சரணவின் சகலதுறை ஆட்டத்தினால் தர்ஸ்டன் கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

204
u19 cricket 1st feb

பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் பங்கு கொள்ளும் சிங்கர் கிண்ணத்திற்கான கிரிக்கெட் தொடரில், இன்று நிறைவடைந்த போட்டிகளில் சரண நாணயக்காரவின் சிறப்பான சகலதுறை ஆட்டத்தினால் தர்ஸ்டன் கல்லூரி அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றது.

அதேபோன்று, முடிவடைந்த ஏனைய இரண்டு போட்டிகளும் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

அஷான், ரவிந்துவின் சதங்களுடன் மாரீஸ் ஸ்டெல்லா கல்லூரி வலுவான நிலையில்!

புனித ஜோசப் வாஸ் கல்லூரி எதிர் தர்ஸ்டன் கல்லூரி

ஜோசப் வாஸ் கல்லூரி அணியினர் தமது முதல் இன்னிங்சில் 82 ஓட்டங்களை மாத்திரமே பெற, தர்ஸ்டன் கல்லூரி வீரர்கள் தமது சிறப்பாட்டத்தினால் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 253 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் தமது முதல் இன்னிங்சை நிறுத்தினர்.

அவ்வணி சார்பாக ஷரன (67), இமேஷ் (54) மற்றும் நவோத் (50) ஆகியோர் அரைச் சதம் கடந்து அணிக்கு பங்களிப்பு செய்தனர். தனஞ்சய 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் பாரிய பின்னிலையில் இருந்து இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த ஜோசப் வாஸ் கல்லூரி வீரர்கள், இந்த இன்னிங்சிலும் மிக மோசமாக ஆடியமையினால் 109 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. எனவே தர்ஸ்டன் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 62 ஓட்டங்களால் வெற்றியை சுவைத்தது.

அவ்வணிக்காக தனஞ்சிய பெரேரா மாத்திரம் அதிகபட்சமாக 67 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் நவீன் 4 விக்கெட்டுக்களைப் பதம் பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்  

ஜோசப் வாஸ் கல்லூரி: 82(34.1) – அஞ்சன ருக்மல்19, சரண நாணயக்கார 6/27, அயேஷ் ஹர்ஷன் 3/13

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு: 253/8d (62) – சரன நானயக்கார 67, இமேஷ் விரங்க 54, நவோத் சமரகோன் 50, தனஞ்சய பெரேரா 5/72

ஜோசப் வாஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 109 (48.4) – தனஞ்சய பெரேரா 67, நவீன் குனவர்தன 4/20

முடிவு: தர்ஸ்டன் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 62 ஓட்டங்களால் வெற்றி


புனித செபஸ்டியன் கல்லூரி எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி

முதல் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவின்போது, முதல் இன்னிங்சில் 2௦ ஓவர்களில் 45 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான நிலையில் இருந்த புனித பெனடிக்ட் கல்லூரி அணி இன்று தமது ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

இன்றும் எதிரணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய அவ்வணியினர் 47 ஓவர்களில் வெறும் 98 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் தமது சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர்.

தனி ஒருவராக இருந்து போராடிய கவீஷ ஜயதிலக ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களைப் பெற, எதிரணியின் பந்து வீச்சில் தஷிக் பெரேரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை பெற்றார்.

பின்னர் பலோவ் ஓன் முறையில் தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த புனித பெனடிக்ட் கல்லூரி அணி, இந்த இன்னிங்சில் முதல் இன்னிங்சிற்கு மாற்றமாக மிகவும் நிதானமாக ஆடியது.

இறுதி நாளான இன்றைய ஆட்டம் நிறைவிற்கு வரும்பொழுது, அவ்வணியினர் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ஓட்டங்களைப் பெற்றனர். எனவே இந்தப் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. துடுப்பாட்டத்தில் மலீஷ 62 ஓட்டங்களைப் பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி: 233 (68,2) – டேமியன் பய்சர் 59, மலிந்த பீரிஸ் 45, ரொசான் பெர்னாண்டோ 36, கவீஷ ஜயதிலக 4/68, மகேஷ் தீக்ஷன 5/51 புனித

பெனடிக்ட் கல்லூரி: 98 (47) – கவீஷ ஜயதிலக 33, மஹேஷ் தீக்ஷன 25, தஷிக் பெரேரா 4/44

பெனடிக்ட் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 212/6(75) – மலீஷ செனவிரத்ன 62, ஷெஹான் பெர்னாண்டோ 34*, விமுக்தி டி மெல் 2/30

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. புனித செபஸ்டியன் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி.


மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் மலியதேவ கல்லூரி

தமது முதல் இன்னிங்சிற்காக 2 விக்கெட்டுகளை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இரண்டாவது நாளான இன்று தொடர்ந்து ஆடிய மலியதேவ கல்லூரி வீரர்கள் 171 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர். துடுப்பாட்டத்தில் துலாஜ் மாத்திரம் 50 ஓட்டங்களைப் பெற்றார்.

எதிரணியின் பந்து வீச்சில் ஆபாரமாக செயற்பட்ட ரவிந்து பெர்னாண்டோ வெறும் 34 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.

மாரீஸ் ஸ்டெல்லா கல்லூரி தமது முதல் இன்னிங்சில் 407 ஓட்டங்களைக் குவித்திருந்தமையினால், மலியதேவ தரப்பினருக்கு பலோவ் ஒன் முறையில் மீண்டும் தமது இரண்டாவது இன்னிங்சை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த இன்னிங்சில் தினஞ்சய (93), துலாஜ் (57) ஆகியோரின் சிறந்த ஆட்டத்தின் காரணமாக மலியதேவ அணியினர் 5 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் போட்டி நிறைவிற்கு வந்தது. எனவே இந்த ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

மாரீஸ் ஸ்டெல்லா கல்லூரி: 407/7d (74) – அஷான் பெர்னாண்டோ 117, ரவிந்து பெர்னாண்டோ 117, லசித் க்ரூஸ்புள்ளே 52, சசிந்து கொலம்பகே 41, ரொஷான் பெர்னாண்டோ 33, கவீன் பண்டார 4/72, தமித சில்வா 2/106

மலியதேவ கல்லூரி: 171 (40.5) – துலாஜ் ரனதுங்க 50, டில்ஷான் கொல்லுரே 31, ரவிந்து பெர்னாண்டோ 7/34

மலியதேவ கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்): 289/5 (75) – தினஞ்சய பிரேமரத்ன 93, துலாஜ் ரனதுங்க 57, டில்ஷான் கொல்லுரே 46, பசிந்து உசெத்தி 3/93

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. மாரீஸ் ஸ்டெல்லா கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி