கிண்ணத்திற்கான இறுதிக் கட்டத்திற்கு அணியை எடுத்துச்சென்றுள்ள தர்ஜினி

1603
Tharjini helps West City Falcons for win semi

இலங்கையின் முன்னணி வலைப்பந்து வீராங்கனை சிவலிங்கம் தர்ஜினி, தற்பொழுது விளையாடி வரும் அவுஸ்திரேலியாவின் City West Falcons அணி, உலகின் முன்னணித் தொடரான விக்டோரியா வலைப்பந்து லீக்கில் பூர்வாங்க இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தர்ஜினி அரையிறுதியில் பெற்ற அதிக புள்ளிகளே அந்த அணி கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பை நெருக்கியுள்ளமைக்கு முக்கிய காரணியாகும்.

ACU Sovereigns அணிக்கு எதிராக கடந்த புதன்கிழமை (09) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தர்ஜினி புள்ளிகளை அள்ளியதால் City West Falcons அணி 59-52 என்ற புள்ளிகளால் வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில் தனது திறமையை முழு அரங்கிற்கும் வெளிப்படுத்திய தர்ஜினி மாத்திரம் அணிக்காக 51 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியுடன் தர்ஜினியின் அணி பூர்வாங்க இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. அந்தச் சுற்றில் City West Falcons அணி தனது பூர்வாங்க இறுதியில் DC North East Blaze அணிக்கு எதிராக பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

அவுஸ்திரேலிய முன்னணி தொடரில் இலங்கையின் வலைப்பந்து நட்சத்திரம் தர்ஜினி

இலங்கையின் வலைப்பந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி, அவுஸ்திரேலியாவின் முன்னணி கழக அணியான …

இலங்கை வலைப்பந்தாட்ட தேசிய அணியின் நட்சத்திரமான தர்ஜினி ஆறு மாத ஒப்பந்தத்தின்படியே அவுஸ்திரேலியா சென்று விளையாடி வருகிறார்.

ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் தர்ஜினி தனது சிறந்த சூட்டிங் மூலம் அணிக்காக மொத்தம் 737 கோல்களை பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. இது சம்பியன்சிப், முதலாம் பிரிவு மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட ஆகிய அனைத்து பிரிவுகளிலும் விராங்கனை ஒருவர் பெற்ற அதிக புள்ளிகளாக இருந்தன.

யாழ்ப்பாணம் ஈவினையை பிறப்பிடமாகக் கொண்ட தர்ஜினி கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண வலைப்பந்து போட்டியில் சிறந்த சூட்டராகத் (Shooter) தேர்வானவராவார். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இலங்கை தேசிய அணிக்கு விளையாடிய பெருமை தர்ஜிக்கு உண்டு.

அவுஸ்திரேலியாவில் தனது போட்டிகள் முடிந்த பின் மீண்டும் இலங்கை திரும்பி தேசிய அணிக்கு பங்களிப்பு செய்ய தான் மிகவும் ஆரவத்துடன் உள்ளேன் என அவர் அவுஸ்திரேலியா செல்லும்பொழுது உறுதியளித்திருந்தமை இங்கு நினைவுகூறத்தக்கது.

அவுஸ்திரேலியா செல்ல முன் விமான நிலையத்தில் தர்ஜினி தெரிவித்த கருத்து