தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா நீக்கம்

88
ASSOCIATED PRESS

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா உபாதை காரணமாக விலகியிருக்கின்றார். 

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடிய பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தின் போது தென்னாபிரிக்க அணியுடன் இந்தியா விளையாடவுள்ள டெஸ்ட் தொடரில் இருந்தே ஜஸ்பிரிட் பும்ரா உபாதை காரணமாக விலகியிருக்கின்றார். 

வெற்றியின் எதிர்பார்ப்புடன் பாகிஸ்தான் சென்றது இலங்கை அணி

பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி, அதிக…..

ஜஸ்பிரிட் பும்ரா இல்லாத நிலையில் இந்திய கிரிக்கெட் அணி, தமது டெஸ்ட் குழாத்தில் உமேஷ் யாதவ்விற்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றது. 

தென்னாபிரிக்க அணியுடனான T20 தொடரிலும் முன்னதாக ஓய்வெடுத்திருந்த பும்ரா, எக்ஸ்ரே பரிசோதனை ஒன்றுக்கு முகம்கொடுத்த பின்னரே டெஸ்ட் தொடரில் விளையாட முடியாமல் உபாதையில் இருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது. 

பும்ராவின் உபாதை காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் உள்வாங்கப்பட்டிருக்கும் உமேஷ் யாதவ், கடைசியாக 2018 ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் உமேஷ் யாதவ் 33.47 என்ற சராசரியுடன் 119 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஒக்டோபர் 02 ஆம் திகதி வைஷாக் நகரில் இடம்பெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகின்றது.

இந்திய டெஸ்ட் குழாம்

விராட் கோஹ்லி (அணித்தலைவர்), மயான்க் அகர்வால், ரோஹிட் சர்மா, செட்டெஸ்வார் புஜாரா, அஜிங்கியா ரஹானே, ஹனுமா விஹாரி, றிசாப் பான்ட், றித்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, சுப்மான் கில்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<