சமரியின் தலைமையில் பாகிஸ்தானுடன் சொந்த மண்ணில் மோதும் இலங்கை மகளிர் அணி

97

.சி.சியின் மகளிர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரினை முன்னிட்டு பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி ஒரு நாள் மற்றும் T-20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  

இதன்படி, பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகளிலும், 3 T-20 போட்டிகளிலும் இலங்கை மகளிர் அணியை சந்திக்கவுள்ளது. இத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில், ஒரு நாள் போட்டித் தொடர் தம்புள்ளையிலும், T-20 தொடர் கொழும்பிலும் நடைபெறவுள்ளது.

WBBL தொடரில் ஒப்பந்தமாகிய முதல் இலங்கை வீராங்கணையாக சாமரி

இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்ட நட்சத்திரமான சாமரி அத்தபத்து அவுஸ்த்திரேலியாவின் உள்ளூர் T-20 …

இந்நிலையில் குறித்த தொடருக்கு இலங்கை அணியின் தலைவியாக அதிரடி ஆட்டக்காரியான சமரி அத்தபத்து மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 28 வயதான இடதுகை துடுப்பாட்ட வீராங்கனையான சமரி, இறுதியாக 2016ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய மகளிர் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய தொடரில் இலங்கை அணியின் தலைவியாக செயற்பட்டார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னிலை வீராங்கனையாக வலம்வந்து கொண்டிருக்கின்ற சமரி அத்தபத்து, இதுவரை 69 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் 12 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 2,053 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதேநேரம் 14 விக்கெட்டுக்களையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில், இலங்கைபாகிஸ்தான் மகளிர் அணிகளின் தலைவிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று(13) கொழும்பில் நடைபெற்றது. இதில் இலங்கை அணிக்கு மீண்டும் தலைவியாக செயற்பட கிடைத்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சமரி அத்தபத்து கருத்து வெளியிடுகையில்,

இலங்கை கிரிக்கெட் நிறுவனமும், தெரிவுக்குழுவும் என்மீது நம்பிக்கை வைத்து மீண்டும் அணித் தலைமைத்துவத்தை என்னிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த காலங்களில் நாம் சிறப்பாக விளையாடியிருந்தோம். எனவே, மீண்டும் அணித் தலைவியாக அணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளேன்.  

Photos: Media Briefing on the Sri Lanka vs Pakistan Women’s Cricket Bilateral Series

Photos of Media Briefing on the Sri Lanka vs Pakistan Women’s Cricket Bilateral Series.

இன்னும் 4 வருடங்களில் மகளிருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் இடம்பெறவுள்ளது. இறுதி 4 அணிகளுக்குள் தெரிவாவதற்கு புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெறவேண்டும். எனவே கடந்த காலங்களில் எம்மால் அந்த இலக்கை அடைய முடியாது போனது. அதிலும் உடனடியாக எமக்கு அணியில் மிகப் பெரிய மாற்றங்களை மேற்கொள்ள முடியாது. உலகக் கிண்ணம் வரையிலான காலப்பகுதியில் நீண்ட கால மற்றும் குறுகிய கால இலக்குடன் அணியை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

எனவே, பாகிஸ்தான் மகளிர் அணியுடனான இப்போட்டித் தொடரில் சிரேஷ்ட வீராங்கனைகளைப் போல இளம் வீராங்கனைகளுடன் இணைந்து எமது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.  

இந்நிலையில் பாகிஸ்தான் மகளிர் அணித் தலைவி பிஸ்மாஹ் மாரூப் கருத்து வெளியிடுகையில், .சி.சி சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2ஆவது கட்டப் போட்டியில் விளையாடுவதற்கு இங்கு வந்துள்ளோம். இங்குள்ள காலநிலை எமக்கு பரீட்சார்த்தமானவையாக உள்ளதால் இப்போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடி வெற்றிபெறுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இப்போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு வாரம் உள்ளதால், சிறந்த முறையில் பயிற்சிகளை முன்னெடுத்து போட்டிகளில் களமிறங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அண்மையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மகளிருக்கான விசேட கிரிக்கெட் பயிற்சிப் பட்டறை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இலங்கை மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹேமன்த தேவப்பிரிய பதில் கொடுக்கயைில், ”இந்த பயிற்சிப் பட்டறையின் மூலம் ஒருசில திறமையான இளம் வீராங்கனைகளை நாம் இனங்கண்டு கொண்டோம். அவர்கள் தற்போது மகளிருக்கான வளர்ந்து வரும் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். அதேபோல பாகிஸ்தான் மகளிர் அணியுடனான போட்டித் தொடருக்கான இலங்கை அணியில் 17 வயதுடைய வீராங்கனையொருவருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளோம். எனவே எதிர்வரும் காலங்களில் திறமையான இளம் வீராங்கனைகளுக்கும் அணியில் வாய்ப்புகள் வழங்கப்படும்” என்றார்.

முன்னதாக மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கெதிராக கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற போட்டித் தொடரில் இறுதியாக விளையாடியிருந்த இலங்கை அணிக்கு, இவ்வருடத்தில் பங்கேற்கும் முதல் போட்டித் தொடராக இது அமையவுள்ளது. இத்தொடரில் வெற்றிபெறுவதன்மூலம் .சி.சியினால் மகளிருக்காக நடத்தப்படுகின்ற 2017-2023 சம்பியன்ஷிப் போட்டிகளில் புள்ளிகள் பட்டியலில் முன்னிலை பெறுவதற்கான வாய்ப்பும் இலங்கைக்கு கிட்டவுள்ளது.

இலங்கை வீரர்களுக்கு பார்சிலோனா கழகம் பயன்படுத்திய மென்பொருள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் திறமையை மேலும் அதிகரிக்கும் நோக்கிலும், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு

ஏற்கனவே மகளிருக்கான தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகளும் 2017 முதல் 2021 வரையான காலப்பகுதியில் ஏனைய அணிகளுடனும் 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட வேண்டும். இதன்படி, இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரேயொரு வெற்றியைப் பதிவுசெய்து 6ஆவது இடத்திலும், இலங்கை அணி 8ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டி தொடர்பான புகைப்படங்கள், போட்டி அறிக்கைகள் மற்றும் புள்ளி விபரங்களிற்கு தொடர்ந்தும் ThePapare.com உடன் இணைந்திருங்கள்.

போட்டி அட்டவணை

திகதிபோட்டிஇடம்
மார்ச் – 20  முதலாவது ஒரு நாள் போட்டி தம்புள்ளை
மார்ச் – 22 2ஆவது ஒரு நாள் போட்டிதம்புள்ளை
மார்ச் – 24 3ஆவது ஒரு நாள் போட்டிதம்புள்ளை
மார்ச் – 28 முதலாவது T-20SSC மைதானம்
மார்ச் – 30 இரண்டாவது T-20SSC மைதானம்
மார்ச் – 31 மூன்றாவது T-20

SSC மைதானம்