ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் காலிறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை ஆரம்பம்

703

20 வயதுக்கு உட்பட் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிப் போட்டிகள் நவம்பர் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் சுகததாச அரங்கில் நடைபெறவுள்ளன.

புனித பேதுரு கல்லூரி எதிர் புனித ஜோசப் கல்லூரி

அதிர்ச்சி தரும் வகையில் “A” குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த புனித ஜோசப் கல்லூரி இரண்டாவது ஆண்டாகவும் புனிதர்களின் சமருக்காக தயாராகியுள்ளது. புனித ஜோசப் கல்லூரி 1 போட்டியில் வெற்றி மற்றும் 3 சமநிலைகளுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ளது. முழங்கால் காயத்திற்கு உள்ளான அசேல மதுஷானின் சேவையை அந்த அணி இழந்துள்ளது. எவ்வாறாயினும் அந்த அணி ஒரு வலுவான அணியாகவே களமிறங்கவுள்ளது.

வான்டேஜ் எப்.ஏ கிண்ண அரையிறுதி மோதல்கள் இவ்வார இறுதியில்

இலங்கையின் மிகப் பழமையான கால்பந்து தொடரான வான்டேஜ் எப்.ஏ…

மறுபுறம் ஆரம்பப் போட்டியில் தோல்வியுற்ற புனித பேதுரு கல்லூரி, “D” குழுவில் கோல் வித்தியாசத்தில் முதலிடத்தை பிடித்தது. ஜோசப்-பேதுரு சமரில் 2-0 என முன்னிலை பெற்ற பின் தோல்வியை சந்தித்த புனித பேதுரு கல்லூரி அவதானத்துடன் விளையாடும் என்று எதிர்பார்க்கலாம். அந்த அணி தேசிய அணித்தலைவர் ஷபீர் ரசூனியில் அதிகம் தங்கியுள்ளது. அதேபோன்று திறமையான வீரர்கள் பலரையும் கொண்டிருப்பதால் எதிரணிக்கு சவால் கொடுக்க முடியும்.

ஸாஹிரா கல்லூரி, கொழும்பு எதிர் புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம்

பாடசாலை கால்பந்து மன்னராக திகழும் ஸாஹிரா கல்லூரி “C”  குழுவில் முதலிடத்தை பிடித்து 2016 இல் 19 வயதுக்கு உட்பட்ட தொடரின் இறுதிப் போட்டியில் வீழ்த்தியது போல் மீண்டும் முன்னிலை பெற திட்டமிட்டுள்ளது. அந்த அணி யாழ்ப்பாணம் மஹாஜனா கல்லூரிக்கு எதிரான போட்டியை சமநிலை செய்தது மாத்திரமே பின்னடைவை சந்தித்த தருணமாக இருந்தது. இந்நிலையில் மற்றொரு வடக்கு அணி காலிறுதியில் சவாலாக வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புனித பத்திரிசியார், புனித செபஸ்டியன் கல்லூரிக்கு எதிரான போட்டியில் பெற்ற மிகப்பெரிய வெற்றியின் உதவியுடன் “B” குழுவில் முன்னேற்றம் கண்டது. குழுநிலை போட்டியில் யாழ். வீரர்கள் பெற்ற கோல்கள் ஸாஹிராவுக்கு சவாலாக அமையக்கூடும்.

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு எதிர் மஹாஜனா கல்லூரி யாழ்ப்பாணம்“B” குழுவில்முதலி  டம்பிடித்த பெரிதும் எதிர்பார்க்கப்படாத அணியாக மாரிஸ் ஸ்டெல்லா சம்பியனாகும் நோக்குடன் முன்னேறி வருகிறது. குழு நிலையில் அதிக கோல் பெற்றவராக முன்னேற்றம் கண்டிருக்கும் தரிந்து சில்வா நீர்கொழும்பு வீரர்களை வழிநடத்தவுள்ளார். குழுநிலை போட்டிகளில் மாரிஸ் ஸ்டெல்லா வீரர்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ளவில்லை என்பதோடு அதனைத் தொடர அந்த அணி எதிர்பார்த்துள்ளது.

இலங்கை அணியில் சந்திமாலின் இடத்திற்கு தனுஷ்க குணத்திலக்க

உபாதைக்குள்ளான இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால், இங்கிலாந்து…

மஹாஜனா கல்லூரி அதிக இடைவெளியுடன் “C” குழுவில் இரண்டாவது இடத்தை பிடித்து அரையிறுதி எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே களமிறங்கவுள்ளது. அதிக உடல் உத்வேகத்துடன் விளையாடும் மஹாஜனா கல்லுரி கடந்த நான்கு போட்டிகளிலும் 3 கோல்களை மாத்திரம் விட்டுக் கொடுத்த மாரிஸ் ஸ்டெல்லா பின்கள வீரர்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள். ஷஷிகுமார் கனுஜனின் ஆட்டம் அவதானிக்கப்பட வேண்டியதாகும்.

ஸாஹிரா கல்லூரி, கம்பளை எதிர் ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி, கொழும்பு

“A” குழுவில் முதலிடம் பிடித்த கம்பளை ஸாஹிரா கல்லூரி மற்றொரு சவாலான கொழும்பு அணியை எதிர்கொள்ளவுள்ளது. 3 வெற்றியைப் பெற்ற அந்த அணி புனித ஜோசப் கல்லூரியை இரண்டாவது இடத்திற்கு தள்ள முடிந்தது. பாசித் அஹமட்டின் ஆட்டம் அவதானிக்கப்பட வேண்டியது என்பதோடு பாடசாலை கால்பந்து அணியில் மீண்டும் மிளிர்வதற்கு அந்த அணிக்கு வாய்ப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது.

கால்பந்து எனும்போது தனக்கென ஒரு வரலாறு மற்றும் கலாச்சாரத்தை கொண்ட ஹமீட் அல் ஹுஸைனி தமது திறமையை மேலும் வெளிப்படுத்த எதிர்பார்த்துள்ளது.  சிரேஷ்ட அகில இலங்கை கிண்ணத்தை இழந்தபோதும் உள்ளூர் கழகங்களுக்கு விளையாடும் அனுபவம் பெற்ற அணியை கொண்டதாக ஹமீட் அல் ஹுஸைனி உள்ளது.