இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாகாணங்களுக்கு இடையிலான போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் மேல் மாகாண வடக்கு அணிக்கு எதிராக மத்திய மாகாணம் முதல் இன்னிங்ஸில் ஸ்திரமான நிலையில் உள்ளது.

குனதிலக்கவுக்குப் பதிலாக அணியில் சந்திமால் : ஹேரத்தின் நிலை குறித்து சந்தேகம்

கிரிக்கெட் வீரர்கள் தகுதிபெற்ற ஊழியர்களாக இருப்பதற்கு தகுதியுடையவர்களாக…

மொத்தம் பத்து அணிகள் விளையாடிய இத்தொடரில் குழுநிலை போட்டிகளில் A குழுவில் தனது நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் இரு ஆட்டங்களை சமநிலையில் முடித்து அந்த குழுவில் முதல் இடத்தை பிடித்த மத்திய மாகாண அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானது. மறுபுறம் B குழுவில் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றே மேல் மாகாண வடக்கு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இரண்டு நாட்கள் கொண்ட போட்டிகளை உடைய இத் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு, CCC மைதானத்தில் இன்று ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேல் மாகாண வடக்கு அணி மத்திய மாகாணத்தை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

இதன்போது நிமேஷ் குணசிங்க மற்றும் நுவனிது பெர்னாண்டோ ஆகியோர் துடுப்பாட்டத்தில் கைகொடுக்க மத்திய மாகாணத்தால் 300 ஓட்டங்களை நெருங்க முடிந்தது. இதன்படி மத்திய மாகாண அணி 76 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 293 ஓட்டங்களை எடுத்தது.

சிறப்பாக ஆடிய குணசிங்க 138 பந்துகளுக்கு முகம்கொடுத்து 9 பௌண்டரிகள் ஒரு சிக்ஸருடன் 80 ஓட்டங்களை பெற்றார். மறுபுறம் அதிரடியாக ஆடிய பெர்னாண்டோ 78 பந்துகளில் 5 பௌண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 76 ஓட்டங்களை விளாசினார்.

குறிப்பாக மத்திய மாகாண அணியின் இரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களும் ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்த நிலையில் குணசிங்க மற்றும் பெர்னாண்டோ ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 103 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.  

புனித அன்தோனியார் கல்லூரியின் முன்னாள் மாணவரான குணசிங்க இந்த தொடரில் ஒரு சதத்துடன் மொத்தம் 241 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

மேல் மாகாண வடக்கு அணிக்காக சிறப்பாக பந்துவீசிய பினுர பெர்னாண்டோ 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு துவின்து திலகரத்ன 98 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி மாணவனான பெர்னாண்டோ இந்த மாகாண மட்ட தொடரில் மொத்தம் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் வரிசையில் டிலங்க சதகானுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

சிறப்பாக ஆடி போட்டியை சமநிலை செய்தது வட மாகாணம்

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் 23 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான …

இந்நிலையில் முதல்நாள் ஆட்டத்தின் கடைசி தறுவாயில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேல் மாகாண வடக்கு அணி 5 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து 16 ஓட்டங்களை பெற்றிருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் போட்டி நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.  

வீழ்த்தப்பட்ட விக்கெட்டை மடவளை மதீனா கல்லூரி மாணவன் மொஹமட் சிராஸ் பெற்றிருந்தார்.

இதன்படி மேல் மாகாண வடக்கு அணியினருக்கு மேலும் 9 விக்கெட்டுகள் கைவசம் இருக்க மத்திய மாகாணத்தை விடவும் 277 ஓட்டங்களால் அவர்கள் பின்தங்கியுள்ளது.

ஆட்டத்தின் கடைசி நாளான நாளை இம்முறை மாகாண சம்பியன் பட்டத்தை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடவுள்ளன.

போட்டியின் சுருக்கம்

மத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்): 293 (76) – நிமேஷ் குணசிங்க 80, நுவனிது பெர்னாண்டோ 76, லஹிரு சமரகோன் 38, லக்ஷான் பெர்னாண்டோ 35, ரவின் சாயர் 32, பினுர பெர்னாண்டோ 4/39, துவின்து திலகரத்ன 4/39

மேல் மாகாணம் வடக்கு (முதல் இன்னிங்ஸ்): 16/1 (5) – மொஹமட் சிராஸ் 1/9

நாளை போட்டியில் இரண்டாவது நாள்