Home Tamil கண்டியை வீழ்த்திய காலிக்கு சுப்பர் ப்ரொவின்ஸியல் தொடரில் மூன்றாம் இடம்

கண்டியை வீழ்த்திய காலிக்கு சுப்பர் ப்ரொவின்ஸியல் தொடரில் மூன்றாம் இடம்

147

கண்டி அணிக்கு எதிராக 9 ஓட்டங்களால் வெற்றியீட்டிய காலி அணி 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான சுப்பர் ப்ரொவின்ஷியல் கிரிக்கெட் தொடரில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 

காலி அணியின் ஆரம்ப வீரர்கள் அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அந்த அணி 303 ஓட்ட வெற்றி இலக்கை நிர்ணயித்ததோடு, சவாலான இலக்கை நோக்கி ஆடிய கண்டி வீரர்கள் கடைசி ஓவர் வரை போராடியபோதும் விக்கெட்டுகளை இழந்ததால் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியுற்றனர்

இலங்கை வளர்ந்து வரும் அணிக்காக துடுப்பாட்டத்தில் போராடிய சிராஸ்

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் வீரர்களுக்கு எதிரான முதலாவது…..

நான்கு அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் கொழும்பு மற்றும் தம்புள்ளை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையிலேயே மூன்றாவது இடத்தைத் தீர்மானிப்பதற்காக ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இன்று (22) இந்தப் போட்டி நடைபெற்றது.  

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த காலி அணிக்கு ஆரம்ப வீரர்களான நவோத் பரணவிதான மற்றும் ஜிஹான் கலிந்து ஜோடி 147 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.  

Photos: Kandy vs Galle | 3rd Place Play-off | SLC U19 Super Provincial Tournament 2019

காலி மஹிந்த கல்லூரி வீரர் பரணவித்தான 58 பந்துகளில் 15 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 91 ஓட்டங்களை பெற்று சதத்தை தவறவிட்டார். அதேபோன்று, விக்கெட் காப்பாளரான கலிந்து 64 பந்துகளில் 76 ஓட்டங்களை பெற்றார்

தொடர்ந்து வந்த அணித்தலைவர் கஹதுவாரச்சியும் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார். அவர் 51 பந்துகளில் 3 பௌண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 57 ஓட்டங்களை பெற்றார். அடுத்து வந்த வீரர்கள் சோபிக்கத் தவறியபோதும் காலி அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றது

காலி அணியையும் வீழ்த்தி கொழும்பு இறுதிப் போட்டிக்கு தகுதி

காலி அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய….

காலி அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தை சிதறடித்த லொஹான் டி சொய்சா அடுத்தடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய கண்டி அணியும் வலுவான ஆரம்பத்தை பெற்றது. அந்த அணியில் ஆரம்ப வீரர்களான கவிந்து விக்ரமசிங்க (59) மற்றும் அவிஷ்க பெரேரா (55) ஆகியோர் அரைச்சதங்கள் பெற ஆரம்ப விக்கெட்டுக்கு 115 ஓட்டங்கள் பகிரப்பட்டன. எனினும் மத்திய ஓவர்களில் அடுத்தடுத்த விக்கெட்டுகள் பறிபோனதால் கண்டி அணிக்கு இலக்கை நோக்கிச் செல்வதில் நெருக்கடி ஏற்பட்டது

எனினும், அந்த அணி கடைசி வரை வெற்றிக்காக போராடியது. இதன்படி கண்டி அணி கடைசி ஓவருக்கு ஒரு விக்கெட் கைவசம் இருக்க 10 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் அந்த ஓவரின் முதல் பந்திலேயே இறுதி விக்கெட்டை பறிகொடுத்தது.

