ரியல் மெட்ரிடை வீழ்த்திய அட்லடிகோ மெட்ரிடுக்கு UEFA சுப்பர் கிண்ணம்

230
Photograph: Lukas Schulze/Uefa via Getty Images

கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்றி ரியல் மெட்ரிட் அணி விளையாடிய முதல் போட்டியிலேயே அட்லடிகோ மெட்ரிட் அணியிடம் 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றதன் மூலம் 2018/19ஆம் பருவகாலத்திற்கான UEFA சுப்பர் கிண்ணத்தை அட்லடிகோ மெட்ரிட் அணி தன்வசப்படுத்தியது.

ரொனால்டோவின் வருகையால் டொலர்களை அள்ளும் ஜுவான்டஸ்

உலகின் முதற்தர கால்பந்து வீரர் என வர்ணிக்கப்படும்…

கடந்த பருவகாலத்திற்கான UEFA ஐரோப்பா கிண்ணத்தை கைப்பற்றிய அட்லடிகோ மெட்ரிட் அணிக்கும், கடந்த பருவகாலத்திற்கான UEFA சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிய ரியல் மெட்ரிட் அணிக்கும் இடையில் சுப்பர் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டி எஸ்டோனியாவில் உள்ள லி குக் அரீனா அரங்கில் இடம்பெற்றது. இந்த போட்டியின் மேலதிக நேரத்தில் பெறப்பட்ட கோல்களின் மூலமே அட்லடிகோ மெட்ரிட் அணி வெற்றியை தன்வசமாக்கியது.

அட்லடிகோ மெட்ரிட் அணி வீரர்களுக்கு முதல் கோலை பெறுவதற்கு வெறும் 53 செக்கன்களே தேவைப்பட்டது. அவ்வணிக்கான முதல் கோலை முன்கள வீரரான டியாகோ கொஸ்டா பெற்றுக் கொடுத்தார்.

இதனால், கடந்த காலங்களில் ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர வீரராக செயற்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜுவன்டஸ் கழகத்துடன் இணைந்ததன் பின்னர் ரியல் மெட்ரிட் அணி பங்குபற்றும் முதல் உத்தியோகபூர்வ போட்டியின் முதல் நிமிடத்திலே எதிரணி முன்னிலை வகித்தது. எனினும், அதன் பின்னர் தொடரான சிறந்த பந்துப் பரிமாற்றத்தின் மூலம் தமது ஆதிக்கத்தை வலுப்படுத்த ரியல் மெட்ரிட் அணி வீரர்கள் தவறவில்லை.

அதன் பலனாக போட்டியின் 15ஆம் நிமிடத்தில், அட்லடிகோ மெட்ரிட் அணியின் கோல் எல்லைக்கு அருகில் மார்கோ அஸன்ஸியோ மூலம் பின்பாதங்களால் கோலை நோக்கி எடுக்கப்பட்ட முயற்சியை அட்லடிகோ அணியின் கோல் காப்பாளர் ஐன் ஓப்லக் சிறந்த முறையில் தடுத்தார்.

FA கிண்ண 64 அணிகள் சுற்றின் போட்டி விபரம்

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL)…

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இடத்தை ரியல் மெட்ரிட் அணியின் முன்கள வீரரான க்ரேத் பேல் நிரப்புவார் என்று அவ்வணியின் முன்னணி வீரர்கள எதிர்வு கூறியதற்கு ஏற்றாற்போல், போட்டியின் 27ஆம் நிமிடத்தில் மைதானத்தின் இடது மூலையிலிருந்து அட்லடிகோ மெட்ரிட் அணியின் பின்கள வீரர்களின் மூலம் விடுக்கப்பட்ட சவால்களையும் தாண்டி முதல் முறை உள்ளனுப்பப்பட்ட பந்தின் மூலம் கோல் பெற்று கரீம் பென்ஸிமா போட்டியை சமப்படுத்தினார்.

