மழை மீண்டும் போட்டியில் குறுக்கீடு, வெற்றியை சுவைக்குமா இலங்கை அணி?

216
sl v aus Day 4

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பல்லேகலேயில் கடந்த 26ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் மெத்யூஸ் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி அவுஸ்திரேலியாவி்ன் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 117 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பின்னர் அவுஸ்திரேலியா அணி முதல் இனிங்ஸைத் தொடங்கியது. இலங்கை அணியின் அனுபவ பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத், அறிமுக வீரரான சண்டகான் ஆகியோரின் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அவுஸ்திரேலியா அணி 203 ஓட்டங்ளுக்கு சுருண்டது. ஹேரத், சண்டகான் ஆகியோர் தலா 4 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினார்கள்.

அடுத்து 86 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இனிங்ஸைத் தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 80 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 282 ஓட்டங்கள் எடுத்திருந்தது. குசல் மெண்டிஸ் 169 ஓட்டங்களுடனும், பெரேரா 5 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் குசால் மெண்டிஸ் 176 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பெரேரா 12 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹேரத் 35 ஓட்டங்கள் சேர்க்க இலங்கை அணி 93.4 ஓவர்களில் 353 ஓட்டங்கள் எடுத்து சகல விக்கட்டுகளையும் இழந்தது. அவுஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

முதல் இனிங்ஸில் இலங்கை அணி 86 ஓட்டங்கள் பின்தங்கி இருந்ததால் 2-வது இன்னிங்ஸ் முடிவில் அவுஸ்திரேலியாவை விட 267 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இதனால் அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு 268 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

268 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா 2-வது இனிங்ஸைத் தொடங்கியது. வார்னர், பர்ன்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இனிங்ஸில் டக் அவுட் ஆன வார்னர் 1 ஓட்டம் எடுத்த நிலையில் ஹேரத்தின் பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த கவாஜா 18 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் பர்ன்ஸ் 29 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

27 ஓவர்கள் முடிந்த நிலையில் அவுஸ்திரேலியா 3 விக்கட்டுகள் இழப்பிற்கு 83 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வந்த நிலையில் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. அதன் பின் அந்த நிலைமை நீண்ட நேரம் தொடர்ந்ததால் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை –  117/10 ( 34.2 )

தனன்ஜய டி சில்வா 24, குசல் ஜனித் பெரேரா 20, லக்ஷன் சந்தகன் 19*, எஞ்சலோ மெதிவ்ஸ் 15,  தினேஷ் சந்திமால் 15

நேதன் லியோன் 12/3, ஜோஸ் ஹசலவூட் 21/3, மிச்சல் ஸ்டார்க் 51/2, ஸ்டிவ்  ஓ’கீபே  32/2

அவுஸ்திரேலியா – 203/10

எடம் வொக்கஸ் 47, மிட்சல் மார்ஷ் 31, உஸ்மான் கவாஜா 26 , ஸ்டீவ்  ஸ்மித் 30

ரங்கன ஹேரத் 49/4, லக்ஷன் சந்தகன் 58/4

இலங்கை  –  353/10

குசல்  மெண்டிஸ் 176, தினேஷ் சந்திமால் 42, தனன்ஜய டி சில்வா 36

நேதன் லியோன் 98/2, மிச்சல் ஸ்டார்க் 44/2

அவுஸ்திரேலியா  – 83/3

ஸ்டீவ்  ஸ்மித்  26*, ஜோ பார்ன்ஸ் 29, உஸ்மான் கவாஜா 18

லக்ஷன் சந்தகன் 13/1, டில்ருவான் பெரேரா 19/1

Batsmen Dismissal Runs Balls
Dimuth Karunarathne LBW b Starc 5 12
Kaushal Silva c Voges b Hazelwood 4 25
Kusal Mendis LBW b Hazelwood 8 7
Dinesh Chandimal  c Nevill b Hazelwood 15 54
AD Mathews  c Smith b O’Keefe 15  24 
Dhananjaya De Silva  c Burns b Lyon  24  38
Kusal Janith Perera  b Lyon  20  15
Dilruwan Perera  LBW b Lyon
Rangana Herath  LBW b Starc  10
Lakshan Sandakan  Not Out  19  15
Nuwan Pradeep c Smith b O’Keefe   0
Extras (1) TOTAL  117 (34.2 overs)

