2020 ஜனவரியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி

91

உலகக் கிண்ண டி-20 கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பினை இந்திய கிரிக்கெட் சபை இன்று (25) வெளியிட்டிருந்ததுடன், போட்டி அட்டவணையையும் அறிவித்தது. 

ஐ.பி.எல் உரிமையாளர்களால் இலங்கை வீரர்ளுக்கு அழுத்தம் – அப்ரிடி குற்றச்சாட்டு

ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்கள் கொடுத்திருந்த அழுத்தம் காரணமாகவே இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் பலர் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை…

இதன்படி, முதலாவது டி-20 போட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி குவாஹாத்தியில் நடைபெறவுள்ளதுடன், 2ஆவது மற்றும் 3ஆவது டி-20 போட்டிகள் முறையே 7ஆம் திகதி இந்தூரிலும், 10ஆம் திகதி புனேவிலும் நடைபெறவுள்ளன

ஏற்கனவே ஜிம்பாப்வே, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி-20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட இருந்தது

எனினும், ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையில் அரசியல் தலையீடு இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த நாட்டு கிரிக்கெட் சபையை தற்காலிகமாக இடைநீக்கம் செய்வதற்கு .சி.சி நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த தடை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பெண்கள் டி-20 உலகக் கிண்ணப் போட்டிக்கான தகுதிச் சுற்று மற்றும் எதிர்வரும் க்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஆண்கள் டி-20 உலகக் கிண்ணப் போட்டிக்கான தகுதி சுற்றுப் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு விளையாட தடை விதிக்கப்பட்டது.

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா நீக்கம்

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா…

இந்தப் பின்னணியில் தான் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஜிம்பாப்வே அணியின் இந்திய சுற்றுப்பயணத்தை இரத்து செய்து அதற்குப் பதிலாக இலங்கை அணியை வரவழைத்து விளையாட இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, குறித்த தொடரில் பங்கேற்பதற்கான விருப்பத்தை இலங்கை கிரிக்கெட் சபையும் வழங்கியுள்ளது

இதன்படி, ஜனவரி 5ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள மூன்று டி-20 போட்டிகளில் இலங்கை அணி விளையாடுகிறது

இறுதியாக 2017ஆம் ஆண்டு இலங்கை அணி இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தது. அதில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1க்கு 0 என இந்திய அணி கைப்பற்றியதுடன், ஒருநாள் தொடரை 2க்கு 1 எனவும், டி-20 தொடரை 3க்கு 0 என இந்திய அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு 16 டி-20 போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், இதில் இந்திய அணி 11 போட்டிகளிலும், இலங்கை அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<