இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த ரிச்மண்ட் கல்லூரி

100

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 2017/2018 பருவகாலத்திற்கான 19 வயதின் கீழ் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் 1) பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் இன்று (9) ஒரு போட்டி நிறைவடைந்ததுடன் 2 போட்டிகளின் முதல் நாள் ஆட்டம் நடைபெற்றன.

மஹாநாம கல்லூரி, கொழும்பு எதிர் மஹிந்த கல்லூரி, காலி (காலிறுதி)

கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மஹாநாம கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய மஹாநாம கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ஓட்டங்களைப் பெற்றது. மஹாநாம கல்லூரி சார்பாக பெதும் போதேஜு 41 ஓட்டங்களையும் வினுக்க ரபசிங்ஹ 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

மஹிந்த கல்லூரி சார்பாக பந்து வீச்சில் கவிந்து எதிரிவீர மற்றும் பசன் பெதன்கொட தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

மஹாநாம கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 118/8 (47) – பெதும் போதேஜு 41, வினுக்க ரபசிங்ஹ 26, கவிந்து எதிரிவீர 3/24, பசான் பெதன்கொட 3/33


குருகுல கல்லூரி, களனி எதிர் பண்டாரநயாக கல்லூரி, கம்பஹா

வெலிசர கடற்படை மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குருகுல கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது. இதன்படி அவ்வணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 256 ஓட்டங்களைப் பெற்றது. பிரவீன் நிமேஷ் 67 ஓட்டங்களையும் மலிந்து விதுரங்க 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்து மைந்தர்களின் சமரில் ஆதிக்கம் செலுத்தும் யாழ் இந்துக் கல்லூரி

பண்டாரநயாக கல்லூரி சார்பாக் பந்து வீச்சில் ஜனிந்து ஜயவர்தன 4 விக்கெட்டுக்களையும் அறோஷ மதுஷான் 3 விக்கெட்டுக்களையும் தினுஷ்க இமேஷ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடி வரும் பண்டாரநாயக கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

குருகுல கல்லூரி, களனி (முதலாவது இன்னிங்ஸ்) – 256 (67.2) – பிரவீன் நிமேஷ் 67, மலிந்து விதுரங்க 55, ஜனிந்து ஜயவர்தன 4/68, அறோஷ மதுஷான் 3/32, தினுஷ்க இமேஷ் 2/25  

பண்டாரநயாக கல்லூரி, கம்பஹா (முதலாவது இன்னிங்ஸ்) – 80/3 (27)


புனித அலோசியஸ் கல்லூரி, காலி எதிர் ரிச்மண்ட் கல்லூரி, காலி

அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் ரிச்மண்ட் கல்லூரி அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரிச்மண்ட் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை அலோசியஸ் கல்லூரி அணிக்கு வழங்கியது. இதன்படி புனித அலோசியஸ் கல்லூரி அணி 34 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

ரிச்மண்ட் கல்லூரி சார்பாக தனஞ்சய லக்ஷான் 6 விக்கெட்டுக்களையும் சந்துன் மென்டிஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரிச்மண்ட் கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆதித்ய சிறிவர்தன 68 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் ஹரீன் புத்தில 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

மனுல பெரேராவின் அபார பந்துவீச்சினால் முதல் நாள் றோயல் வசம்

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய புனித அலோசியஸ் கல்லூரி அணி சகல 141 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது.

ரிச்மண்ட் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் அம்சி டி சில்வா 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

புனித அலோசியஸ் கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 34 (27.4) – தனஞ்சய லக்ஷான் 6/08, சந்துன் மென்டிஸ் 3/08

ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 202 (67.5) – ஆதித்ய சிறிவர்தன 68, திலும் சுதீர 34, ஹரீன் புத்தில 6/48

புனித அலோசியஸ் கல்லூரி, காலி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 141 (52) – பசிந்து நாணயக்கார 36, அம்சி டி சில்வா 5/24, தனஞ்சய லக்ஷான் 3/55

முடிவு – ரிச்மண்ட் கல்லூரி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 27 ஓட்டங்களால் வெற்றி.