ஹசித போயகொடவின் சதத்தின் உதவியால் காலிறுதிக்குத் தெரிவான திரித்துவக் கல்லூரி

129

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் மற்றுமொரு போட்டியில் கொழும்பு ஆனந்த கல்லூரியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி கண்டி திரித்துவக் கல்லூரி அணி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான் இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற திரித்துவக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை ஆனந்த கல்லூரி அணிக்கு வழங்கியது.

சுதந்திர கிண்ண தொடரில் இலங்கை அணியின் வியூகம் குறித்த சந்திமாலின் கருத்து

இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய ஆனந்த கல்லூரி அணி 47.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அவ்வணி சார்பாக லஹிரு ஹிரண்ய 52 ஓட்டங்களையும் அசெல் சிகெரா 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர். பந்து வீச்சில் திரித்துவக் கல்லூரி சார்பில் திசரு தில்ஷான் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் விமுக்தி நெதுமால் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

191 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய திரித்துவக் கல்லூரி அணி 30 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அவ்வணி சார்பாக ஹசித போயகொட 112 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்ததுடன் புபுது பண்டார ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களைப் பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி, கொழும்பு – 190 (47.4) – லஹிரு ஹிரண்ய 52, அசெல் சிகெரா 36, திசரு தில்ஷான் 4/22, விமுக்தி நெதுமால் 3/38

திரித்துவக் கல்லூரி, கண்டி – 191/2 (30) – ஹசித போயகொட 112, புபுது பண்டார 61*

முடிவு – திரித்துவக் கல்லூரி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.