வோர்னரின் அசத்தல் துடுப்பாட்டத்தால் ஹைதராபாத் அணிக்கு வெற்றி

78
iplt20.com

ஐ.பி.எல். தொடரில் நேற்று (29) நடைபெற்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி, ப்ளே-ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல். விதிமுறையை மீறிய ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் அபராதம்

ஐ.பி.எல். தொடரில் நேற்று (28) ஈடன் கார்டன் ……….

ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவரும் நிலையில், அணிகள் தங்களுடைய வெற்றிகளை உறுதிசெய்ய வேண்டிய கட்டாயத்துக்கு முகங்கொடுத்து வருகின்றன. ப்ளே-ஓஃப் சுற்றுக்கு 4 அணிகள் தகுதிபெற முடியும் என்ற நிலையில், டெல்லி மற்றும் சென்னை அணிகள் தகுதிபெற்றுள்ளன. மிகுதி உள்ள இரண்டு இடங்களுக்கு ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 அணிகள் மோதிக்கொள்கின்றன.

இதன்படி, நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி, தங்களுடைய வெற்றியை பதிவுசெய்து 12 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தங்களுடைய சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி, டேவிட் வோர்னர், மனிஷ் பாண்டே மற்றும் விரிதிமன் சஹா ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் 212 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த பருவகாலத்தில் தன்னுடைய இறுதி போட்டியில் விளையாடிய டேவிட் வோர்னர் அரைச்சதம் கடந்து 56 பந்துகளில் 81 ஓட்டங்களை பெற்றார். அத்துடன், இந்த பருவகாலத்தின் அதிகூடிய ஓட்டங்களை பெற்றவர் பட்டியலில் 692 ஓட்டங்களுடன் முதலிடத்தையும் தக்கவைத்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக பாண்டே 36 ஓட்டங்களையும், சஹா 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்து வீச்சை பொருத்தவரை, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் மொஹமட் சமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர். பின்னர், கடினமான வெற்றியிலக்கை நோக்கிய பஞ்சாப் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பஞ்சாப் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கே.எல். ராஹுல் 56 பந்துகளில் 79 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, மயங்க் அகர்வால் 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் ரஷீட் கான் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஈடன் கார்டன் மைதானத்தை சிக்ஸர்களால் அலங்கரித்த ரசல், பாண்டியா

ஐ.பி.எல். தொடரில் நேற்று (28) நடைபெற்ற………

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக 12 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி, ப்ளே-ஓஃப் வாய்ப்பினை நெருங்கியுள்ளதுடன், பஞ்சாப் அணி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. பஞ்சாப் அணி ப்ளே-ஓஃப் வாய்ப்பை தக்கவைப்பதற்கு எதிர்வரும் இரண்டு போட்டிகளில் கட்டாய வெற்றிபெற வேண்டும். அவ்வாறு, வெற்றிபெற்றாலும், ஓட்ட விகித அடிப்படையில், பஞ்சாப் அணிக்கு ப்ளே-ஓஃப் வாய்ப்பை தக்கவைப்பது கடினமான இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டி சுருக்கம்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – 212/6 (20), டேவிட் வோர்னர் 81 (56), மனிஷ் பாண்டே 36 (25), விரிதிமன் சஹா 28 (13), ரவிச்சந்திரன் அஸ்வின் 30/2, மொஹமட் சமி 36/2

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 167/8 (20), கே.எல்.ராஹுல் 79 (56), மயங்க் அகர்வால் 27 (18), ரஷீட் கான் 21/3, கலீல் அஹமட் 40/3

முடிவு –  ஹைதராபாத் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<