நேபாளத்துக்கு எதிரான T20 தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த ஐக்கிய அரபு இராச்சியம்

108
Cricket Nepal

சுற்றுலா நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும், T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளதோடு மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.

சச்சினின் 28 ஆண்டுகால சாதனையை முறியடித்த நேபாள வீரர்

நேபாள அணி ஐக்கிய அரபு சுற்றுப் பயணத்தில் முதற்கட்டமாக இடம்பெற்ற ஒரு நாள் தொடரினை நிறைவு செய்த பின்னர், ஐக்கிய  அரபு இராச்சிய அணியுடன் மோதுகின்ற இந்த T20 தொடரின் முதல் போட்டி டுபாய் நகரில் இன்று (31) ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நேபாள அணியின் தலைவர் பராஸ் கட்கா  முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு வழங்கினர்.

இதன்படி முதலில் துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி, பாகிஸ்தான் வம்சாவளி வீரர் சய்மான் அன்வரின் அதிரடி அரைச்சத உதவியோடு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

அரைச்சதம் பெற்ற சய்மான் அன்வர் அவரின் 5ஆவது T20 சர்வதேச அரைச்சதத்தோடு வெறும் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதேநேரம், நேபாள அணியின் பந்துவீச்சில் சுழல் வீரரான சந்தீப் லமிச்சானே மற்றும் பசாந்த் ரெக்மி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சுருட்டினர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 154 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நேபாள அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

கராச்சி மைதானத்தை சாடும் ஐக்கிய அரபு இராச்சிய வீரர்கள்

நேபாள அணியின் துடுப்பாட்டத்தில் சந்தீப் ஜோரா அரைச்சதம் ஒன்றினை தாண்டி 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்று போராடியிருந்த போதிலும் அது வீணாகியிருந்தது.

மறுமுனையில் ஐக்கிய அரபு இராச்சிய அணியின் பந்துவீச்சு சார்பில் மொஹமட் நவீட், சுல்தான் அஹ்மட் மற்றும் ஸஹூர் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக ஐக்கிய அரபு இராச்சிய அணியின் சார்பில் அரைச்சதம் தாண்டிய சய்மான் அன்வர் தெரிவாகினார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான T20 தொடரின் அடுத்த போட்டி நாளை (1)  துபாய் நகரில் மீண்டும் இடம்பெறுகின்றது.

போட்டியின் சுருக்கம்

ஐக்கிய அரபு இராச்சியம் – 153/6 (20) சய்மான் அன்வர் 53(38), முஹமட் உஸ்மான் 30(24), பசாந்த் ரெக்மி 23/2(4), சந்தீப் லமிச்சானே 25/2(4)

நேபாளம் – 132/7 (20) சந்தீப் ஜோரா 53(46)*, ஸஹூர் கான் 17/2(4), மொஹமட் நவீட் 19/2(4), சுல்தான் அஹ்மட் 26/2(4)

முடிவு – ஐக்கிய அரபு இராச்சிய அணி 21 ஓட்டங்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க