தகுதியிழப்புக்கு எதிராக சுப்பர் சன் மேன்முறையீடு

518

சுகததாஸ அரங்கில் நடைபெற்ற ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் 13 ஆவது வாரத்திற்கான போட்டியின்போது பேருவளை சுப்பர் சன் அணியின் செயற்பாட்டுக்காக இலங்கை கால்பந்து சம்மேளனம் கடுமையான தண்டனை வழங்கி இருந்தது.

சுப்பர் சன் அணி தகுதி இழக்கப்பட்டு, தரமிறக்கப்பட்டது

ரினௌன் விளையாட்டு கழகத்திற்கு எதிரான போட்டியில் ஆட்டம் ….

இந்த சம்பவத்திற்கு பின்னர் இடம்பெற்ற விசாரணைகளில் தற்போதைய 2018 டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் இருந்து சுப்பர் சன் அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், 2021 வரை டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்பதற்கான தகுதி நீக்கம் உட்பட அந்தக் கழகத்தின் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன.  

இந்நிலையில் அணி மீதான கடுமையான தண்டனை மற்றும் அணியின் 10 உறுப்பினர்கள் மீதான தண்டனைகளை மீள் பரிசீலனை செய்யும்படி இலங்கை கால்பந்து சம்மேளனத்திடம் (FFSL) சுப்பர் சன் அணி விநயமாக மேற்முறையீடு ஒன்றை செய்துள்ளது.   

FFSL தலைவர் அனுர டி சில்வாவுக்கு அந்தக் கழகம் அனுப்பியிருக்கும் கடிதத்தில், தாம் பங்கேற்ற போட்டியில் இடம்பெற்ற சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,

  1. 2018 டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் சரத்து 8.1.3 மற்றும் 8.1.4 ஒழுங்குமுறைகள் பற்றி தாம் அறிந்திருக்கவில்லை என்றும் தமக்கும் 2016 இன் ஒழுங்குமுறைகள் பிரதியே கிடைத்ததாகவும் 2018க்கான புதுப்பிக்கப்பட்ட பாகம் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Photo Album – Blue Star SC vs Solid SC | Week 15 | Dialog Champions League 2018

உங்களது நடுவரிடம் இருந்து நியாயமற்ற முடிவொன்று கிடைக்கப்பெற்றதை அடுத்து அந்தத் தருணத்தில் நாம் நெருக்கடிக்கு உள்ளான நிலையில் எமது தவறை ஏற்றுக்கொள்கிறோம். வாக்குவாதம் இடம்பெற்றபோது, உங்களது உத்தியோகபூர்வ போட்டி ஆணையாளர் சம்பவ இடத்தில் இருக்கவில்லை என்பது மற்றொரு குறிப்பிடத்தக்க விடயமாகும். பிரச்சினையொன்றிபோது பொறுப்புடைய அதிகாரிகள் மற்றும் மத்தியஸ்தம் ஒரு இயற்கையான நீதிக்கு அடிப்படையாக உள்ளது.   

  1. மைதானத்தை விட்டு வெளியேறியதை மீள் பரிசீலனை செய்ய 15 நிமிடங்கள் வழங்கப்பட்டதை அடுத்து போட்டி அதிகாரிகள் மூலம் விளையாடப்படுவதற்கான வாய்ப்பு நீக்கப்பட்டது.
  2. இந்த தடையால் கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள், அதேபோன்று அந்த பகுதியில் இருந்து வரும் வீரர்களுக்கு நலன் பயக்கும் அனுசரணை ஒப்பந்தங்களையும் கழகம் இழந்துவிடும்.
  3. போட்டியின்போது இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அதிகாரிகள் மற்றும் வீரர்களின் நடத்தைக்கு எதிராக உள்ளக விசாரணை ஒன்றை கழகம் நடத்தும்.

எவ்வாறாயினும் மைதானத்தை விட்டு வெளியேறிய எமது முடிவை நாம் நியாயப்படுத்தப்போவதில்லை என்பதோடு போட்டியில் விளையாட மறுத்தது அந்த நேரத்தில் சரியானதை சரிசெய்ய நாம் எடுத்த முடிவாகும். விளையாட மறுத்ததற்காக நாம் வருந்துகிறோம். ஆனால் உங்களது அதிகாரிகள் அறிக்கை மூலம் உங்களுக்கு அறிவுறுத்தாமல் இருந்திருக்கக் கூடிய குறிப்பிட்ட சம்பவங்கள் குறித்து உங்களது சபை கருத்தில் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

  1. தமது நகரித்தின் அடையாளமாகவும் பல இளைஞர்களின் வாழ்க்கை முறையாகவும் இருப்பதால் DCL 2018 தொடரில் தமது கழகம் தொடர்ந்து விளையாட அனுமதிக்க வேண்டும் என்று அந்தக் கழகம் பரிந்துரைத்துள்ளது.

சுப்பர் சன் கழகத்தின் தலைமை பயிற்சியாளர் ஜோர்ஜ் அகஸ்டின் ThePapare.com க்கு அளித்த  பிரத்தியேக பேட்டியில் கூறியதாவது,  

“நட்புறவுடன் FFSL இனை நாம் அணுகி தண்டனையை மீள்பரிசீலனை செய்யும்படி மேன்முறையீடு செய்தோம். எதிர்வரும் நாட்களில் அவர்கள் சாதகமான முடிவொன்றை தருவார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<