சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் – 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் நான்கு போட்டிகள் இன்று நிறைவடைந்ததோடு மேலும் இரண்டு ஆட்டங்கள் ஆரம்பமாயின.

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் தர்மபால கல்லூரி, பன்னிபிடிய

பம்பலப்பிட்டியில் C குழுவுக்காக நடைபெறும் இப்போட்டியில் புனித பேதுரு கல்லூரி அணி தனது முதல் இன்னிங்சுக்காக 282 ஓட்டங்களை பெற்ற நிலையில், இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தர்மபால கல்லூரி 162 ஓட்டங்களுக்கே சுருண்டது. ருவீன் செனவிரத்ன 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இலங்கை A அணிக்கு தொடர் தோல்வியை தவிர்க்க வைத்த நேற்றைய போட்டி முடிவு

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் A…

இந்நிலையில் இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்கும் நெருக்கடியில் தலர்மபால கல்லூரிக்கு பலோ ஓன் முறையில் இரண்டாவது இன்னிங்சை மீண்டும் துடுப்பாட வேண்டி ஏற்பட்டது. எனினும் அட்ட நேர முடிவில் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 20 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை தவிர்த்துக் கொண்டது. போட்டியில் மழை குறுக்கிட்டது அந்த அணிக்கு சாதகமாக அமைந்தது.

புனித பேதுரு அணித் தலைவர் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 129 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 282/8d (78) – சன்தூஷ் குணதிலக்க 129*, நிபுனக்க பொன்சேக்கா 42, சுலக்ஷன பெர்னாண்டோ 42, டில்ஷான் டி சில்வா 3/74, சமின்து சமரசிங்க 3/94

தர்மபால கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 162 (77.4) – லக்ஷித புரசிங்க 40, குசங்க பீரிஸ் 24, ருவின் செனவிரத்ன 4/45, ஷிவான் பெரேரா 2/13, மொஹமட் அமீன் 2/32

தர்மபால கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 20/3 (11) – மொஹமட் அமீன் 2/10

முடிவு போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவு


ஆனந்த கல்லூரி, கொழும்பு எதிர் மலியதேவ கல்லூரி, குருநாகலை

ஆனந்த கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆனந்த கல்லூரி பெற்ற 287 ஓட்டங்களை சமாளிக்கும் வகையில் இரண்டாவது நாளில் மலியதேவ கல்லூரி தனது முதல் இன்னிங்ஸில் ஆடியது.

இதன்மூலம் அந்த அணி தனது முதல் இன்னிங்சுக்காக 84 ஓவர்களில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்களை எடுத்தது. நிதானமாக ஆடிய சஜீவன் பிரியதர்ஷன ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களை பெற்றார்.

இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆனந்த கல்லூரி 5 ஓவர்களுக்கு மாத்திரம் துடுப்பெடுத்தாடிய நிலையில் ஆட்ட நேரம் முடிவுற்றது. போட்டி சமநிலையானபோதும் முதல் இன்னிங்சுக்கான புள்ளிகளை ஆனந்த கல்லூரி பெற்றுக்கொண்டது.

போட்டியின்  சுருக்கம்

ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 297 (61.2) – தமின்த ரெஷான் 100, ஷமல் இர்ஷான் 89, கலன விஜேசிறி 27, லஹிரு ஹிரன்ய 24, பிரைன் கருனநாயக்க 4/62, துலாஜ் ரணதுங்க 2/56, மதுரங்க நவீன் 2/70

மலியதேவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 203 (84) – சன்ஜீவன் பிரியதர்ஷன 54*, முதித பிரேமதாச 36, கயன்த விக்ரமாரச்சி 27, சுபுன் நிசங்க 25, கமேஷ் நிர்மல 4/63, ஷமல் ஹிருஷன் 2/07, சனத் தசநாயக்க 2/37

ஆனந்த கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 10/1 (05)

முடிவுபோட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவு


புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ

புனித தோமியர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய தோமியர் கல்லூரி முதல் இன்னிங்சுக்கு 144 ஓட்டங்களை பெற்றபோதும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி 86 ஓட்டங்களுக்கே சுருண்டதால் இரண்டாவது நாளில் வலுவான நிலையிலேயே தோமியர் கல்லூரி களமிறங்கியது.

