வலுவான நிலையில் ஸாஹிராக் கல்லூரி

179

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட ‘டிவிஷன் – I’ பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் மேலும் சில போட்டிகள் இன்று ஆரம்பமாகின.

மஹிந்த கல்லூரி, காலி எதிர் ரோயல் கல்லுரி, கொழும்பு

கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மஹிந்த கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி துடுப்பாடக் களமிறங்கிய மஹிந்த கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக 66.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. மஹிந்த கல்லூரி சார்பாக பிரமித் தேவரப்பெரும ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களையும் கவிந்து எதிரிவீர 54 ஓட்டங்களையும் ஹன்சிக வெளிஹிந்த 40 ஓட்டங்களையும் அஷேன் கந்தம்பி 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

ரோயல் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் லஹிரு மதுஷங்க 41 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் பிமல் வீரசேகர 54 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய ரோயல் கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவு வரை 26 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 91 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் கயான் திசாநாயக்க ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களைப் பெற்று களத்தில் உள்ளார்.

போட்டியின் சுருக்கம்

மஹிந்த கல்லூரி, காலி – 258/8d (66.5) – பிரமித் தேவரப்பெரும 64*, கவிந்து எதிரிவீர 54, ஹன்சிக வெளிஹிந்த 40, அஷேன் கந்தம்பி 20, லஹிரு மதுஷங்க 3/41, பிமல் வீரசேகர 2/54

ரோயல் கல்லூரி, கொழும்பு – 91/2 (26) – கயான் திசாநாயக 35*


சாஹிரா கல்லூரி, மருதானை எதிர் புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை

சாஹிரா கல்லூரி மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சாஹிரா கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி துடுப்பாடக் களமிறங்கிய சாஹிரா கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக 76.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக முஹம்மத் சாமாஸ் 61 ஓட்டங்களையும் யசித் நிர்மல 46 ஓட்டங்களையும், ரித்மிக நிமேஷ் 42 ஓட்டங்களையும், சதுர தில்ருக்ஷான் 32 ஓட்டங்களையும், அரவிந்த் ராஜேந்திரன் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் புனித செர்வதியஸ் கல்லூரி சார்பாக சுபுன் கவிந்த 46 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் சேதக தேனுவண் 30 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கேஷர நுவந்த 36 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

கிரிஷான் சஞ்சுலவின் சிறப்பாட்டத்துடன் டி மெசனொட் கல்லூரி வெற்றி

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய புனித செர்வதியஸ் கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 74 ஓட்டங்களைப் பெற்றனர். புனித செர்வதியஸ் கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் புஷ்பித்த தில்ஷான் 38 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார்.

போட்டியின் சுருக்கம்

சாஹிரா கல்லூரி, மருதானை – 293 (76.3) – முஹம்மத் ஷமாஸ் 61, யசித் நிர்மல 46, ரித்மிக நிமேஷ் 42, சதுர தில்ருக்ஷான் 32, அரவிந்த் ராஜேந்திரன் 28, சுபுன் கவிந்த 5/46, சேதக தேனுவண் 2/30, கேஷர நுவந்த 2/36

புனித செர்வதியஸ் கல்லூரி, மாத்தறை – 74/1 (24) – புஷ்பித டில்ஷான் 38*


ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ எதிர் தர்மராஜ கல்லூரி, கண்டி  

தர்மராஜ கல்லூரி மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தர்மராஜ கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை ஜோசப் வாஸ் கல்லூரி அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய ஜோசப் வாஸ் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக 9 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது. திலான் பிரதீப்த 122 ஓட்டங்களைப் பெற்றதுடன் யொஹான் பீரிஸ் 37 ஓட்டங்களையும் தினேத் பெர்னாண்டோ 29 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் தர்மராஜ கல்லூரி சார்பாக யசிந்த சமரரத்ன 54 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய தர்மராஜ கல்லூரி அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது எவ்வித விக்கெட் இழப்புமின்றி 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ – 300/9d (88) – திலான் பிரதீப்த 122, யொஹான் பீரிஸ் 37, தினேத் பெர்னாண்டோ 29.  யசிந்த சமரரத்ன 3/54

தர்மராஜ கல்லூரி, கண்டி – 12/0 (5.3)


புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை எதிர் தர்மபால கல்லூரி, பன்னிப்பிட்டிய

புனித தோமியர் கல்லூரி மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தர்மபால கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை புனித தோமியர் கல்லூரி அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய புனித தோமியர் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் கலன பெரேரா 73 ஓட்டங்களையும், மனீஷ ரூபசிங்ஹ 52 ஓட்டங்களையும், திசர ஹபுயின்ன 45 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் தர்மபால கல்லூரி சார்பாக லக்ஷித சந்தருவன் 22 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சமிந்து லக்ஷித 60 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய தர்மபால கல்லூரி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பந்து வீச்சில் புனித தோமியர் கல்லூரி சார்பில் டேலோன் பீரிஸ் 19 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை – 261/8d (63.4) – கலன பெரேரா 73, மனீஷ ரூபசிங்ஹ 52, திசர ஹபுயின்ன 45, லக்ஷித சந்தருவன் 2/22, சமிந்து லக்ஷித 2/60

தர்மபால கல்லூரி, பன்னிப்பிட்டிய – 91/7 (31) – டேலோன் பீரிஸ் 4/19


மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் புனித பேதுரு கல்லூரி, கொழும்பு

கதிரான கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் லசித் குறுஸ்புள்ளே 57 ஓட்டங்களையும், நவீன் நிர்மல் 36 ஓட்டங்களையும், ஷெஹான் மனீஷ 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் புனித பேதுரு கல்லூரி சார்பாக முஹம்மத் அமீன் 56 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன் ஹசித கிரியெல்ல 46 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய புனித பேதுரு கல்லூரி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றது. மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி சார்பாக பந்துவீச்சில் நவீன் நிர்மல் 36 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி இன்றைய நா ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பு எதுவுமின்றி 16 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 191 (42.3) – லசித் குறுஸ்புள்ளே 57, நவீன் நிர்மல் 36, ஷெஹான் மனீஷ 33, பசிந்து மாதவ 20*, முஹம்மத் அமீன் 6/56, ஹசித கிரியெல்ல 2/27, சச்சின் சில்வா 2/46  

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 111 (40.1) – நவீன் நிர்மல் 4/36 

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 16/0 (7)