மாத்தறையில் கோலாகலமாக நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் தின விழா

102
Image Courtesy - NOC official facebook

தேசிய ஒலிம்பிக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச ஒலிம்பிக் தினம் பல்வேறு விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் மாத்தறை பொல்ஹேன கடற்கரையில் நேற்று (25) காலை வெகு விமர்சையாக அனுஷ்டிக்கப்பட்டது. 

சர்வதேச ஒலிம்பிக் தினம் ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 23 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இதற்காக சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற அனைத்து உறுப்பு நாடுகளும் சிறப்பு நிகழ்வுகளை குறித்த தினத்தில் அல்லது அதற்கு அண்மித்த தினத்தில் நடாத்தி வருகின்றது.

தெற்காசிய விளையாட்டுக்கான மரதன் ஓட்ட தெரிவுப் போட்டிகள் செப்டம்பரில்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இவ்வருடம்……

இந்த நிலையில், இலங்கை ஒலிம்பிக் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச ஒலிம்பிக் தின நிகழ்வுகள் இம்முறை மாத்தறையில் நடத்தப்பட்டது. 

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிட்னி ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 200 மீற்றரில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும், முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனையுமான சுசந்திகா ஜயசிங்க கலந்துகொண்டார்.

அத்துடன், இந்த நிகழ்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக் போட்டிகளில பங்குகொண்ட முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்களும், மாத்தறையில் உள்ள 18 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 1000 மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர். 

சுற்றாடலை சுத்தமாகப் பேணல் மற்றும் பவளப் பாறைகளைப் பாதுகாத்து மீள்நடுகை செய்தல் என்ற தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச ஒலிம்பிக் தினம் இலங்கையில் அனுஷ்டிக்கப்பட்டது. 

பொல்ஹேன கடற்கரையை அண்மித்ததாக ஆரம்பமாகிய இம்முறை ஒலிம்பிக் தின நிகழ்ச்சிகளின் போது பவளப்பாறையைப் பாதுகாத்து மீள்நடுகைக்கான பெயர்ப் படிகத்தை தென் மாகாண சபையின் செயலாளர் ஆர்.சி.டி சொய்ஸா திரைநீக்கம் செய்துவைத்தார். அத்துடன், பவளப் பாறைகள் தகவல் நிலையத்தை தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் திறந்துவைத்தார். 

இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள், முப்படையினரின் பங்குபற்றலுடன் பொல்ஹேன கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத் திட்டமும் இதன்போது முன்னெடுக்கப்பட்டது. 

இதேநேரம், பொல்ஹேன கடற்கரையில் தேசிய மட்ட வீரர்களின் பங்குபற்றலுடன் கபடி, கரப்பந்தாட்டம், உயிர்காப்பு அலைச்சறுக்கல், பாய்மர படகோட்டம், நீச்சல் உள்ளிட்ட கண்காட்சிப் போட்டிகளும் நடத்தப்பட்டன. 

அதனைத்தொடர்ந்து பொல்ஹேன கடற்கரையிலிருந்து மாத்தறை உயன்வத்த மைதானம் வரையான 4 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட ஒலிம்பிக் தின ஓட்டமும் இடம்பெற்றது. 

இந்த நிலையில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிவிங்கவின் ஒலிம்பிக் பதக்கமும் முதல் தடவையாக மக்களின் பார்வைக்காக மாத்தறை உயன்வத்த மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

உலக மெய்வல்லுனர் சம்மேளனத்திற்கு புதிய பெயரும், குறியீடும்

உலக மெய்வல்லுனர் விளையாட்டின் தாய் வீடாகச……

அத்துடன், பவளப் பாறைகளைப் பாதுகாத்தல் என்ற தொனிப்பொருளை வைத்து பாடசாலை மாணவர்களுக்கான வரைதல் போட்டியொன்று நடத்தப்பட்டதுடன், இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<