ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் மழை காரணமாக இடைநிறுத்தப்படும் பொழுது இலங்கை அணி 411 ஓட்டங்கள் முன்னிலை வகித்து வலுவான நிலையில் உள்ளது.

போட்டியின் நான்காவது நாளான இன்று துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை அணியினர் ஆட்டம் இடைநிறுத்தப்படும் பொழுது 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 247 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அணியின் சார்பாக சிறப்பாக துடுப்பாடிய திமுத் கருணாரத்ன சதம் கடந்தார். அவர் 11 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, கிறிஸ்ஸின் பந்து வீச்சில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய உபுல் தரங்க முதல் இன்னிங்சில் சதம் பெற்ற போதும், இந்த இன்னிங்சில் 1 ஓட்டத்தை மாத்திரம் பெற்ற நிலையில் ஆட்டமிழந்து சென்றார்.

எனினும் மறுமுனையில் சிறந்த முறையில் நிதானமாக ஆடிய தனஞ்சய டி சில்வா 64(82) ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் துடுபாடி வருகின்றார்.

போட்டியின்சுருக்கம்

இலங்கை அணி (முதல் இன்னிங்ஸ்: 537(155) – உபுல் தரங்க 110*(208), குசல் பெரேரா 110(121), கெளஷல் சில்வா 94(194), திமுத் கருணாரத்ன 56(110), அசேல குனரத்ன 54(102) கிரேம் கிரமர் 142/4(42), கிரிஸ் 96/2(31), மல்கோம் வோல்லர் 25/1(6)

ஜிம்பாப்வே அணி (முதல் இன்னிங்ஸ்: 291/7(82) – பீடர் மோர் 79(84), கிரேம் கிரமர் 62(128), டொனால்ட் 46(92), மவோயோ 45(93), சுரங்க லக்மால் 69/3(21.5), ரங்கன ஹேரத் 97/3(37), டில்ருவன் பெரேரா 66/2(18)

இலங்கை அணி (இரண்டாவது இன்னிங்ஸ்: 247/6 (61.5) – திமுத் கருணாரத்ன 110(173), தனஞ்சய டி சில்வா 64*(82), கார்ல் மும்பா 50/4(11.5)

இலங்கை அணி 275 ஓட்டங்களால் முன்னிலையில்

ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் மதிய போசனத்துக்காக ஆட்டம் நிறுத்தப்படும்பொழுது இலங்கை அணி 275 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது.

SriLanka vs Zimbabweஇரண்டாம் நாள் நிறைவின் பொழுது, 139 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து இக்காட்டான நிலையிலிருந்த ஜிம்பாப்வே அணியின் நடுத்தர வீரர்கள் நேற்றைய நாள் ஆட்டத்தில் மிகவும் சிறப்பாக துடுப்பாடி பல்லோவ் ஒன்னை தவிர்த்துக் கொண்டனர். எனினும், ஜிம்பாப்வே அணி தமது முதல் இன்னிங்சிற்காக 107.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 373 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

எனவே, 169 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற இலங்கை அணி தொடர்ந்து களமிறங்கியது. அவ்வணி நேற்றைய நாள் நிறைவின்போது, எந்தவித விக்கெட் இழப்புமின்றி 5 ஓட்டங்களை பெற்றிருந்தது.

தொடர்ந்து நான்காவது நாளான இன்று துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை அணியினர் மதிய போசன இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்பிற்கு 111 ஓட்டங்களை பெற்று 275 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் துடுப்பாடி வருகிறார்.

போட்டியின்சுருக்கம்

இலங்கை அணி (முதல் இன்னிங்ஸ்) : 537(155) – உபுல் தரங்க 110*(208), குசல் பெரேரா 110(121), கெளஷல் சில்வா 94(194), திமுத் கருணாரத்ன 56(110), அசேல குனரத்ன 54(102) கிரேம் கிரமர் 142/4(42), கிரிஸ் 96/2(31), மல்கோம் வோல்லர் 25/1(6)

ஜிம்பாப்வே அணி (முதல் இன்னிங்ஸ்) : 291/7(82) – பீடர் மோர் 79(84), கிரேம் கிரமர் 62(128), டொனால்ட் 46(92), மவோயோ 45(93), சுரங்க லக்மால் 69/3(21.5), ரங்கன ஹேரத் 97/3(37) , டில்ருவன் பெரேரா 66/2(18)

இலங்கை அணி (இரண்டாவது இன்னிங்ஸ்: 111/3 (32) – திமுத் கருணாரத்ன 65*(17) கார்ல் மும்பா 28/2