கூட்டு முயற்சியால் இலங்கையை வீழ்த்தினோம் – டு பிளெசிஸ்

943
Getty Images

இலங்கை அணிக்கு எதிராக மூன்று துறைகளிலும் ஒரு அணியாக செயற்பட்ட காரணத்தினால் தான் வெற்றிபெற முடிந்ததாகத் தெரிவித்த பாப் டு பிளெசிஸ், இது நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைத்த வெற்றியைப் போன்றதொரு உணர்வை ஏற்படுத்தி இருந்ததாகவும் தெரிவித்தார். 

இலங்கைக்கு எதிராக டர்ஹமில் நடைபெற்ற உலகக் கிண்ண லீக் கிரிக்கெட் போட்டியில் டு பிளெசிஸ், அம்லாவின் பொறுப்பான துடுப்பாட்டத்தால் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றியைப் பதிவுசெய்தது.

மீண்டும் துடுப்பாட்டத்தில் ஏமாற்றம் தந்துள்ள இலங்கை

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக டர்ஹாம் …

இம்முறை உலகக் கிண்ணத்தில் சாதிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாபிரிக்க அணி, 7 லீக் போட்டிகளில் 5 இல் தோல்வியை தழுவி அரையிறுதி வாய்பபை தவறவிட்டது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக ஆறுதல் வெற்றியொன்றைப் பெற்றுக்  கொள்ளும் நோக்கில் விளையாடிய தென்னாபிரிக்க அணி, பந்துவீச்சு, துடுப்பாட்டம் என பிரகாசித்து இலங்கை அணியை பந்தாடியது

இதனால், உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் இலங்கை அணியின் கனவு தகர்ந்தது. மறுபுறத்தில், 8 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாபிரிக்க அணி இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், இலங்கை அணிக்கெதிராக பெற்றுக்கொண்ட வெற்றி குறித்து போட்டியின் பிறகு டு பிளெசிஸ் கருத்து வெளியிடுகையில், 

இது நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைத்த வெற்றியைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. உடைமாற்றும் அறையில் எங்களிடம் திறமையான வீரர்கள் இருந்தனர். ஆனால், இந்தப் போட்டியில் மூன்று துறைகளிலும் நாங்கள் சிறப்பாகச் செயற்பட்டோம்.

இது ஒரு நல்ல போட்டி. இதில் வெற்றி பெற்றது கசப்பானதாகவும், இனிமையானதாகவும் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதேபோல இந்த வெற்றியானது மனதில் பெரியதொரு உணர்வை ஏற்படுத்தியது என்று நான் நினைக்கவில்லை. இது சற்று தாமதமான வெற்றி தான். நாங்கள் இந்தப் போட்டித் தொடர் முழுவதும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி இருந்தோம், ஆனால் முக்கியமான போட்டிகளில் அதை செய்ய தவறவிட்டோம். ஆனால் அது இன்றைய போட்டியில் நடைபெற்றது என கூறினார். 

மறுபுறத்தில் இது மிகவும் கசப்பானது, ஏனென்றால் நாங்கள் நிறைய பேரை ஏமாற்றிவிட்டோம், அதை நாங்கள் திட்டமிட்டு செய்யவில்லை. எனவே நாங்கள் உடைமாற்றும் அறையில் மகிழ்ச்சியுடன் இந்த வெற்றியைக் கொண்டாடுவோம். நாங்கள் ஒன்று சேர்ந்து இந்தப் போட்டியில் வெளிப்படுத்திய திறமையை அனுபவிப்போம். ஆனால் நாங்கள் நாடு திரும்பினால் இந்த தோல்வியின் உணர்வு இன்னும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

எனவே, இந்த வெற்றி தென்னாபிரிக்க ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் காட்சியாக இருந்தது. வீரர்கள் மிகவும் நிதானமாக விளையாடி இருந்தனர், அழுத்தத்திற்கு மத்தியில் களத்தில் மிகச்சிறப்பாக செயற்பட்டோம். இதன் விளைவாக இந்த வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இந்த அழுத்தம் போட்டி முழுவதிலும் இருந்தது. இதற்குப் பின்னால் அணியின் கூட்டு முயற்சி இருக்கிறது. எனவே, அது ஒருபோதும் பிரச்சினையாக இருக்கவில்லை. அதுதவிர திரைக்குப் பின்னால் எதுவும் இல்லை என குறிப்பிட்டார். 

