மஹாநாம கல்லூரிக்காக சதம் பெற்ற பவன் ரத்நாயக்க

98

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதுக்கு கீழ்ப்பட்ட டிவிஷன் – I  பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இரண்டு நாட்கள் கொண்ட முதல் தர கிரிக்கெட் தொடரில் இன்று (5) நான்கு போட்டிகள் நிறைவடைந்தன.

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை எதிர் புனித மரியாள் கல்லூரி, கேகாலை

உயன்வத்த மைதானத்தில் முடிந்த இப்போட்டியில், மாத்தறை புனித தோமியர் கல்லூரி அணி, 121 ஓட்டங்களால் கேகாலை புனித மரியாள் கல்லூரி அணியினை தோற்கடித்தது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய புனித தோமியர் கல்லூரி வீரர்கள் அவர்களின் முதல் இன்னிங்ஸை ஹரிந்து ஜயசேகர (62), நிப்புன் ருச்சிர (55*) ஆகியோரின் அரைச்சதங்களோடு 201 ஓட்டங்களுடன் நிறைவு செய்தனர். இதன்  பின்னர், தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய புனித மரியாள் கல்லூரி 77 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. புனித தோமியர் கல்லூரியின் பந்துவீச்சு சார்பில், ஹிருஷ ஜீவஜித் 4 விக்கெட்டுக்களை 17 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து கைப்பற்றியிருந்தார்.

துல்ஷான், நுவனிது ஆகியோர் அசத்த இளையோர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை

பங்களாதேஷில் நடைபெற்று வருகின்ற இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப்…

இதன்பின்னர், மீண்டும் 124 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த தோமியர் கல்லூரி மீண்டும் அரைச்சதம் தாண்டிய ஹரிந்து ஜயசேகரவின் உதவியோடு 95 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது தமது துடுப்பாட்டத்தை நிறுத்தி 220 ஓட்டங்களை மரியாள் கல்லூரியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய புனித மரியாள் கல்லூரி, தமது இரண்டாம் இன்னிங்ஸில் 98 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் படுதோல்வியடைந்தது. சச்சிர ரஷ்மிக்க இம்முறை 4 விக்கெட்டுக்களை சாய்த்து தோமியர் கல்லூரியின் வெற்றியை உறுதி செய்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 201/9d (63.1) – ஹரிந்து ஜயசேகர 62, நிப்புன் ருச்சிர 55*, தியகம 3/66

புனித மரியாள் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 77 (38.3) – ஹிருஷ ஜீவஜித் 4/17

புனித தோமியர் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 95/2d (23) – ஹரிந்து ஜயசேகர 51*

புனித மரியாள் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 98 (44.3) – சச்சிர ரஷ்மிக்க 4/24

முடிவு – புனித தோமியர் கல்லூரி 121 ஓட்டங்களால் வெற்றி

புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை எதிர் மஹாநாம கல்லூரி, கொழும்பு

அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நிறைவுற்ற மொரட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரி மற்றும் மஹாநாம கல்லூரிகளுக்கு இடையிலான இப்போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய செபஸ்டியன் வீரர்கள் 270 ஓட்டங்களை அவர்களின் முதல் இன்னிங்ஸில் குவித்தனர். இதில், ஜனிஷ்க பெரேரா 84 ஓட்டங்கள் சேர்த்து தனது தரப்பை பலப்படுத்தியதுடன், மஹாநாம கல்லூரிக்காக லஹிரு விதான மற்றும் சோனல் கமகே ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர், தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய மஹாநாம கல்லூரி 7 விக்கெட்டுக்களை இழந்து 283 ஓட்டங்கள் குவித்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது. பவன் ரத்னநாயக்க மஹாநாம கல்லூரிக்காக சதம் விளாசி 116 ஓட்டங்கள் பெற்றிருந்தார். இதேநேரம், செபஸ்டியன் கல்லூரிக்காக வினுஜ ரணசிங்க 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று (05) நடைபெற்ற ஒருநாள் பயிற்சிப்…

பின்னர், தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த செபஸ்டியன் கல்லூரி 44 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து காணப்பட்ட நிலையில், இரண்டாம் நாளின் ஆட்ட நேரம் முடிவுக்கு வர போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 270 (95.3) – ஜனிஷ்க பெரேரா 84, நிஷித அபிலாஷ் 47, சொனால் கமகே 3/32, லஹிரு விதான 3/73

மஹாநாம கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 283/7d (79.1) – பவன் ரத்னநாயக்க 116, சொனால் கமகே 62, வினுஜா ரணசிங்க 4/69

புனித செபஸ்டியன் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 44/1 (13)

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது (மஹாநாம கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி)

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் இசிபதன கல்லூரி, கொழும்பு

கட்டுனேரியவில் இடம்பெற்ற நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா மற்றும் கொழும்பு இசிபதன கல்லூரிகளுக்கு இடையிலான இப்போட்டியும் சமநிலை அடைந்தது.

