விமானப்படை மகளிர் அணிக்கு இலகு வெற்றி : கடற்படை – ராணுவ மகளிர் மோதல் சமநிலையில்

217
Womens Division 01

மகளிர் அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் இரண்டு போட்டிகள் நேற்று நிறைவடைந்திருந்தன. இதில் போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இலங்கை விமானப்படை மகளிர் அணி பொலிஸ் மகளிர் அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் தோற்கடித்ததுடன், இலங்கை கடற்படை மற்றும் ராணுவப்படை மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையடைந்தது.

இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

ஏக்கலவில் உள்ள தமது சொந்த மைதானத்தில் விருந்தினராக வந்திருந்த பொலிஸ் மகளிர் அணியினை எதிர்கொண்ட கடற்படை மகளிர் அணி, போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே ஆட்டத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது.

இதனால், பொலிஸ் மகளிர் அணியினர் எதிரணியின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் போட்டியின் முதல் பாதியின் அரைவாசி வரை திண்டாடினர்.

கொழும்பு கழகத்தை சொந்த மண்ணிலும் வீழ்த்தியது மோஹன் பகன்

முதல் பாதியில் எதிர்பார்த்ததை விட கொழும்பு வீரர்களின் ஆட்டம் மிகவும் அபாரமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது…

எனினும், முதல் பாதியின் மூன்றாம் கட்டத்தில் எதிர் தாக்குதல்களை ஓரளவு சமாளித்து பொலிஸ் அணி விளையாடத் தொடங்கியது. ஆனால் பொலிஸ் அணியின் சமாளிப்பு கடற்படையின் TK அஞ்சலவின் சிறந்த ஆட்டத்தினால் நீடிக்கவில்லை. அஞ்சல பரிமாற்றிய பந்தினை தனது பாதங்களுக்கு அருகே கொண்டு வந்த RS குணசேகர, காவல் துறையின் தடுப்பு அரணிற்குள் பந்தை உதைத்து முதல் கோலைப் பெற்றது.  

போட்டியின் முதல் பாதியில் சில தவறுகளை விமானப்படை மேற்கொண்டிருப்பினும் அதிஷ்டமாக அவற்றிலிருந்து அவ்வணி தப்பித்துக்கொண்டது.

முதல் பாதி: இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் 01 – 00 பொலிஸ் விளையாட்டுக் கழகம்  

போட்டியின் இரண்டாம் பாதியில் சில அதிரடி நடவடிக்கைகளை பொலிஸ் தரப்பு மேற்கொள்ள முயற்சித்திருப்பினும், அவற்றினை லாவகமாக விமானப்படை எதிர்கொண்டது.

இந்நிலையில், போட்டியின் 58ஆவது நிமிடத்தில் PL பிரசாதி இரண்டாவது கோலினை விமானப்படைக்காக போட்டார்.

தொடர்ந்து பந்தினை இலக்கின்றி உதைக்க ஆரம்பித்த பொலிஸ் மகளிர் அணியிடம் இருந்து பந்தினைப் பறித்துக் கொண்ட AN ரத்னாயக்க, போட்டியில் கவனமற்றிருந்த காவல்துறை கோல் காப்பாளருக்கு மேலாக உதைந்து அணிக்கான இறுதி கோலினைப் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து சற்று நேரத்தில் போட்டி முடிவுக்கான விசில் ஊதப்பட பொலிஸ் அணியிடம் இருந்து பெற்றுக்கொண்ட வெற்றியினை விமானப்படை பட்டாளம் கொண்டாட ஆரம்பித்தது.

முழு நேரம்: இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் 03 – 00 பொலிஸ்  விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகி: TK அஞ்சல (விமானப்படை விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம்: RS குணசேகர 19’, PL பிரசாதி 58’,  AN ரத்னாயக்க 78’


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் ராணுவப்படை விளையாட்டுக் கழகம்

வெலிசரவில் அமைந்திருக்கும் கடற்படை மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் சொந்த மைதானத்தில் விளையாடும் உற்சாகத்தில் களமிறங்கிய கடற்படை அணி, முதல் பாதியின் முற்பகுதியில் கிடைத்த சில வாய்ப்புக்கள் காரணமாக போட்டியினை  தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

எனினும், அதன் பின்னர் ஆட்டத்தை தமக்கு சொந்தமாக்கிக் கொண்ட ராணுவப்படை அணி அதனை சரிவர உபயோகித்திருக்கவில்லை.

பல தேசிய வீராங்கனைகளை தம்மிடத்தே உள்ளடக்கியிருந்த கடற்படை அணியினை எதிர்த்தரப்பு சிக்கலுக்கு உள்ளாக்கி, கடற்படை உருவாக்கிய தடை அணைகளினையும் தகர்த்து பந்தினை கோல் போடும் வகையில் கொண்டு சென்றது. எனினும், கடற்படை கோல் காப்பாளர் நிசங்க குமாரி ராணுவ தரப்பின் தாக்குதலை சமாளித்துக்கொண்டார்.

தேசிய வீராங்கனைகளில் ஒருவரான பிரவீன பெரேரா கடற்படை அணிக்காக நுணுக்கமாக செயற்பட்டு கோல்களை பெற முயற்சித்த போதும், அம்முயற்சியின் போது பந்து கோல் காப்பாளரினால் காக்கப்பட்டும் கோல் கம்பங்களுக்கு வெளியாலும் சென்றன.

ராணுவ மகளிர் அணி, சில அபாரமான திறமைகளைக் காட்டியிருப்பினும் அவர்களால் போட்டியில் முதல் பாதியில் கோல் எதனையும் பெற முடியாமல் போனது.

முதல் பாதி: கடற்படை விளையாட்டுக் கழகம் 00 – 00 ராணுவப்படை விளையாட்டுக் கழகம்

போட்டியின் இரண்டாம் பாதியில், இலங்கை அணித் தலைவி எரந்தி லியனகேயின் இடத்தினை ராணுவப்படை அணி மாற்றியதன் காரணமாக போட்டி சூடுபிடிக்க ஆரம்பித்தது.

எரந்தி இலக்கினை நோக்கி தொடர்ந்து பந்தினை உதைக்க ஆரம்பித்தார். இந்நிலையில் டேனியல் லீலான்தி செய்த தவறொன்றின் காரணமாக இராணுவப்படை அணி ப்ரீ கிக் வாய்ப்பொன்றினையும் பெற்றுக்கொண்டது. அந்த வாய்ப்பு மூலம் இலக்கு நோக்கி பந்தினை எரந்தி செலுத்தினார் எனினும் அது கடற்படை கோல் காப்பாளர் குமாரியினால் தடுக்கப்பட்டது.

இதனை அடுத்து, சில இலகு வாய்ப்புக்களை மீண்டும் ராணுவப்படை அணி பெற்றும், அவற்றை சரிவர அவர்களால் உபயோகிக்க முடியாமல் போனது.

தொடர்ந்தும் இரு அணிகள் மூலமும் கோல் பெற முடியாத காரணத்தினால் போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

முழு நேரம்: கடற்படை விளையாட்டுக் கழகம் 00 – 00 ராணுவப்படை விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகி: எரந்தி லியனகே (ராணுவப்படை விளையாட்டுக் கழகம்)