அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்த திசரவின் பங்ளா டைகர்ஸ்

38
9https://ttensports.com/

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் T10 லீக் கிரிக்கெட் தொடரின் ஐந்தாம் நாள் (20) ஆட்டத்தில் மூன்று போட்டிகள் நடைபெற்றன.

பங்ளா டைகர்ஸ் எதிர் நோத்தர்ன் வோரியர்ஸ்

அபுதாபியின் ஷேக் ஸெயத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நோத்தர்ன் வோரியர்ஸ் அணியினை 6 ஓட்டங்களால் தோற்கடித்த பங்ளா டைகர்ஸ் அணி தொடரில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட பணிக்கப்பட்ட பங்ளா டைகர்ஸ் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 102 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

அவிஷ்கவின் அதிரடி வீண்; பங்ளா டைகர்ஸின் வெற்றியை உறுதி செய்த பெரேரா

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும்….

பங்ளா டைகர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ரொப்பி ப்ரைலிங் வெறும் 12 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

அதேநேரம் நோத்தர்ன் வோரியர்ஸ் அணியின் பந்துவீச்சில் றயாத் எம்ரிட் 2 விக்கெட்டுக்களையும், நுவன் பிரதீப், கிறிஸ் வூட் மற்றும் ஜுனைட் சித்தீக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்தனர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 103 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நோத்தர்ன் வோரியர்ஸ் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 96 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.  

நோத்தர்ன் வோரியர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அன்ட்ரூ ரசல் 25 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்களை குவித்திருந்தார். 

அதேநேரம், பங்ளா டைகர்ஸ் அணியின் வெற்றியை டேவிட் வைஸ் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் அணித்தலைவர் திசர பெரேரா, கைஸ் அஹ்மட் மற்றும் ரொப்பி ப்ரைலிங்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் உறுதி செய்திருந்தனர். 

போட்டியின் சுருக்கம் 

பங்ளா டைகர்ஸ் – 102/6 (10) ரொப்பி ப்ரைலிங்க் 36(12)*, றயாத் எம்ரிட் 16/2(2), நுவன் பிரதீப் 18/1(2)

நோத்தர்ன் வோரியர்ஸ் – 96/6 (10) அன்ட்ரூ ரசல் 41(25), டேவிட் வைஸ் 14/3(2), கைஸ் அஹ்மட் 13/1(2), திசர பெரேரா 23/1(2)

முடிவு – பங்ளா டைகர்ஸ் 6 ஓட்டங்களால் வெற்றி 

மராத்தா அரபியன்ஸ் எதிர் கர்நாடகா டஸ்கர்ஸ் 

ஷேக் அபுதாபி மைதானத்தில் இடம்பெற்ற மராத்தா அரபியன்ஸ் மற்றும் கர்நாடகா டஸ்கர்ஸ் அணிகள் இடையிலான இப்போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. 

இப்போட்டியில் மழையின் குறுக்கீடு இருந்த போதிலும் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்திருந்தது. அதன்படி முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய மராத்தா அரபியன்ஸ் அணிக்காக அதன் தலைவர் கிறிஸ் லின் மற்றும் அடம் லித் ஆகியோர் அதிரடியான முறையில் அரைச்சதங்கள் பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

போட்டியின் சுருக்கம்

மராத்தா அரபியன்ஸ் – 129/4 (10) கிறிஸ் லின் 61(31), அடம் லித் 50(20), சந்தீப் லமிச்சானே 25/1(2)

முடிவு – போட்டி முடிவுகள் ஏதுமின்றி கைவிடப்பட்டது. 

டீம் அபுதாபி எதிர் டெக்கான் கிளேடியேட்டர்ஸ் 

மழையின் குறுக்கீடு இருந்த காரணத்தினால் ஷேக் அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியும் கைவிடப்பட்டிருந்தது.

இரண்டு கைகளாலும் பந்துவீசி, விக்கெட் வீழ்த்தி அசத்திய தென்னாபிரிக்க வீரர்

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் மான்சி ………..

இப்போட்டியில் மழையின் குறுக்கீடு இல்லாத சந்தர்ப்பத்தின் போது டீம் அபுதாபி அணி தமது முதல் இன்னிங்ஸின் அனைத்து ஓவர்களையும் எதிர்கொண்டதுடன் டெக்கான் கிளேடியட்டர்ஸ் அணி, 2.2 ஓவர்கள் வரையில் எதிர் கொண்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்

டீம் அபுதாபி – 118/4 (10) வேய்ன் மேட்ஸன் 29(14), பவாட் அஹ்மட் 7/2(2)

டெக்கான் கிளேடியேட்டர்ஸ் – 25/1 (2.2) மொஹமட் ஷேஹ்சாத் 24(8)*

முடிவு – போட்டி முடிவுகள் ஏதுமின்றி கைவிடப்பட்டது. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<