துடுப்பாட்டத்தில் தடுமாறிய சென். ஜோன்ஸ்; மத்தியை மீட்டெடுத்த மதுசன்

582

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையுடன் இரம்பெற்று வருகின்ற 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு II மற்றும் பிரிவு III பாடசாலை அணிகளுக்கு இடையிலான சுற்றுப்போட்டித்தொடரின் முதலாவது சுற்று ஆட்டங்கள் நாடு முழுவதும் இடம்பெற்று வருகின்றது. இன்றைய தினம் (03) யாழ்ப்பாணத்தில் இரண்டு போட்டிகள் ஆரம்பமான நிலையில், முதலாவது நாள் ஆட்டம் நிறைவிற்கு வந்திருக்கின்றது.

பிரிவு இரண்டின் குழு C இல் அங்கம் வகிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி ஸ்ரீ ஜயவர்த்தனபுர மகா வித்தியாலய அணியினரை தமது சொந்த மண்ணில் எதிர்கொண்டிருந்தனர். நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்த சென். ஜோன்ஸ் கல்லூரியினர் 43 ஆவது ஓவரில் 136 ஓட்டங்களுக்கு விருந்தினர்களின் சகல விக்கெட்டுக்களையும் சாய்த்தனர். பந்துவீச்சில் மீண்டுமொருமுறை அசத்திய சகலதுறைவீரர் மற்றும் சென். ஜோன்ஸின் தலைவர் அபினாஷ் மேலும் ஒரு 5 விக்கெட் பெறுதியினை பெற்றிருந்தார். பகுதிநேர பந்துவீச்சாளர் முக்கியமான இரண்டு இணைப்பாட்டங்களினை தகர்த்திருந்தார்.

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம்.

தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய யாழ் வீரர்கள் ஒரு முனையில் ஆரம்ப துடுப்பாட்டவீரர் தனுஜன் நிதானமாக காத்திருக்க மறு முனையில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறிய யாழ் தரப்பினை அணித்தலைவருடன் இணைந்து தனுஜன் அரைச்சத இணைப்பாட்டமொன்றினை பெற்றுக்கொடுத்து மீட்டெடுத்தார்.

யாழ் அணி 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளையில் ஆறாவது விக்கெட்டாக அபினாஷ் (27) ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வீரர்களை இடது கை வேகப்பந்து வீச்சாளர் சம்பத் ஒற்றையிலக்க ஓட்டத்துடன் ஓய்வறை அனுப்ப போட்டி சென். ஜோன்ஸின் கைகளிலிருந்து நழுவியது. 119 ஓட்டங்களுக்கு சென். ஜோன்ஸ் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுக்க 17 ஓட்டங்களால் முதலாவது இன்னிங்ஸில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர மகா வித்தியாலய அணி முன்னிலை பெற்றது.

Photos : St. John’s College Jaffna vs Sri Jeyawardhanapura Maha Vidyalaya | Day 01 | U19 Division II

தமது இரண்டாவது இன்னிங்ஸினை ஆரம்பித்த விருந்தினர்கள் 5 ஓவர்களை எதிர்கொண்டு விக்கெட்டுக்கள் எதனையும் பறிகொடுக்காது 24 ஓட்டங்களால் முன்னிலையிலுள்ளனர்.

போட்டி சுருக்கம்

ஸ்ரீ ஜயவர்த்தனபுர மகா வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) – 136 (42.2) – லிஷுக டினசர 23, மேர்ஃபின் அபினாஷ் 5/33, எல்சான் டெனுசன் 2/19   

சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் (முதல் இன்னிங்ஸ்) – 119 (42.2) – CP தனுஜன் 65, மேர்ஃபின் அபினாஷ்  27, சம்பத் நிசங்க 6/37, லக்ஷித குமார 3/47


ஸ்ரீ ஜயவர்த்தனபுர மகா வித்தியாலயம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 7/0 (5)

பிரிவு III இன் தரம் 1 இன் குழு E அணிகளுக்கு இடையிலான மோதலொன்றில் யாழ் மத்திய கல்லூரி அணியினை தமது சொந்த மைதானத்தில் எதிர்கொள்கின்றது சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி.

தொடரை தக்க வைக்க இலங்கையின் போராட்டம் எவ்வாறு அமையும்?

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் மத்திய கல்லூரியினை துடுப்பெடுத்தாடுவதற்கு அழைத்த ஸ்கந்தவரோதயா கல்லூரி 13 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்டுக்களையும் சாய்த்தது. முன் வரிசையினை வேகமாக இழந்த மத்திய கல்லூரிக்கு அணியின் தலைவர் மத்திய வரிசையில் வந்து பெறுமதியான அரைச்சதம் ஒன்றினை பெற்றுக்கொடுக்க, வினுஜன், நிதுசன் மற்றும் ராஜ் கிளின்டன் ஆகியோர் முறையே 27, 24 மற்றும் 22 ஓட்டங்களினை பெற்றுக்கொடுக்க 79 ஓவர்களில் 205 என்ற பலமான ஓட்ட எண்ணிக்கையை யாழ். மத்திய கல்லூரி பெற்றது.

ஸ்கந்தாவின் பிரதான வேகப்பந்துவீச்சாளர் சோபிதன் 5 விக்கெட்டுக்களை சாய்க்க, தனுசன் 2 விக்கெட்டுக்களை தனதாக்கினார்.

Photos : Jaffna Central College vs Skandavarodhaya College Chunnakam | Day 01 | U19 Division III

மத்தியின் பலமான பந்துவீச்சுக்கு எதிராக 15 ஓவர்களினை எதிர்கொண்ட ஸ்கந்தா வீரர்கள் 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 25 ஓட்டங்களினை சேகரித்துள்ளனர்.

நாளை போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும். முதலாவது இன்னிங்ஸில் முன்னிலை பெறுவதற்கு, ஸ்கந்தா மத்தியின் பலமான பந்துவீச்சுக்கு எதிராக 180 ஒட்டங்களை பெற வேண்டும் என்ற நிலையில் இன்று போட்டி நிறைவிற்கு வந்திருக்கின்றது.

போட்டி சுருக்கம்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – 205 (78.3) – மதுசன் 56, வினுஜன் 27, நிதுசன் 24, ராஜ் கிளின்ரன் 22, சோபிதன் 5/18, தனுசன் 2/29 

ஸ்கந்தவரோதயா கல்லூரி, சுன்னாகம் – 25/2 (15)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<