நியூஸிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் இணைந்த ட்ரென்ட் போல்ட்

84

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட், இந்திய வம்சாவளி வீரர் அஜாஸ் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேநேரம், இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட வேகப்பந்துவீச்சாளர் கைல் ஜேமிசனுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இமாலய இலக்கை கடந்து டி20 தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

ஜொஸ் பட்லர், ஜொனி பெயர்ஸ்டோ மற்றும் அணித்தலைவர் ஒயின் மோர்கன் ஆகியோரின் அதிரடி…

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளது.

இது இவ்வாறிருக்க, இந்த போட்டிக்கான 13 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது.

உபாதை காரணமாக இந்தியாவுடனான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடாத வேகப்பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இறுதியாக அவர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்பேர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். 

இதேபோன்று நியூசிலாந்து அணியின் மிகவும் உயர்ந்த வேகப்பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். 

மேலும், சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான மிட்செல் சான்ட்னர் அணியிலிருந்து வெளியேறியுள்ளதால், அவருக்குப் பதிலாக இந்திய வம்சாவளி வீரரான அஜாஸ் படேல் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்று நியூஸிலாந்து அணி கைப்பற்ற அஜாஸ் படேல் முக்கிய காரணமாக இருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

இதுதவிர, ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜீட் ராவல் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் மெட் ஹென்றி ஆகியோர் இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.

கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில், டொம் லேதம், டொம் பிளெண்டல், ரொஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோல்ஸ், பிஜே வொட்லிங், கொலின் டி கிராண்ட்ஹோம், டிம் சௌத்தி, நீல் வோக்னர், ட்ரென்ட் போல்ட், அஜாஸ் படேல், கெய்ல் ஜேமிசன், டார்ல் மிட்செல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அனுபவ வீரர் ரொஸ் டெய்லருக்கு இது 100 ஆவது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது. 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் களமிறங்கும் 4 ஆவது நியூசிலாந்து வீரர் ரொஸ் டெய்லர் என்பது குறிப்பிடத்தக்கது. 

த்ரில் வெற்றி மூலம் தென்னாபிரிக்காவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து

டொம் கர்ரன் கடைசி இரண்டு பந்துகளுக்கும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன்…

இந்த மைல்கல்லை ஏற்கெனவே பிரெண்டன் மெக்கலம், டேனியல் விட்டோரி, ஸ்டீபன் பிளெமிங் ஆகியோர் கடந்திருந்தார்கள்.

ஆனால், ரொஸ் டெய்லர்தான் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய முதல் சர்வதேச வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து குழாம்

கேன் வில்லியம்சன் (தலைவர்), டொம் லேதம், ரொஸ் டெய்லர், நீல் வொக்னர், கொலின் டி கிராண்ட்ஹோம், ஹென்ரி நிக்கோல்ஸ், பிஜே வொட்லிங், டாம் பிளென்டெல், ட்ரென்ட் போல்ட், கைல் ஜேமிசன், அஜாஸ் படேல், டெரல் மிச்செல், டிம் சௌத்தி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<