TPT ஹொக்கி செவன்ஸ் மும்முனைப் போட்டிகள் செப். 10ஆம் திகதி ஆரம்பம்

214
Trinity-Peter's-Thomas' Hockey Carnival
TPT ஹொக்கி போட்டிகள் (புனித திரித்துவ கல்லூரி, புனித பேதுரு கல்லூரி மற்றும் புனித தோமஸ் கல்லூரி) எதிர்வரும் 2016, செப்டம்பர் 10ஆம் திகதி கொழும்பு, பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்தும், இரண்டாவது முறையாக, குறித்த கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கத்தால், இப்பாடசாலைகளுக்கிடையே புரிந்துணர்வை வலுப்படுத்தும் வகையில், இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Inline image 1

ஹொக்கி போட்டிகளில், பல தசாப்த காலப் பின்னணியைக் கொண்டுள்ள இம்மூன்று பாடசாலைகளும் சுழற்சி முறையில் போட்டிகளை ஒழுங்கு செய்கின்றனர். அந்த அடிப்படையில், கடந்த ஆண்டு TPT ஹொக்கி போட்டிகள் புனித தோமஸ் பழைய மாணவர் சங்கத்தால் நடாத்தப்பட்டிருந்ததுடன், இம்முறை புனித பேதுரு கல்லூரி பழைய மாணவர் சங்கத்தால் இப்போட்டிகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.

இப்போட்டியானது, 5 வெவ்வேறான பிரிவுகளில் நடாத்தப்படும். 19 வயதுக்கு கீழ், 20 முதல் 30 வயதுக்கிடையில், 30 முதல் 40 வயதுக்கிடையில் மற்றும் 40 வயதுக்கு மேல் என போட்டிகள் நடைபெறும். இம்முறை செயற்பாட்டுக் குழு 15 வயத்துக்குட்பட்டோர் பிரிவை, TPT ஹொக்கி போட்டிகளில் அறிமுகப்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒவ்வொரு பாடசாலையிலும் இருந்து ஒரு ஹொக்கி வீரரைத் தெரிவு செய்து, குறிப்பிட்ட வீரருக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களுக்கு அனுசரணை வழங்குவற்கும் செயற்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது.  

நடப்பு சாம்பியனாக புனித தோமஸ் கல்லுரி இருக்கும் அதே வேளை, 20 முதல் 30 மற்றும் 40 வயதுக்கு மேல் பிரிவுகளில், கடந்த ஆண்டு புனித திரித்துவக் கல்லூரி பழைய மாணவர் அணியை வெற்றி கொண்டு இப்போட்டியில் புனித பேதுரு கல்லூரி பழைய மாணவர் அணி கலந்து கொள்கிறது.

வெற்றி பெறும் அணிகளுக்கு வெவ்வேறான நினைவு கேடயங்கள் வழங்கப்படும். புனித பேதுரு கல்லூரி பழைய மாணவர்களாகிய மரியோ ஜோசப் மற்றும் கோட்வின் சாலமன் 20-30 க்கான நினைவு கேடயத்தையும், புனித திரித்துவ விளையாட்டுக் கழகம் 30-40 க்கான நினைவு கேடயத்தையிம், Dr. சரத் டீ அல்விஸ் தனது தந்தையின் நினைவாக 40 மேல்  வயத்துக்கான நினைவு கேடயத்தையிம் நன்கொடை வழங்கி TPT ஹொக்கிபோட்டிகளுக்கு பங்களிப்பு வழங்கினர்.

TPT ஹொக்கி போட்டிகள் அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு அருட்தந்தை ட்ரெவர் மார்ட்டின் மற்றும் பழைய மாணவர் சங்கத்தலைவர் தலைமையில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரம் இறுதி நிகழ்வுக்கு மூன்று பாடசாலைகளையும் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்