டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிய ஸ்மித்

71
(Photo credit should read PAUL ELLIS/AFP/Getty Images)

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையினை இன்று (3) வெளியிட்டுள்ளது. 

அதன்படி, புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணியின் விராட் கோஹ்லியினை பின்தள்ளி, முதலிடம் பெற்றுள்ளார். 

T20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுகிறார் மிதாலி ராஜ்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின்…

ஸ்டீவ் ஸ்மித் முதலிடம் பெற்றுள்ளதால் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோஹ்லி, டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருக்கின்றார். 

நிறைவுக்கு வந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது விராட் கோஹ்லி சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்த தவறியதே, டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தினை பெற காரணமாக இருக்கின்றது.

இதுதவிர ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தினை பெற மற்றைய காரணமாகும். 

2018 ஆம் ஆண்டில் பந்துசேதப்படுத்திய குற்றச்சாட்டில் போட்டித் தடையினை பெற்றுக்கொண்ட ஸ்டீவ் ஸ்மித், குறித்த தடையினை அடுத்து சர்வதேச கிரிக்கெட்டிற்கு மீள பிரவேசம் மேற்கொண்ட பின்னர் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதலிடம் பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

இதேநேரம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர் அஜிங்கயா ரஹானே, நான்கு இடங்கள் முன்னேறி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 7 ஆம் இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். 

இதேநேரம் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஜொலிக்க தவறியிருந்த இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் மூன்று இடங்கள் பின் சென்று 9 ஆம் இடத்தினை பெற்றிருக்கின்றார். இந்நிலையில் திமுத் கருணாரத்னவின் ஆறாவது இடத்தினை இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் எடுத்திருக்கின்றார்.

உஸ்மான் கவாஜாவை நீக்கிய அவுஸ்திரேலிய

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஆஷஸ்….

நியூசிலாந்து அணியின் தலைவரான கேன் வில்லியம்சன் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் தொடர்ந்தும் நீடிப்பதோடு, இந்திய அணியின் செட்டெஸ்வார் புஜாரா நான்காம் இடத்தில் காணப்படுகின்றார். 

நியூசிலாந்து அணியின் ஹென்றி நிக்கோல்ஸ் (5 ஆவது இடம்), டோம் லேதம் (8 ஆவது இடம்) ஆகியோர் முதல் பத்து இடங்களுக்குள் காணப்படும் ஏனைய துடுப்பாட்ட வீரர்களாக இருப்பதோடு, தென்னாபிரிக்க அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரரான எய்டன் மார்க்ரம் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 10 ஆவது இடத்தில் இருக்கும் வீரராக உள்ளார். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<