மதுஷிகவின் ஹெட்ரிக் வீண்; சகோதரர்களின் ஒரு நாள் சமரில் தர்ஸ்டன் கல்லூரி வெற்றி

92
Thurstan College

தர்ஸ்டன் மற்றும் இசிபதன கல்லூரிகளுக்கு இடையிலான W. A. De சில்வா கிண்ணத்துக்கான ’38ஆவது சகோதரர்களின் சமர்’ 50 ஓவர்கள் கொண்ட மாபெரும் வருடாந்த கிரிக்கெட் போட்டியில் தர்ஸ்டன் கல்லூரி அணி, 75 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

பி. சரவணமுத்து மைதானத்தில் இன்று (04)  நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தர்ஸ்டன் கல்லூரி அணித் தலைவர் நிபுன் லக்‌ஷான், முதலில் துடுப்பாட தீர்மானித்தார்.

இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய தர்ஸ்டன் கல்லூரிக்கு, யெஷான் விக்கிரமாரச்சி (36) மற்றும் இமேஷ் விரங்க (33) ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக சிறப்பான ஆரம்பத்தினை பெற்றுக்கொடுத்தனர்.

இம்முறையும் சமநிலையில் முடிந்த ‘சகோதரர்களின் சமர்’

ப்லாக்ஹெம் விஜயவர்தன நினைவுச்சின்ன கிண்ணத்திற்காக நேற்று ஆரம்பமான இசிபதன

எனினும், அவ்வணிக்காக நிதானமாக துடுப்பெடுத்தாடிய வலதுகை துடுப்பாட்ட வீரர் பன்சிலு தேஷான் ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் இசிபதன கல்லூரியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் மதுசிக்க சந்தருவன் 36 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதில் நிபுன் லக்‌ஷான், ரஷ்மிக ஹிருபிடிய மற்றும் சந்தரு டயஸ் ஆகியோரின் விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய மதுசிக்க சந்தருவன், ஹெட்ரிக் சாதனையும் படைத்தார்.

பின்னர், 247 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இசிபதன கல்லூரி அணி, எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இந்த வருடத்துக்கான மாபெரும் கிரிக்கெட் சமரின் ஒரு நாள் போட்டியில் தொடர்ச்சியாக 2ஆவது தடவையாகவும் தோல்வியைத் தழுவியது.

இசிபதன கல்லூரியின் துடுப்பாட்டத்தில் எந்தவொரு வீரரும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதில் இலங்கை அணியின் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்காக விளையாடிய சஞ்சுல அபேவிக்ரம (27), அயன சிறிவர்தன (19) குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அவ்வணிக்கு ஏமாற்றம் அளித்தனர்.

எனினும், தனியொருவராக நின்று போராடிய அஷேன் குணவர்தன 32 ஓட்டங்களை அதிகபட்சமாக அவ்வணிக்காக பெற்றுக் கொடுத்தார்.

65 வருடங்கள் தாண்டியும் கிண்ணத்தை கைப்பற்ற இயலாத அணியாக மாறிய நாலந்த

கொழும்பின் முன்னணி பெளத்த பாடசாலைகளான ஆனந்த கல்லூரிக்கும், நாலந்த கல்லூரிக்கும் இடையில் ஆண்டுதோறும் இடம்பெற்றுவரும்

பந்துவீச்சில் தர்ஸ்டன் கல்லூரியின் சந்தரு டயஸ் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்ததோடு, மறுமுனையில் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் அயேஷ் ஹர்ஷன 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

இந்நிலையில், போட்டியன் சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் ஆட்டநாயன் விருதை தர்ஸ்டன் கல்லூரியின் பன்சிலு தேஷான் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒற்றை டி20 போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

தர்ஸ்டன் கல்லூரி – 247/9 (50) – பன்சிலு தேஷான் 70*, நிமேஷ் பெரேரா 41, யெஷான் விக்கிரமாரச்சி 36, இமேஷ் விரங்க 33, மதுசிக்க சந்தருவன் 5/36, சஞ்சுல இல்லங்கந்திலக 2/38

இசிபதன கல்லூரி – 172 (46.3) – அஷேன் குணவர்தன 32, சஞ்சுல அபேவிக்ரம 27, சமில்க விக்ரமதிலக 25, சந்தரு டயஸ் 3/44, அயேஷ் ஹர்ஷன 2/17

முடிவு – தர்ஸ்டன் கல்லூரி 75 ஓட்டங்களால் வெற்றி