முன்னதாக, போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி 249 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸில் பெற்றது. அவ்வணிக்காக ரவிந்து பெர்னாந்து அதிகபட்ச ஓட்டங்களை (90) பதிவு செய்தார். இதனை அடுத்து பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய இசிபதன வீரர்கள் 159 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தனர். இசிபதன அணிக்காக ரவிந்து ரத்னநாயக்க அரைச்சதம் பெற்ற நிலையில் அவீஷ கீஷான் 4 விக்கெட்டுக்களை மாரிஸ் ஸ்டெல்லா அணிக்காக கைப்பற்றியிருந்தார்.

இதன்பின்னர், 90 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாம் இன்னிங்சுக்காக மீண்டும் துடுப்பாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி அமந்த பெரேரா (58*), கெவின் பெரேரா (55*) ஆகியோர் பெற்ற அரைச்சதங்களுடன் 165 ஓட்டங்களோடு தமது இரண்டாம் இன்னிங்ஸை முடித்து, இசிபதன கல்லூரிக்கு 256 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்சுக்கு துடுப்பாடிய இசிபதன கல்லூரி அணி 78 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த வேளையில், போட்டியின் இரண்டாம் நாள் நிறைவுற்றது. இதனால் ஆட்டமும் சமநிலையில் முடிந்தது.

போட்டியின் சுருக்கம்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 249 (59.2) – ரவிந்து பெர்னாந்து 90, அஷான் பெர்னாந்து 72, தெவிந்து திக்வெல 3/04

இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 159 (55) – ரவிந்து ரத்னநாயக்க 54, காலிக் அமாத் 33, அவீஷ கீஷான் 4/38

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 165/3d (30) – அமந்த பெரேரா 58*, கெவின் பெரேரா 55*

இசிபதன கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 78/5 (14)

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது. (மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி)

ஜனாதிபதி கல்லூரி, கோட்டை எதிர் தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை

புலத்சிங்களயில் முடிந்த கொழும்பு ஜனாதிபதி கல்லூரி மற்றும் அம்பலாங்கொடை தர்மாசோக கல்லூரிகளுக்கு இடையிலான இப்போட்டியும் சமநிலை அடைந்தது.

ஆரோன் பின்ச் தலைமையில் T20 தொடரில் விளையாடவுள்ள அவுஸ்திரேலியா

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20 தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின்…

போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜனாதிபதி கல்லூரி வீரர்கள் முதல் இன்னிங்ஸில் 130 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர். லொஹான் ஆரோஷன ஜனாபதி கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்களில் ஆறு பேரின் விக்கெட்டுக்களை தர்மாசோக கல்லூரிக்காக சாய்த்திருந்தார். இதன் பின்னர், தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய தர்மாசோக கல்லூரி அணி 185 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சுக்காக எடுத்தது. தர்மாசோக கல்லூரியின் துடுப்பாட்டத்தில் சேனா தேஸாய் 67 ஓட்டங்கள் குவிக்க, ஜனாதிபதி கல்லூரிக்காக தினித் நெலும்தெனிய 4 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

பின்னர், தமது இரண்டாம் இன்னிங்சுக்காக துடுப்பாடிய ஜனாதிபதி கல்லூரி சேனன் கேசரவின் அரைச்சதத்தோடு (63) 197 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்த போது தமது துடுப்பாட்டத்தை நிறுத்தி 252 ஓட்டங்களை போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய தர்மாசோக கல்லூரி 9 ஓட்டங்களுக்கு விக்கெட் இழப்பின்றி  காணப்பட்ட நிலையில், இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிய ஆட்டமும் சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 130 (39.2) – லொஹான் அரோஷன 6/36

தர்மாசோக கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 185 (66) – சேன தேஸாய் 67, தினித் நெலும்தெனிய 4/57

ஜனாதிபதி கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 197/9d (33.5) – சேனன் கேசர 63

தர்மாசோக கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 9/0 (5)

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது (தர்மாசோக கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<