உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பிரகாசித்த முன்னணி வீரர்கள்

218
ICC Collage
Image Courtesy - Getty

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்னும் ஒருசில நாட்களில் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் அனைத்து அணிகளும் களமிறங்குகின்றன. இதற்காக ஒவ்வொரு அணிகளும் சிரேஷ்ட வீரர்களைப் போல இளம் வீரர்களுக்கு அவ்வப்போது வாய்ப்புகளை வழங்கி இறுதி 15 பேர் கொண்ட அணியை களமிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும். இதனால் இறுதி பதினொருவர் அணியில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு வீரரும் தமது நாட்டுக்காக உலகக் கிண்ணத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கனவுடன் விளையாடுவார்கள்.  

உலகக் கிண்ணத்தில் ஓட்ட இயந்திரமாக ஜொலித்த நட்சத்திரங்கள்

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் இங்கிலாந்து பக்கம் திரும்பியுள்ளது. உலகக் கிண்ணத்

அதுமாத்திரமின்றி, உலகக் கிண்ணம் போன்ற மிகப் பெரிய போட்டித் தொடரில் குறிப்பாக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் பிரகாசித்து தமது அணிக்காக உலகக் கிண்ணத்தைப் பெற்றுக்கொடுத்த முன்னணி வீரர்கள் தொடர்பில் இந்த கட்டுரை ஆராயவுள்ளது.

ரிக்கி பொண்டிங் (அவுஸ்திரேலியா)

அவுஸ்திரேலிய அணியின் வெற்றி நாயகனாகவும், தலைவராகவும் விளங்கிய ரிக்கி பொண்டிங், 2003 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் அபாரமாக விளையாடினார். இலங்கைக்கு எதிரான சுப்பர் – 6 போட்டியில் சதம் (114) கடந்து அவ்வணிக்கு வெற்றியைக் பெற்றுக் கொடுத்த அவர், இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் விஸ்வரூபம் எடுத்தார்.

ஜோஹன்ஸ்பேர்க் வொன்டரஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 359 ஓட்டங்கiளைக் குவித்து மலைக்க வைத்தது. உலக கிண்ண இறுதி ஆட்டத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகவும் இது பதிவாகியது. அந்த அணிக்காக அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் 121 பந்துகளில் 140 ஓட்டங்களை விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் அடங்கும். அத்துடன், உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் தனிநபர் அதிகபட்ச ஓட்டத்தையும் அவர் பதிவு செய்தார்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் டெண்டுல்கர் மெக்ராத்தின் முதல் ஓவரிலேயே 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பிறகு விரேந்தர் ஷெவாக் (82), டிராவிட் (47) தவிர எந்தவொரு வீரரும் தாக்குப்பிடிக்கவில்லை. இறுதியில் 39.2 ஓவர்களில் இந்திய அணி 234 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.

இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஆவது முறையாக உலகக் கிண்ணததை உச்சிமுகர்ந்தது. உலகக் கிண்ணத்தை மூன்று முறை கைப்பற்றிய முதல் அணி என்ற பெருமையும் அவுஸ்திரேலியா வசம் ஆனது. போட்டியின் ஆட்ட நாயகனாக ரிக்கி பொண்டிங் தேர்வு செய்யப்பட்டார்.

அத்துடன், அவுஸ்திரேலிய அணிக்காக 3 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடியுள்ள பொண்டிங், 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் அந்த அணியின் தலைவராகச் செயற்பட்டு உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

வசீம் அக்ரம் (பாகிஸ்தான்)

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும். வேகப் பந்துவீச்சாளருமான வசீம் அக்ரம், உலகக் கிண்ண அரங்கில் எதிரணிகளை புரட்டி எடுத்தவர். 1984 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியில் அறிமுகமாகிய அவர், தனக்கு ஏற்பட்ட சர்க்கரை நோயை சமாளித்து கிரிக்கெட் உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தார்.

தொட முடியாத உயரத்தில் மெக்ராத்: சாதிக்க காத்திருக்கும் மாலிங்க

உலகக் கிண்ண வரலாற்றை எடுத்துக் கொண்டால் துடுப்பாட்ட வீரர்களின் அபார ஆட்டத்தால் பல அணிகள்

1992 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ண தொடரின் அரையிறுதிக்கு முன்னதாகவே பாகிஸ்தான் அணிக்கு தான் சம்பியன் பட்டம் என்று அக்ரம் சரியாக கணித்தார்.

இந்த நிலையில், மெல்பேர்னில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் சகலதுறையிலும் மிரட்டினார். 18 பந்துகளில் 33 ஓட்டங்களை விளாசிய அவர், இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களான இயென் பொத்தம், அலென் லேம்ப், கிறிஸ் லீவிஸ் உள்ளிட்ட வீரர்களின் விக்கெட்டுக்களைக் கைப்பற்றி பாகிஸ்தானுக்கு முதலாவது உலகக் கிண்ணத்தை வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

அதிகளவு விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களில் 3 ஆவது இடத்தில் உள்ளார். உலகின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான வசீம் அக்ரம், ஒருநாள் போட்டிகளில் இதுவரை 502 விக்கெட்டுக்களை வீழ்த்தி 2 ஆவது இடத்தில் உள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக ஐந்து உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 38 ஆட்டங்களில் விளையாடி 55 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இதில் 4 விக்கெட்டுக்கள் இரண்டு தடவையும், 5 விக்கெட்டுக்கள் ஒரு தடவையும் கைப்பற்றியுள்ளார்.

இதேநேரம், 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியின் தலைவராகச் செயற்பட்ட வசீம் அக்ரம், 15 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்ததுடன், அவ்வணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.

