விளையாட்டுத்துறை அமைச்சின் 50ஆவது ஆண்டு நிறைவு பொன் விழாவை முன்னிட்டு கொழும்பு 7இல் அமைந்துள்ள டொரின்டன் விளையாட்டு மைதானத்தை சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானமாக மீள் கட்டுமானம் செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழா நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
190 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் நிர்மானிக்கப்படவுள்ள இம்மைதானத்தில் பார்வையாளர் அரங்கு, உடற்பயிற்சி மத்திய நிலையம் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளை மேற்கொள்ளத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் உள்ளடங்குகின்றன.
நுவரெலியாவில் அதியுயர் விளையாட்டு பயிற்சிக்கூடம்
நுவரெலியாவில் நிர்மாணிக்கப்படவுள்ள அதியுயர் தொழில்நுட்பத்துடன் கூடிய விளையாட்டு..
ஆரம்ப காலத்தில் சுதந்திர சதுக்க மைதானதமாக விளங்கிய இம்மைதானத்தை 1955ஆம் ஆண்டு முன்னாள் பிரதமரான சேர். ஜோன் கொத்தலாவலவினால் ஆசியாவின் சிறந்த மைதானமாக நிர்மானிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் இதன் கட்டுமானப் பணிகள் 1969இல் ஆரம்பிக்கப்பட்டதுடன், அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த வி.ஏ சுகததாஸவினால் இதன் நிர்மானப்பணிகளின் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. பின்னர், முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்கவினால் மைதானம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த பல வருடங்களாக எந்தவொரு மீள் கட்டுமானமும், வசதிகளுமின்றி பயன்படுத்தப்பட்டு வந்த இந்த மைதானத்தை தற்போதைய காலத்திற்கு உகந்த வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் யோசனைக்கமைய நிர்மானிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேவேளை, நீண்ட காலமாக புனரமைக்கப்படாது கைவிடப்பட்ட நிலையில் இருந்த சுகததாஸ விளையாட்டு மைதான செயற்கை ஓடுபாதை உள்ளிட்ட அனைத்து நிர்மானப் பணிகளையும் எதிர்வரும் 2 மாதங்களில் நிறைவுக்கு கொண்டுவரவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதன்போது தெரிவித்தார்.
தெற்காசிய கராத்தே சம்பியன்ஷிப்பில் ஹெட்ரிக் தங்கம் வென்ற பாலுராஜ்
தெற்காசிய கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய நான்காவது தெற்காசிய கராதே சம்பியஷிப் போட்டித் தொடரில்..

விளையாட்டு மைதான செயற்கை ஓடுபாதை நிர்மானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்களாகின்ற நிலையில், அதன் குத்தகை ஏலம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளால் நிர்மானப் பணிகள் மிக நீண்ட காலமாகப் பூரணப்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.
அதேபோன்று, பாரிய தொகை செலவில் மேற்கொள்ளப்பட்ட தியகம மைதான ஓடுபாதையும் சிறந்த தரத்தில் இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





