WBBL தொடரில் ஒப்பந்தமாகிய முதல் இலங்கை வீராங்கணையாக சாமரி

இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்ட…

எனினும் அவ்வணி இரண்டாவது இன்னிங்சிலும் மோசமான துடுப்பாட்டம் காரணமாக 104 ஓட்டங்களுக்கே சுருண்டது. துலித் குணரத்ன பெற்ற 37 ஓட்டங்களுமே அதிகமாகும். பந்து வீச்சில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்திய சதுன் பெர்னாண்டோ இந்த இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை பதம்பார்தார்.

எவ்வாறாயினும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கு 162 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டபோதும் அந்த அணி 142 ஓட்டங்களுக்கு சுருண்டு வெறும் 20 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது. டெல்லோன் பீரிஸ் அபாரமாக பந்துவீசி 23 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி புனித தோமியர் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 144 (41.4) – மனீஷ ரூபசிங்க 71, துலித் குணரத்ன 27, சன்துன் பெர்னாண்டோ 5/33, குன்சன பெரேரா 3/14

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 86 (44.2) – சவின்து பீரிஸ் 34, விஷ்வ சதுரங்க 26, ஷன்னொன் பெர்னாண்டோ 5/36, துலித் குணரத்ன 4/18

புனித தோமியர் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 104 (43.2) – துலித் குணரத்ன 37, டெல்லோன் பீரிஸ் 21, நதுக்க பெர்னாண்டோ 3/15, சவின்து பீரிஸ் 3/38, கவுமால் நானயக்கார 2/32, குன்சன பீரிஸ் 2/15

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 142 (57.3) – விஷ்வ சதுரங்க 42, அவின்து பெர்னாண்டோ 27, சனோஜ் தர்ஷிக்க 25, டெல்லோன் பீரிஸ் 7/23

முடிவுபுனித தோமியர் கல்லூரி 20 ஓட்டங்களால் வெற்றி


புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு எதிர் ஸாஹிரா கல்லூரி, மருதானை

ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித பெனடிக்ட் கல்லூரி அணிக்கு மஹேஷ் தீக்ஷன அபார சதம் பெற்றார்.

மழை காரணமாக முதல் நாள் ஆட்ட முன்கூட்டியே முடிவுற்ற நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆடி வரும் புனித பெனடிக்ட் கல்லூரி 5 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்களை பெற்றுள்ளது. தீக்ஷன 102 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

துனித் வெல்லகே 11 விக்கெட்டுகள்; புனித ஜோசப் கல்லூரிக்கு இலகு வெற்றி

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும்…

நாளை இரண்டாவது நாள் ஆட்டம் தொடரும்.

போட்டியின் சுருக்கம்

புனித பொனடிக்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 200/5 (60.5) – மஹேஷ் தீக்ஷன 107*, விஹான்கே ருவன்ஹர 33


புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ எதிர் புனித தோமியர் கல்லூரி, மாத்தறை

மொரட்டுவயில் A குழுவுக்காக ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித செபஸ்டியன் கல்லூரி 260 என்ற ஸ்திரமான முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை பெற்றுள்ளது. புனித தோமியர் கல்லூரி நாளை தனது முதல் இன்னிங்ஸை தொடரவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 260 (82.4) – மலின்த பீரிஸ் 60, ஷனில் பெர்னாண்டோ 47, கிஹான் சேனநாயக்க 57*, வினூஜ ரணசிங்க 41*, சச்சில ரஷ்மிக்க 3/121, சினெத் சிதார 2/45  

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை (முதல் இன்னிங்ஸ்) – 06/0 (06)