இதேநேரம், லுங்கி எங்கிடிக்குப் பதிலாக டுவெய்ன் பிரிட்டோரியஸ் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். ஆனால் அவர் பந்துவீச்சில் அபாரமாக செயற்பட்டு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். எனவே பிரிட்டோரியஸை அணிக்குள் கொண்டு வந்தது குறித்து டு பிளெசிஸ் கருத்து வெளியிடுகையில், 

இதற்குமுன் நடைபெற்ற போட்டிகளில் நாங்கள் பிரிட்டோரியஸை அணிக்குள் கொண்டுவர முயற்சி செய்தோம், ஆனால் அணிச் சேர்க்கைகள் ஏற்படுத்தும் போது அவரை அணிக்குள் கொண்டு வருவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், இன்றைய போட்டியில் லுங்கி எங்கிடிக்குப் பதிலாக அவர் விளையாடி சிறப்பாக பந்துவீசியிருந்தார்.

அதேபோல, ஹஷிம் அம்லாவுடனான இணைப்பாட்டமும் இப்போட்டியை வெற்றிகொள்ள முக்கிய காரணமாக இருந்தது. இவ்வாறு மிகப் பெரிய இணைப்பாட்டமொன்றைப் பெற்றால் எந்தவொரு ஓட்ட இலக்கையும் எளிதாக துரத்தி அடிக்க முடியும். 

இந்த நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிய ஹஷிம் அம்லா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஓய்வுபெற உள்ளதாக இதற்கு முன் டு பிளெசிஸ் தெரிவித்திருந்தார். 

மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்புடன் விளையாடவில்லை – திமுத்

தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில்…

இந்த நிலையில் இன்றைய போட்டியில் அரைச் சதம் அடித்து தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஹஷிம் அம்லா தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், 

அவர் தொடர்ந்து விளையாட விரும்புகிறார் என்று கூறினார், எனவே ஓய்வு முடிவை அவரே எடுக்கட்டும் என விட்டு விட்டோம். நிச்சயமாக சிறந்த வீரர்கள் எப்போதும் ஓய்வுபெற திட்டமிடுவதை நான் பாரத்துள்ளேன், உங்களுக்குத் தெரியும், ஹஷிம் அம்லா சிறப்பாக செயற்படுகிறார். எனவே அவர் இன்னும் விளையாட விரும்பினால், அவர் தொடர்ந்து விளையாடுவார். 

அவர் தொடர்ந்து விளையாடுவதற்கு திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் தொடர்ந்து ஓட்டங்களைக் குவிக்க தவறினால் அல்லது வேறு யாராவது உங்களை அணியிலிருந்து வெளியேற்றினால், நீங்கள் வேறு ஒருவருடன் போட்டியிடுகிறீர்கள் என்று டு பிளெசிஸ் கூறினார்.

இதேநேரம், இம்முறை உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்க அணி விட்ட தவறு என்ன என்பது பற்றி டு பிளெசிஸ் கூறுகையில், இந்த தொடர் முழுவதும் நாங்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை. நீண்டதொரு இன்னிங்ஸொன்றை கட்டியெழுப்ப முடியாமல் போனது. அதிலும் பங்களாதேஷ் அணியுடனான போட்டிதான் இதில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தது என்று நான் நினைக்கிறேன்.

இங்கிலாந்து ஒரு நல்ல அணி, அந்த நாளில் அவர்கள் சிறப்பாக விளையாடி இருந்தனர். அதேபோல பங்களாதேஷ் அணி நம்பமுடியாத சிறப்பான ஆட்டத்தை விளையாடியது. இதுதான் எங்களை மிகவும் பாதித்தது. அந்த போட்டிகளில் தாக்கத்தைத் தான் நாங்கள் அடுத்த போட்டிகளுக்கு எடுத்துச் சென்றோம்.

“ரூட் மற்றும் வில்லியம்சனை பின்பற்ற வேண்டும்” – ஹதுருசிங்க

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில்…

முதல் வாரம் உண்மையில் எங்களை பின்னுக்குத் தள்ளியது. ஆனால் அது தான் எமது பின்னடைவுக்கு காரணம் என்று எங்களுக்குத் தெரியும், அதை எங்களால் மறைக்க முடியாது என தெரிவித்தார்.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<