக்கம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 14 வயதுக்கு கீழ்பட்ட AFC சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டிக்கு இலங்கை அணி தயாராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

முழு நேரம்: இந்தியா 5 – 0 இலங்கை

கோல் பெற்றவர்கள்

  • இந்தியா ஹிமன்ஷு ஜங்ரா சிங் 32′, 42′, 60′, மஹேசன் சிங் 38′, ஷுபோ போல் 45+4′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<