Fall of wickets :1-6 (Karunaratne, 4.1 ov), 2-15 (Mendis, 5.3 ov), 3-18 (Silva, 9.1 ov), 4-43 (Mathews, 14.2 ov), 5-67 (Chandimal, 25.6 ov), 6-87 (de Silva, 28.2 ov), 7-87 (MDK Perera, 28.4 ov), 8-94 (MDKJ Perera, 30.2 ov), 9-100 (Herath, 31.6 ov), 10-117 (Pradeep, 34.2 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Mitchell Starc  11 1 51 2
Josh Hazelwood 10 4 21 3
Steve O’Keefe 10.2 3 32 2
 Nathan Lyon   3 12
Batsmen Dismissal Runs Balls
Joe Burns b Herath 3 15
David Warner b Pradeep 0 5
Usman Khawaja LBW b Herath 26 62
Steve Smith st Chandimal b Herath 30 53
Adam Voges ct Mendis b Pradeep 47 115
Mitchell Marsh b Sandakan 31 63
Peter Neville ct Perera b Herath 2 11
Steve O’Keefe ct Mendis b Sandakan 23 80
Mitchell Starc ct Perera b Sandakan 11  29
Nathan Lyon LBW b Sandakan  17 25
Josh Hazelwood Not Out 2 18
Extras (11) TOTAL  203 (79.2 overs)

Fall of wickets: 1-3 (Warner, 2.2 ov), 2-7 (Burns, 3.6 ov), 3-69 (Smith, 21.2 ov), 4-70 (Khawaja, 23.2 ov), 5-130 (Marsh, 45.4 ov), 6-137 (Nevill, 48.3 ov), 7-160 (Voges, 62.1 ov), 8-179 (Starc, 69.5 ov), 9-190 (O’Keefe, 73.6 ov), 10-203 (Lyon, 79.2 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Nuwan Pradeep 16 6 36 2
Rangana Herath  25 8 49 4
Dilruwan Perera 14 1 43 0
 Lakshan Sandakan  21.2 58 4
 Angelo Mathews  3 1 6
Batsmen Dismissal Runs Balls
Kusal Janith LBW b Starc 4 5
Kaushal Silva LBW b O’Keefe 7 32
Dimuth Karunarathne LBW b Starc 0 3
Kusal Mendis c Neville b Starc 176 254
Angelo Mathews c Burns b Lyon 9 31
Dinesh Chandimal LBW b Marsh 42 100
Dhananjaya De Silva c Khawaja b Lyon 36 62
Dilruwan Perera LBW b Hazelwood 12 22
Rangana Herath c Henriques b Hazelwoood 35 34
Lakshan Sandakan  b Starc 9 7
Nuwan Pradeep Not Out 10 12
Extras (13) TOTAL 353 (93.4 overs)

Fall of wickets: 1-6 (MDKJ Perera, 2.2 ov), 2-6 (Karunaratne, 2.5 ov), 3-45 (Silva, 12.2 ov), 4-86 (Mathews, 27.1 ov), 5-203 (Chandimal, 58.1 ov), 6-274 (de Silva, 77.3 ov), 7-290 (Mendis, 82.1 ov), 8-314 (MDK Perera, 87.4 ov), 9-323 (Sandakan, 88.5 ov), 10-353 (Herath, 93.4 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Mitchell Starc 19 4 84 4
Josh Hazelwood 18.4 3 59 2
Steve O’Keefe 16.2 3 42 1
Nathan Lyon 27 2 108 2
David Warner 1 0 10 0
Adam Voges 1.4 0 3 0
Mitchell Marsh 9 1 33 1
Steve Smith 1 0 1 0
Batsmen Dismissal Runs Balls
Joe Burns b Sandakan 29 57
David Warner  b Herath 1 4
Usman Khawaja LBW b Perera 18 26
Steve Smith Not Out 26 54
Adam Voges Not Out 9 25
Extras (0) TOTAL 83/3 (27 overs)

Fall of wickets: 1-2 (Warner, 1.2 ov), 2-33 (Khawaja, 8.1 ov), 3-63 (Burns, 17.6 ov)

Bowler Overs Maidens Runs Wickets
Nuwan Pradeep 3 0 16 0
Rangana Herath 10 1 35 1
Dilruwan Perera 9 1 19 1
Lakshan Sandakan 5 1 13 1