அபிலாஷின் சதத்துடன் புனித செபஸ்டியன் கல்லூரி வலுவான நிலையில்

114

பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவு ஒன்று கிரிக்கெட் தொடரில் பல வீரர்களது சிறந்த ஆட்டத்தினால் புனித செபஸ்டியன் மற்றும் புனித ஜோசப் கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்படைந்துள்ளது.

வத்தளை புனித அந்தோனியர் கல்லூரி எதிர் இசிபதன கல்லூரி

தமது சொந்த மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித அந்தோனியர் கல்லூரி அணித் தலைவர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை எதிரணிக்கு வழங்கினார்.

பாடசாலை கிரிக்கெட் செயற்திட்டம் மஹேலவினால் வெளியீடு

பாடசாலை கிரிக்கெட்டை ஊக்குவிப்பது…

எனினும், வத்தளை தரப்பினரின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய இசிபதன வீரர்கள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 86 ஓட்டங்களை மாத்திரமே தமது முதல் இன்னிங்சிற்காகப் பெற்றனர். பந்து வீச்சில் மிரட்டிய சனில் விதுஷ மற்றும் அவிஷ்க தரிந்து ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.  

பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த புனித அந்தோனியர் கல்லூரி வீரர்களும் சிறந்த ஆட்டத்தைக் காண்பிக்கவில்லை. அவ்வணி சார்பாக ஓரளவு சிறப்பாக ஆடிய ஜயவீர 23 ஓட்டங்களைப் பெற, வத்தளை தரப்பினர் 99 ஓட்டங்களுக்குள் சுருண்டனர். பந்து வீச்சில் தினத் திஸானாயக்க 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இன்றைய முதல் நாளிலேயே மீண்டும் தமது இரண்டாவது இன்னிங்சினைத் தொடர்ந்த இசிபதன கல்லூரி வீரர்கள் முதல் நாள் ஆட்ட நிறைவின்போது 7 விக்கெட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.  

போட்டியின் சுருக்கம்

இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 86 (31) – சனில் விதுஷ 34/4, அவிஷ்க தரிந்து 41/4

புனித அந்தோனியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 99 (30.4) – ஜயவீர 23, தினத் திஸானாயக்க 31/6

இசிபதன கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) 80/7 – ஏஷான் பெர்ணான்டோ 23*, சனில் விதுஷ 44/3


புனித செபஸ்டியன் கல்லூரி எதிர் புனித ஜோசப் கல்லூரி

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியிலும் சொந்த மைதான தரப்பினர் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று எதிரணிக்கு முதலில் துடுப்பாடும் வாய்ப்பை வழங்கினர்.

இலகு வெற்றியை சுவீகரித்த திரித்துவக் கல்லூரி

19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை…

செபஸ்டியன் கல்லூரிக்கு சனெல் பெர்ணான்டோ மற்றும் நிஷித அபிலாஷ் ஜோடி முதல் விக்கெட்டுக்காக வலுவான ஆரம்ப இணைப்பாட்டம் ஒன்றை பெற்றுக்கொடுத்தனர். இதில் அபிலாஷ் 129 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசை வீரர்களும் சிறந்த பங்களிப்பு வழங்க அவ்வணி 7 விக்கெட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை தமது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டனர்.

பின்னர் தமது இன்னிங்ஸை ஆரம்பித்த புனித ஜோசப் கல்லூரி வீரர்களும் சிறப்பாக ஆடி, இன்றைய ஆட்ட நேர முடிவின்போது 2 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி 334/7 d (72.3) – சனெல் பெர்ணான்டோ 87, நிஷித அபிலாஷ் 129, தஷிக் பெரேரா 51, அஷேன் டேனியல் 76/4

புனித ஜோசப் கல்லூரி 110/2 – டி சில்வா 63, ரெவன் கெல்லி 29

இரு போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்