இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் தலைவராக திலகரட்ன டில்ஷான்

80

இந்த ஆண்டில், கிரிக்கெட் விளையாட்டானது ஒரு புதிய அத்தியாயத்தினை எடுக்கும் தருணத்தை உருவாக்கியிருக்கின்றது. 

ஆம், வீதி பாதுகாப்பு தொடர்பிலான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்டிருக்கும் T20 கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் 7ஆம் திகதி தொடக்கம், மார்ச் மாதம் 22ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவிருக்கின்றது.  

பதவி துறந்த சில மணிநேரத்தில் டி20 குழாமில் இடம்பெற்ற பாப் டு ப்ளெசிஸ்

சுற்றுலா அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான………..

இந்த கிரிக்கெட் தொடரில் இலங்கை, இந்தியா, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் முன்னாள் வீரர்கள் அடங்கிய கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கின்றன.  

இந்த தொடரில் பங்கெடுக்கும், ஐந்து நாடுகளின் அணிகளும் குறித்த நாடுகளின் பெயர்களோடு சேர்த்து லெஜன்ட்ஸ் என பெயரிடப்பட்ட நிலையில் இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் தலைவராக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரட்ன டில்ஷான் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.  

இதேநேரம், தொடரில் பங்கெடுக்கும் இலங்கை லெஜன்ட்ஸ் அணி சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன் மற்றும் ரொமேஷ் கலுவிதாரன ஆகிய வீரர்கள் மூலம் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவர்களோடு, இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற சச்சித்திர சேனநாயக்க, ரங்கன ஹேரத் மற்றும் சாமர கப்புகெதர ஆகியோரும் இலங்கை லெஜன்ட்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கின்றனர். 

இந்த T20 தொடரில் பங்கெடுக்கும் இலங்கை லெஜன்ட்ஸ் அணியானது தமது முதல் மோதலில் மார்ச் 8ஆம் திகதி அவுஸ்திரேலிய லெஜன்ட்ஸ் அணியினை எதிர்கொள்ளவுள்ளது. 

இலங்கை லெஜன்ட்ஸ் அணிக்குழாம் – திலகரட்ன டில்ஷான் (அணித்தலைவர்), சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன், மார்வன் அத்தபத்து, துலன்ஜன விஜேசிங்க, சாமர கப்புகெதர, பர்வீஸ் மஹரூப், ரங்கன ஹேரத், ரொமேஷ் கலுவிதாரன, உபுல் சந்தன, சச்சித்திர சேனநாயக்க, மலிந்த வர்ணபுர, திலான் துஷார

தொடரில் விளையாடும் ஏனைய அணிகளின் தலைவர்கள்

  • இந்தியா லெஜன்ட்ஸ் – சச்சின் டெண்டுல்கர்
  • மேற்கிந்திய தீவுகள் லெஜன்ட்ஸ் – ப்ரையன் லாரா
  • தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் – ஜொன்டி ரோட்ஸ்
  • அவுஸ்திரேலியா லெஜன்ட்ஸ் – ப்ரெட் லீ

தொடர் அட்டவணை

  • மார்ச் 7 – இந்தியா லெஜன்ட்ஸ் எதிர் மேற்கிந்திய தீவுகள் லெஜன்ட்ஸ், மும்பை
  • மார்ச் 8 – இலங்கை லெஜன்ட்ஸ் எதிர் அவுஸ்திரேலியா லெஜன்ட்ஸ், மும்பை
  • மார்ச் 10 – இந்தியா லெஜன்ட்ஸ் எதிர் இலங்கை லெஜன்ட்ஸ், நவி மும்பை 
  • மார்ச் 11 – மேற்கிந்திய தீவுகள் லெஜன்ட்ஸ் எதிர் தென்னாபிரிக்கா லெஜன்ட்ஸ், நவி மும்பை  
  • மார்ச் 13 – தென்னாபிரிக்க லெஜன்ட்ஸ் எதிர் இலங்கை லெஜன்ட்ஸ், நவி மும்பை 
  • மார்ச் 14 – இந்தியா லெஜன்ட்ஸ் எதிர் தென்னாபிரிக்கா லெஜன்ட்ஸ், புனே 
  • மார்ச் 16 – அவுஸ்திரேலியா லெஜன்ட்ஸ் எதிர் மேற்கிந்திய தீவுகள் லெஜன்ட்ஸ், புனே
  • மார்ச் 17 – மேற்கிந்திய தீவுகள் லெஜன்ட்ஸ் எதிர் இலங்கை லெஜன்ட்ஸ், புனே
  • மார்ச் 19 – அவுஸ்திரேலியா லெஜன்ட்ஸ் எதிர் தென்னாபிரிக்கா லெஜன்ட்ஸ், நவி மும்பை 
  • மார்ச் 20 – இந்தியா லெஜன்ட்ஸ் எதிர் அவுஸ்திரேலியா லெஜன்ட்ஸ், புனே
  • மார்ச் 22 – இறுதிப் போட்டி,  மும்பை

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<