பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கு எதிராக ஸாஹிரா முதல் இன்னிங்ஸ் வெற்றி

167

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதின் கீழ்ப்பட்ட டிவிசன் – 1 பாடசாலைகள் இடையே நடைபெறும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் கொழும்பு ஸாஹிரா கல்லூரி மற்றும் மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிகள் இடையிலான போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை (12) பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பிரின்ஸ் ஒப் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

ஸாஹிராவுடனான போட்டியை போராடி சமநிலை செய்த லும்பினி கல்லூரி

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதின் கீழ்ப்பட்ட …

முதலில் துடுப்பாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியினர் தமது முதல் இன்னிங்ஸில் 47.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 188 ஓட்டங்களை குவித்துக் கொண்டனர்.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் பசிந்து பெதும் 46 ஓட்டங்களுடன் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய, ஸாஹிரா கல்லூரி அணியின் பந்துவீச்சில் இம்தியாஸ் ஸ்லாசா 82 ஓட்டங்களை விட்டுத்தந்து 6 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய ஸாஹிரா கல்லூரி அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 210 ஓட்டங்களை பெற்றது.

ஸாஹிரா கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் தில்சார சமிந்த அரைச்சதம் ஒன்றுடன் 54 ஓட்டங்கள் குவிக்க, கெளமால் நாணயக்கார பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சில் 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

Photos: Prince of Wales College v Zahira College | Singer U19 Division 1 Cricket Tournament 2018/19

இதன் பின்னர் 22 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி இந்த இன்னிங்ஸில் 154 ஓட்டங்களை குவித்தது.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச ஓட்டங்களை வினுஜ ரன்போல் 32 ஓட்டங்களை பெற, இந்த இன்னிங்ஸிற்கான ஸாஹிரா அணியின் பந்துவீச்சில் மொஹமட் றிபாத் 5 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 177 ஓட்டங்களை அடைய தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய ஸாஹிரா கல்லூரி அணி ஆரம்பம் முதலே கெளமால் நாணயக்காரவின் பந்துவீச்சினால் தடுமாறியது.  

புனித பத்திரிசியார் – யாழ் மத்தி மோதல் சமநிலையில்

இலங்கை பாடசாலை அணிகளுக்கிடையிலான சிங்கர் கிண்ணத்திற்கான ….

எனினும், அதிர்ஷ்டவசமாக போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேரம் நிறைவுக்கு வர போட்டி சமநிலை அடைந்து. போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது ஸாஹிரா கல்லூரி அணியினர் 22 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து  மோசமான நிலையில் காணப்பட்டிருந்தனர்.

ஸாஹிரா அணியினரை பந்துவீச்சில் மிரட்டிய கெளமால் நாணயக்கார இந்த இன்னிங்ஸில் வெறும் 09 ஓட்டங்களை மட்டும் விட்டுத்தந்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதேநேரம் போட்டி சமநிலையில் நிறைவடைந்த காரணத்தினால் போட்டியின் வெற்றியாளர்களாக முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் ஸாஹிரா கல்லூரி அணியினர் மாறினர்.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 188 (47.2) பசிந்து பதும் 46, வினுஜ ரன்புல் 28, கவிந்து டில்சான் 22, இம்தியாஸ் ஸ்லாசா 6/82

ஸாஹிரா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 210 (81.2) தில்சார சமிந்த 53, அரவிந்த் 32, கெளமால் நாணயக்கார 5/62

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 154 (54.3) வினுஜ ரன்போல் 32, மொஹமட் றிபாத் 5/51

ஸாஹிரா கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 22/6 (15) கெளமால் நாணயக்கார 5/09

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது (ஸாஹிரா கல்லூரி அணி முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் வெற்றி)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<