இதன்படி, கண்டி அணி 49.1 ஓவர்களில் 293 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. காலி அணி சார்பில், காலி ரிச்மண்ட் கல்லூரியின் வலதுகை சுழற்பந்து வீச்சாளர் சந்துன் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<    

போட்டியின் சுருக்கம் 

Result


Galle U19
302/10 (46.4)

Kandy U19
293/10 (49.1)

Batsmen R B 4s 6s SR
Navod Paranavithana b Kavindu Nadeeshan 91 58 15 1 156.90
Chihan Kalindu c Ravindu Rathnayakke b Rohan Sanjaya 76 64 6 2 118.75
Thaveesha Abhishek c Dunith Jayathunga b Lohan Arosha 57 51 3 3 111.76
Thevin Amarasinghe st Avishka Perera b Lohan Arosha 15 27 2 0 55.56
Pawan Rathnayake st Avishka Perera b Lohan Arosha 2 7 0 0 28.57
Dunith Wellalage c Avishka Perera b Lohan Arosha 0 1 0 0 0.00
Sandun Mendis c Umayanga Suwaris b Lohan Arosha 0 1 0 0 0.00
Ashen Dilhara c Kavindu Nadeeshan b Chamindu Wickramasinghe 21 30 2 1 70.00
Raveen De Silva run out (Avishka Tharindu) 5 16 0 0 31.25
Amshi De Silva c Avishka Tharindu b Rohan Sanjaya 10 14 0 0 71.43
Jethesh Wasala not out 8 11 0 0 72.73


Extras 17 (b 4 , lb 4 , nb 0, w 9, pen 0)
Total 302/10 (46.4 Overs, RR: 6.47)
Fall of Wickets 1-147 (16.4) Navod Paranavithana, 2-214 (25.6) Chihan Kalindu, 3-247 (32.2) Thaveesha Abhishek, 4-249 (34.1) Thevin Amarasinghe, 5-249 (34.2) Dunith Wellalage, 6-249 (34.3) Sandun Mendis, 7-260 (36.4) Pawan Rathnayake, 8-278 (41.4) Ashen Dilhara, 9-285 (43.3) Raveen De Silva, 10-302 (46.4) Amshi De Silva,

Bowling O M R W Econ
Chamindu Wickramasinghe 5 0 33 1 6.60
Ravindu Rathnayakke 2 0 16 0 8.00
Ruvin Peiris 3 0 35 0 11.67
Lohan Arosha 10 2 48 5 4.80
Abishek Anadhakumar 4 0 30 0 7.50
Umayanga Suwaris 4 0 36 0 9.00
Rohan Sanjaya 8.4 0 55 2 6.55
Kavindu Nadeeshan 10 1 41 1 4.10


Batsmen R B 4s 6s SR
Chamindu Wickramasinghe c Chihan Kalindu b Sandun Mendis 59 69 8 1 85.51
Avishka Perera c Dunith Wellalage b Raveen De Silva 55 62 5 1 88.71
Abishek Anadhakumar c Dunith Wellalage b Sandun Mendis 36 38 3 0 94.74
Lohan Arosha b Navod Paranavithana 44 51 6 0 86.27
Avishka Tharindu c Amshi De Silva b Sandun Mendis 19 26 1 0 73.08
Ravindu Rathnayakke st Chihan Kalindu b Sandun Mendis 0 3 0 0 0.00
Dunith Jayathunga c Sandun Mendis b Dunith Wellalage 21 14 3 0 150.00
Kavindu Nadeeshan c Dunith Wellalage b Amshi De Silva 17 14 1 1 121.43
Umayanga Suwaris b Amshi De Silva 19 9 1 1 211.11
Rohan Sanjaya run out (Sandun Mendis) 13 6 0 1 216.67
Ruvin Peiris not out 1 3 0 0 33.33


Extras 9 (b 1 , lb 1 , nb 1, w 6, pen 0)
Total 293/10 (49.1 Overs, RR: 5.96)
Fall of Wickets 1-115 (20.4) Chamindu Wickramasinghe, 2-141 (24.6) Avishka Perera, 3-185 (33.1) Abishek Anadhakumar, 4-214 (39.4) Lohan Arosha, 5-215 (40.1) Ravindu Rathnayakke, 6-224 (42.2) Avishka Tharindu, 7-259 (45.4) Dunith Jayathunga, 8-260 (46.1) Kavindu Nadeeshan, 9-288 (48.2) Umayanga Suwaris, 10-293 (49.1) Rohan Sanjaya,

Bowling O M R W Econ
Amshi De Silva 9 0 43 1 4.78
Jethesh Wasala 1 0 20 0 20.00
Ashen Dilhara 7 1 35 0 5.00
Sandun Mendis 10 0 47 3 4.70
Navod Paranavithana 7 0 51 1 7.29
Dunith Wellalage 9.1 0 63 2 6.92
Raveen De Silva 6 0 32 1 5.33