போட்டி சற்று அட்லடிகோ மெட்ரிட் அணியின் பக்கம் திரும்பும் வேளையில், முதல் பாதியின் இறுதி பத்து நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணியின் பின்களத்திலிருந்து விடுக்கப்பட்ட கவுன்டர் தாக்குதலின்போது (Counter Attack) தனித்து இருந்த பின்கள வீரரை தாண்டி மார்கோ அஸன்ஸியாவினால் போட்டியை முன்னிலைப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு கிட்டியது. எனினும் அம்முயற்சி தோல்வியில் நிறைவுற்றது.

முதல் பாதி: அட்லடிகோ மெட்ரிட் 1 – 1 ரியல் மெட்ரிட்

இரண்டாம் பாதியின் 62ஆம் நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டியின் மூலம் அவ்வணித் தலைவர் சேர்ஜியோ ராமோஸ் அணியை 2-1 என முன்னிலைப்படுத்தினார்.

13ஆவது கழகமாக கட்டார் கழகத்துடன் இணையும் சாமுவேல் எட்டோ

பார்சிலோனா மற்றும் இன்டர் மிலான் கழகங்களின் முன்னாள்..

எதிர்த்து போராடிய அட்லடிகோ மெட்ரிட் அணியின் முயற்சிகளை சிறந்த முறையில் ரியல் மெட்ரிட் அணியின் பின்கள வீரர்கள் தடுத்தாடிய போதும், 79ஆம் நிமிடத்தில் பின்களத்தில் விடப்பட்ட தவறினால் டியாகோ கொஸ்டா மூலம் போட்டியானது சமநிலைப்படுத்தப்பட்டது. இது இவர் இப்போட்டியில் பெற்ற இரண்டாவது கோலாகும்.

போட்டியின் இறுதி நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணிக்கு கிடைக்கப் பெற்ற இறுதி வாய்ப்பும் அவ்வணி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற விதத்தில் அமையவில்லை.

இரண்டாம் பாதியிலும் போட்டி சமநிலைப்படுத்தப்பட்ட நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

FIFA உலகக் கிண்ண வெற்றியாளரான பிரான்ஸ் அணியின் பின்கள வீரர் ரபாயேல் வரானே மூலம் ரியல் மெட்ரிட் அணியின் பெனால்டி எல்லையில் விடப்பட்ட தவறினால், போட்டியின் 98ஆவது நிமிடத்தில் அட்லடிகோ மெட்ரிட் அணியின் மத்திய கள வீரர் சவுல் நைஜஸ் மூலம் 3ஆம் கோல் பெறப்பட்டது.

தொடர்ந்து 105ஆம் நிமிடத்தில் தொடராக நிகழ்ந்த பந்து பரிமாற்றத்தின் மூலம் அட்லடிகோ மெட்ரிட் அணியின் மத்தியகள வீரர் கோகெ மூலம் 4ஆவது கோலும் பெறப்பட்டது.

>> குரோஷிய வீரர் மன்ட்சூகீச் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு

அட்லடிகோ மெட்ரிட் அணியின் சிறந்த தடுப்பாட்டத்தின் விளைவாக மேலதிகமாக எந்தவொரு கோலையும் பெற முடியாத நிலையில் ரியல் மெட்ரிட் அணி UEFA சுப்பர் கிண்ண இறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

இந்த வெற்றி மூலமம் அட்லடிகோ மெட்ரிட் அணி வரலாற்றிலே மூன்றாவது முறையாக UEFA சுப்பர் கிண்ணத்தை கைப்பற்றி, 2018/19 பருவகாலத்தை சிறந்த முறையில் ஆரம்பித்து வைத்துள்ளது.

முழு நேரம்: அட்லடிகோ மெட்ரிட் 4 – 2 ரியல் மெட்ரிட்

கோல் பெற்றவர்கள்

அட்லடிகோ மெட்ரிட் – டியாகோ கொஸ்டா 1’&79’, சவுல் நைஜஸ் 98’, கோகெ 105’

ரியல் மெட்ரிட் –  கரீம் பென்ஸிமா 27’, சேர்ஜியோ ராமொஸ் 63’ (பெனால்டி)

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<