அரவிந்த டி சில்வா (இலங்கை)

6 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை ஆசிய கண்டத்தை சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தின. உலகக் கிண்ண போட்டியை 2 ஆவது முறையாக நடத்தும் வாய்ப்பை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் பெற்றன. இலங்கைக்கு முதல் முறையாக இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பு கிட்டியது.

பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இலங்கையும், மார்க் டெய்லர் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும் மோதின.

முதலில் துடுப்பொடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ஓட்டங்களை எடுத்தது. இதில் ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 27 ஓவர்களுக்கு 137 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து வலுவான நிலையில் இருந்தது. எனினும், மார்க் டெய்லர், ரிக்கி பொண்டிங் ஆகியோரது விக்கெட்டுக்களை அரவிந்த டி சில்வா அடுத்தடுத்து வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார். அத்துடன், 9 ஓவர்கள் பந்துவீசி 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக உலகக் கிண்ணத்தை உச்சி முகர்ந்தது.

உலகக் கிண்ண ஆட்ட நாயகர்களாக அதிகம் வலம்வந்த நட்சத்திர வீரர்கள்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் 1877ஆம் ஆண்டு ஆரம்பமாகியதுடன், ஒருநாள் போட்டிகள் 1971ஆம் ஆண்டு முதல்

அத்துடன் போட்டியை நடத்திய நாடு உலகக் கிண்ணத்தை வென்றதில்லை என்ற முந்தைய சரித்திரத்தையும் மாற்றியது.

இந்தப் போட்டியில் 3 ஆவது விக்கெட்டுக்காக அசங்க குருசிங்கவுடன் இணைந்து 125 ஓட்டங்களைப் பகிர்ந்து இறுதி வரை ஆட்டமிழக்கமால் இருந்த அரவிந்த டி சில்வா, 107 ஓட்டங்களை எடுத்து இலங்கை அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்ததுடன், ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.

விவியன் ரிச்சர்ட்ஸ் (மேற்கிந்திய தீவுகள்)

உலகக் கிண்ண வரலாற்றில் மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸின் அதிரடி ஆட்டத்தை எவரும் மறக்க மாட்டார்கள். கடந்த 1974 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அறிமுகமான அவர், அந்த அணிக்காக நான்கு தடவைகள் (1975, 1979, 1983, 1987) உலகக் கிண்ணத்தில் விளையாடியுள்ளார்.

இதில் 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவுடனான இறுதிப் போட்டியில் களத்தடுப்பில் அபாரமாக செயற்பட்டிருந்தார். அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான இயென் செப்பல், கிரேக் செப்பல் ஆகிய வீரர்களை ரன்-அவுட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் மேற்கிந்திய தீவுகள் முதல் தடவையாக உலகக் கிண்ண சம்பியனாகத் தெரிவாகியது.

இதன் பிறகு 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்திலும் அசத்திய ரிச்சர்ட்ஸ், இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சதமடித்து (138 ஓட்டங்கள்) மேற்கிந்திய தீவுகளுக்கு மீண்டும் சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்தார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 60 ஓவர்களில் 286 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 51 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது. துடுப்பாட்டத்தைப் போல பந்துவீச்சிலும் அசத்திய விவியன் ரிச்சர்ட்ஸ், 10 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 35 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றுக் கொண்டார்.

அதனைத்தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக சதம் கடந்து 181 ஓட்டங்களைப் பெற்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

அடெம் கில்கிறிஸ்ட் (அவுஸ்திரேலியா)

அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் காப்பாளராகவும், ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் விளங்கிய அடெம் கில்கிறிஸ்ட், 2007 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தை அவ்வணிக்கு பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

முந்தைய உலகக் கிண்ணத்தில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட அவுஸ்திரேலியாவின் பேராதிக்கம் இந்த உலகக் கிண்ணத்திலும் நீடித்தது.

ரிக்கி பொண்டிங், கில்கிறிஸ்ட், மெத்திவ் ஹைடன், மைக்கல் கிளார்க், அன்ட்ரூ சைமண்ட்ஸ், மைக் ஹஸ்சி, வொட்சன், மெக்ராத் என்று நட்சத்திர பட்டாளங்களை உள்ளடக்கிய அவுஸ்திரேலியாவை சந்தித்த எல்லா அணிகளுக்கும் மூக்குடைந்தன.

பிரிட்ஜ்டவுனில் அவுஸ்திரேலியா – இலங்கை அணிகள் இடையே இறுதி ஆட்டம் அரங்கேறியது. மழையால் 38 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 281 ஓட்டங்களைக் குவித்தது. விக்கெட் காப்பாளர் கில்கிறிஸ்ட் 104 பந்துகளில் 13 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 149 ஓட்டங்களை குவித்தார். உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

தொடர்ந்து விளையாடிய இலங்கை அணியில் சனத் ஜயசூரிய (63), குமார் சங்கக்கார (54) நின்ற வரை வாய்ப்பு தென்பட்டது. அவர்கள் ஆட்டமிழந்ததும் ஆட்டம் அவுஸ்திரேலியா பக்கம் திரும்பியது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் இலங்கை அணி 36 ஓவர்களில் 269 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

இசுரு உதான மற்றும் அவிஷ்கவின் உபாதை குறித்து திமுத் கருணாரத்ன

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நேற்று (24) நடைபெற்ற உலகக் கிண்ண பயிற்சிப்போட்டியில் உபாதைக்குள்ளாகியிருந்த

அவுஸ்திரேலிய அணி வெற்றியின் விளிம்பில் இருந்த போது, போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இறுதியில் இலங்கை அணியால் 36 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ஓட்டங்களை எடுக்க முடிந்தது. முடிவில் அவுஸ்திரேலிய அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 ஆவது முறையாகவும் உலகக் கிண்ணத்தை தனதாக்கியது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க