டிவிஷன் – I பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிரிக்கெட் சுற்றுத் தொடரின் நான்காவது காலிறுதிப் போட்டியில், அதி சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிக்கொணர்ந்த புனித பேதுரு கல்லூரி அணி புனித தோமியர் கல்லூரி அணியுடனான இப்போட்டியினை சமநிலையில் முடித்துக்கொண்டுள்ளது.  

இன்றைய நாள் ஆட்டத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்த புனித பேதுரு கல்லூரி இப்போட்டி மூலம் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களுக்குள் உள்ள ஒரு அணியாக தெரிவாகியுள்ளதுடன் சிங்கர் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கும் தெரிவாகியுள்ளது.

ஷலீத், சந்துஷ் ஆகியோரின் அரைச்சதங்களுடன் புனித பேதுரு கல்லூரி வலுவான நிலையில்

போட்டியின் முதல் நாளில் மழை குறுக்கிட்டிருப்பினும், இறுதி நாளான இன்று போட்டி திட்டமிட்டபடி ஆரம்பமாகியிருந்தது. புனித பேதுரு கல்லூரி அணியினர் நேற்று காட்டியிருந்த சிறப்பாட்டம் மூலம் 180 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தவாறு இன்றைய ஆட்டத்தினை தொடர்ந்தனர்.

நேற்றைய நாளில் களத்தில் நின்றிருந்த லக்ஷின ரொட்ரிகோ மற்றும் அரைச் சதம் கடந்திருந்த சலித் பெர்னாந்து ஆகியோர் 81 ஓட்டங்களினை இன்று   5ஆம் விக்கெட்டிற்காக பகிர்ந்தனர்.

68 ஓட்டங்களுடன் சலித் பெர்ணாந்து இன்று 5ஆம் விக்கெட்டாக புனித பேதுரு கல்லூரி 207 ஓட்டங்களினை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார்.

எனினும் களத்தில் நின்றிருந்த லக்ஷின ரொட்ரிகோ புதிய துடுப்பாட்ட வீரருடன் சேர்ந்து 6ஆம் விக்கெட்டிற்காக 174 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பகிர்ந்து அணியினை அதிவலுவான நிலைக்கு இட்டுச்சென்றார்.

இதில் லக்ஷின சதம் கடந்து ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டதுடன், மற்றைய துடுப்பாட்ட வீரராக வந்திருந்த ரன்மித் ஜயசேனும் நுட்பமான ஆட்டத்துடன் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

இவர்களின் இருவரின் ஆட்டத்தோடு, 105 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 381 ஓட்டங்களினைக் குவித்துக்கொண்ட புனித பேதுரு கல்லூரி அணி தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து, தோமியர் கல்லூரியின் அணித் தலைவர் ரொமேஷ் நல்லப்பெரும தமது முதல் இன்னிங்சினை ஆரம்பிக்காது அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தார். இதனால், புள்ளிகள் அடிப்படையில் போட்டியின் இந்த இன்னிங்ஸ் வெற்றியினை புனித பேதுரு கல்லூரி பெற்றுக்கொண்டது.  

இலங்கையுடனான வெற்றியினால் தொடரை சமப்படுத்திய இங்கிலாந்து பன்பரி

இதனால் பெற்ற வெற்றியின் மூலம் கடந்த பருவகால சிங்கர் கிரிக்கெட் தொடரின் இணை சம்பியனான புனித பேதுரு கல்லூரி அணி வரும் வாரங்களில் இடம்பெறவுள்ள தீர்மானம்மிக்க போட்டிகளில் தர்ஸ்டன் கல்லூரி, காலி றிச்மண்ட் கல்லூரி மற்றும் ஆனந்த கல்லூரி ஆகியவற்றுடன் சேர்ந்து இவ்வருட கிண்ணத்திற்காக மோதவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி – 381/5d (105) லக்ஷின ரொட்ரிகோ 113*, சலித் பெர்னாந்து 68, சந்துஷ் குணத்திலக்க 59, ரன்மித் ஜயசேன 69*, பவித் ரத்னாயக்க 2/92, சனேன் பெர்னாந்து 2/69

போட்டி முடிவுபோட்டி சமநிலை அடைந்தது. போதுரு கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி