ஸ்ரீ றாஹுலவுடன் அக்குறனை அஸ்ஹர் கல்லூரிக்கு இன்னிங்ஸ் தோல்வி

301

சிங்கர் நிறுவனத்தின் அனுசரனையோடு டிவிஷன் – III பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில், கடுகஸ்தோட்டை ஸ்ரீ றாஹுல கல்லூரி அக்குறனை அஸ்ஹர் கல்லூரியை இன்னிங்ஸ் மற்றும் 61 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

தொடரின் தமது கடைசிப் போட்டியில் அஸ்ஹர் கல்லூரி வயம்ப றோயல் கல்லூரியினை தோற்கடித்த நிலையில் நேற்று (9)  ஸ்ரீ றாஹுல கல்லூரியின் சொந்த மைதானத்தில் வைத்து இந்தப் போட்டி ஆரம்பமாகியிருந்தது.

நியூசிலாந்து எதிராக சாதனை படைத்த திசர பெரேரா தரவரிசையில் அதிரடி முன்னேற்றம்

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அஸ்ஹர் கல்லூரி அணியினர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர். இதன்படி, முதலில் துடுப்பாடிய அஸ்ஹர் கல்லூரி வீரர்கள் 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர்.

அஸ்ஹர் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் M. சஹீம் 30 ஓட்டங்களுடன் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ய, ஸ்ரீ றாஹுல கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக ஆகாஷ் கார்டியவசம் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் லஹிரு விஜேரத்ன மற்றும் சஹான் மிலிந்த ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ஸ்ரீ றாஹுல கல்லூரிக்கு குஷான் செனரத் 92 ஓட்டங்களையும் லஹிரு விஜேரத்ன 55 ஓட்டங்களையும் கிரிஷாந்த குமார 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு ஸ்ரீ றாஹுல கல்லூரி தமது முதல் இன்னிங்ஸில் 70.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 316 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

இதில் அக்குறனை அஸ்ஹர் கல்லூரியின் பந்துவீச்சு சார்பாக M. யூசுப் 56 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் N. ஸெய்ட் 3 விக்கெட்டுக்களையும் S. அஹமட் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர், 193 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அக்குறனை அஸ்ஹர் கல்லூரி 132 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது.

அக்குறனை அஸ்ஹர் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் M. அஸ்ரின் மற்றும் M. சஹீம் ஆகியோர் மட்டும் 20 ஓட்டங்களை கடந்திருக்க ஏனையோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஸ்ரான்லி கல்லூரியை இன்னிங்ஸால் வீழ்தியது யாழ். இந்துக் கல்லூரி

இதேநேரம், சஹான் மலிந்த மற்றும் லஹிரு விஜேரத்ன ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து ஸ்ரீ றாஹுல கல்லூரியின் வெற்றியினை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

அஸ்ஹர் கல்லூரி, அக்குறனை (முதல் இன்னிங்ஸ்) – 123 (40.5) – M. சஹீம் 30, ஆகாஷ் கார்டியவசம் 4/21, லஹிரு  விஜேரத்ன 2/08, சஹான் மிலிந்த 2/09

ஸ்ரீ றாஹுல கல்லூரி, கட்டுகஸ்தொட்டை (முதல் இன்னிங்ஸ்) – 316 (70.3) -குஷான் செனரத் 92, லஹிரு விஜேரத்ன 55, கிரிஷாந்த குமார 54, M. யூசுப் 4/56, N. ஸெய்ட் 3/85, S. அஹமட் 2/43

அஸ்ஹர் கல்லூரி, அக்குறனை (இரண்டாம் இன்னிங்ஸ்) – 132 (41.1) – M. அஸ்ரின் 24, சஹான் மிலிந்த 3/26, லஹிரு விஜேரத்ன 3/27

போட்டி முடிவு – ஸ்ரீ றாஹுல கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 61 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<