பந்து வீச்சில் பிரகாசித்த அசாம் மற்றும் சனொன்

157

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான பிரிவு ஒன்று (டிவிசன் 1) பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் பல போட்டிகள் இன்று நடைபெற்றன

இசிபதான கல்லூரி, கொழும்பு எதிர் மாரிஸ்ஸ்டெல்லா, கல்லூரி, நீர்கொழும்பு

கடுநேரிய மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இசிபதான கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி இசிபதான கல்லூரி அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அயன சிறிவர்தன 50 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் அவீஸ பகிந்த மற்றும் ரவீந்து பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்த புனித செபஸ்டியன் கல்லூரி

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் மாரிஸ்ஸ்டெல்லா கல்லூரி அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்களைப் பெற்றது. லசித் க்ரூஸ்புள்ளே 74 ஓட்டங்களையும் ரோஷேன் பெர்னாண்டோ 57  ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் மதுஷிக சந்தருவன் 3  விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

இசிபதன கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 189/10 (41) அயன சிறிவர்தன 50, அனுமப ஹேரத் 37, கால்க் அமத் 36, அவீஷ பகிந்த 3/35, ரவீந்து பெர்னாண்டோ 3/52, பசிந்து உசெட்டி 2/25, லசித் க்ருஸ்புள்ளே 2/45.

மாரிஸ்ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 243/5 (50) லசித் க்ரூஸ்புள்ளே 74 ,  ரோஷேன் பெர்னாண்டோ 57 , ரவீந்து பெர்னாண்டோ 27, கெவின் பெரேரா 26. மதுஹிக சந்தருவன் 3/40.


புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு எதிர் புனித தோமியர் கல்லூரி, கல்கிசை

புனித தோமியர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி சமநிலையில் முடிவுற்ற போதிலும் முதல் இன்னிங்ஸின் புள்ளிகளின் படி புனித தோமியர் கல்லூரி வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜோசப் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது. துணித் வேல்லாலகே 59 ஓட்டங்களையும் ஜொஹான் டி சில்வா 49 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் சனொன் பெர்னாண்டோ மற்றும் முஹமட் அசாம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தோமியர் கல்லூரி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. மந்தில விஜேரத்ன 55 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் ஜோசப் கல்லூரியின் அசேன் டேனியல் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் ஜோசப் கல்லூரி அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 80 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 220/10 (74.4) துணித வெள்ளலாகே 59, ஜொஹான் டி சில்வா 49, லக்ஷான் கமகே 47, ஷனோன் பெர்னாண்டோ 3/20, முஹமட் அசாம் 3/62, டேஹான் ச்கேப்டார் 2/44.

புனித தோமியர் கல்லூரி, கல்கிசை (முதலாவது இன்னிங்ஸ்) – 221/7d (103) மந்தில விஜேரத்ன 55, சாலின் டி மேல் 40, சிதார ஹபுஇன்ன 39, அசேன் டேனியல் 4/57.

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 80/4 (23) யசித் ரூபசிங்ஹ 27, ரேவன் கெல்லி 23.   டேஹான் ச்கேப்டார் 3/31


மஹிந்த கல்லூரி, காலி எதிர் டி மெசனோட் கல்லூரி, கந்தானை

மஹிந்த கல்லூரி மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மஹிந்த கல்லூரி அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக 3 விக்கெட் இழப்பிற்கு 330 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடை நிறுத்திக்கொண்டது.

இளையோர் உலகக் கிண்ண பிளேட் இறுதிப்போட்டியில் இலங்கை

வினுர துள்சார 123 ஓட்டங்களையும் நவோத் பரணவிதான 121 ஓட்டங்களையும் பெற்றனர். தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் டி மெனோட் கல்லூரி அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 44 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

மஹிந்த கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 330/3d (73)  வினுர துள்சார 123, நவோத் பரணவிதான 121, KK கெவின் 50*.

டி மெசனோட் கல்லூரி, கந்தானை (முதலாவது இன்னிங்ஸ்) – 44/1


மலியதேவ கல்லூரி, குருநாகல் எதிர் புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி

பல்லேகல சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மலியதேவ கல்லூரி அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. முதித்த பிரேமதாச 63 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் ஹுசிந்து நிசங்க 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக ஆடிவரும் புனித சில்வெஸ்டர் கல்லூரி அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் சுருக்கம்

மலியதேவ கல்லூரி, குருநாகல் (முதலாவது இன்னிங்ஸ்) – 175/10 (51.4) முதித்த பிரேமதாச 63, சஞ்சீவன் பிரியதர்சன 24. ஹுசிந்து நிசங்க 5/30, கனிஷ்க ஜயசேகர 3/31, நிம்சர அத்தனகல்ல 2/40.

புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி (முதலாவது இன்னிங்ஸ்) – 129/4 (45) நதீர பாலசூரிய 39*, மஞ்சித் ராஜபக்ச 30*.