போனஸ் புள்ளியால் அரையிறுதி வாய்ப்பை பெற்ற கிரிந்திவல மத்திய கல்லூரி

48

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்று வரும் 15 வயதுக்கு உட்பட்ட பிரிவு 3 (டிவிஷன் – 3) பாடசாலைகளுக்கு இடையிலான  கிரிக்கெட் தொடரின் காலிறுதிக்கு கிரிந்திவல மத்திய கல்லூரி தகுதிபெற்றுள்ளது.

சிங்கர் 15 வயதுக்கு உட்பட்ட பிரிவு 3 பாடசாலைகளுக்கு இடையிலான  கிரிக்கெட் தொடர் ஒரு நாளில் நான்கு இன்னிங்சுகள் கொண்ட போட்டிகளாக நடைபெற்று வருகின்றன.

இதில் நடைபெற்று முடிந்த காலிறுதிப் போட்டிகளில் போனஸ் புள்ளியினால் வெற்றி பெற்ற கொழும்பு ரோயல் கல்லூரி அரையிறுதிக்கு தகுதிபெற்றிருந்ததுடன், மற்றுமொரு போட்டியில் முதல் இன்னிங்ஸ் புள்ளிகளால் வெற்றிபெற்ற மொறட்டுவ பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி காலிறுதி வாய்ப்பை பெற்றிருந்தது. அத்துடன் இறுதியாக நேற்று (7) நடைபெற்ற மூன்றாவது காலிறுதிப் போட்டியில் ஜா-எல கிரிஸ் கிங்ஸ் கல்லூரி, குடாபுத்கமுவ, ஸ்ரீ இராஜசிங்க மத்தியக் கல்லூரியை முதல் இன்னிங்ஸ் புள்ளிகளால் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்திருந்தது.

அரையிறுதிக்குள் நுழைந்த ரோயல் மற்றும் பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரிகள்

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்று வரும் 15 வயதுக்கு உட்பட்ட பிரிவு 3 (டிவிஷன் – 3) பாடசாலைகளுக்கு இடையிலான …

இந்ந நிலையில் இன்று (08) வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதி காலிறுதிப் போட்டியில் கிரிந்திவல மத்திய கல்லூரி மற்றும் நீர்கொழும்பு ஹரிச்சந்திர தேசிய கல்லூரிகள் பலப்பரீட்சை நடத்தின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்த கிரிந்திவல மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸ் புள்ளிகளால் வெற்றியை தக்கவைத்துக்கொண்டது.

போட்டியின் ஆரம்பத்திலிருந்து சற்று நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த கிரிந்திவல மத்திய கல்லூரி அணி, 54.4 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது. அந்த அணி சார்பில் துவிந்து நிஷான் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களையும், சஷ்ரிக சாமத் 64 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் தெவிந்த தர்ஷன 61 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தடுமாற்றத்துக்கு மத்தியில் துடுப்பெடுத்தாடிய நீர்கொழும்பு ஹரிச்சந்திர தேசிய கல்லூரி 43 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து, 97 ஓட்டங்களை பெற்றிருந்த போது நடுவர்களால் போட்டி நிறுத்தப்பட்டது. இறுதியில் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயற்பட்ட கிரிந்திவல மத்தியக் கல்லூரிக்கு வெற்றி வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், அந்த அணி அரையிறுதிக்கான வாய்ப்பையும் உறுதிசெய்தது.

இதேவேளை முதலாவது இன்னிங்சில நீர்கொழும்பு ஹரிச்சந்திர தேசிய கல்லூரி சார்பாக அதிகபட்சமாக மிஹிஷான் பெர்னாண்டோ 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பவர மனீஷ மற்றும் விபூதி பிரியன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

கிரிந்திவல மத்தியக் கல்லூரி – 207/8d (54.4) – துவிந்து நிசான் 102*, சஷ்ரிக சாமத் 64, தெவிந்த தர்ஷன 61/3

நீர்கொழும்பு ஹரிச்சந்திர தேசிய கல்லூரி – 97/7 (43) –  மிஹிசான் பெர்னாண்டோ 23, பவர மனீச 33/2, விபூதி பிரியன் 8/2

முடிவு – கிரிந்திவல மத்தியக் கல்லூரி போனஸ் புள்ளியால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது

 >>மேலும்பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<